அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட உதவி கல்வி பணிப்பாளரால் உடைக்கப்பட்ட கோயில் தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு

09.02.2014 அன்று பிற்பகல் 05.30 மணியளவிலேயே மன்னார் சிறுநாவற்குள பிள்ளையார் சிலையானது உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி ஆரோக்கியநாதன் ஆன்மேரி (ரஜனி) என்பவராலும் அவருடைய மகனாலும் உடைக்கப்பட்டது இக்கோயிலானது மிகவும் பழமைவாய்ந்த கோயில் என்பது குறிப்பிடத்தக்கது


மன்னார் சிறுநாவற்குளம் பிள்ளையார் கோயில் உடைப்பு சம்பவமானது 09.02.2014 சிறுநாவற்குளம் பகுதிககுச் சென்ற குறித்த  உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி ஆரோக்கியநாதன் ஆன்மேரியும், அவருடைய மகனும் தங்களுடைய காணியினுள் குறித்த பிள்ளையார் சிலை உள்ளதாக கூறி அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டதோடு அச்சிலையினையும், அவ்விடத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சிறீலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு  10.02.2014 அன்று மன்னார் மாவட்ட நீதிவான் நிதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்டிருந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபர்கள் இருவரையும் மூன்று(03) நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் 12.02.2014 அன்று சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.

26.05.2014 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் தனது காணிக்குள் கோயில் உள்ள என கூறியபோது நீதவானால் எதிர்வரும் தவணையில் காணிக்கான அனுமதிப் பத்திரத்தினை பொலிஸாரிடம் ஒப்படக்குமாறு கட்டளை பிறப்பித்தார். இக்கோயிலானது மிகவும் பழமைவாய்ந்த கோயில் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது 1970ம் ஆண்டிலிருந்தே பராமரிக்கப்பட்டு பூசை வழிபாடுகள் நடாத்தப்பட்ட ஓன்றாகும்.

அதன் பின்னர் இவ்வழக்கானது 09.06.2014 அன்று மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணிக்கான அனுமதிப் பத்திரம் சமர்ப்பிக்கபட்டது. இவ் அனுமதிப் பத்திரம் குறித்து சந்தேகம் இருப்பதாக எம் தரப்பு சட்டத்தரணி கூறிய 
போது இவ்வழக்கானது மீண்டும் 21.07.2014வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள சட்டத்தரணி ராஜ குலேந்திராவும், மன்னார் சட்டத்தரணி வினோதரனும் அஜராகி இருந்தார்

இவ்வுடைப்பு சம்பவமானது அக்கிராமமக்கள் மத்தியில் பெரும் மனப்பாதிப்பை ஏற்படுத்தியுள்தோடு அம்மக்களின் வாழிபாடானது சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.



சிறுநாவற்குளம் விநாயகர் ஆலய பரிபாலன சபை

சிறுநாவற்குளம்,
திருக்கேதீஸ்வரம்,
மன்னார்.



மன்னார் மாவட்ட உதவி கல்வி பணிப்பாளரால் உடைக்கப்பட்ட கோயில் தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு Reviewed by NEWMANNAR on June 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.