அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனை அரசியல் பிரச்சனை -இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன்

இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனை அரசியல் பிரச்சனை. அதனை இரு நாட்டின் அரசாங்கமும் இணைந்து பேசி தான் தீர்வினை பெற வேண்டும் என இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 19ஆவது சர்வதேச மீனவர் தினத்தில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு இலங்கை இந்திய அரசாங்கம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதனை நாம் அறிவோம். 
இது ஒரு தேசிய பிரச்சனை.
 
இரு நாட்டு அரசாங்கமும் இந்த பிரச்சனை தொடர்பில் தொடர்ந்து பேசி வருகின்றது.  தேசிய அரசாங்கம் இந்த பிரச்சனை தொடர்பில் பேசி கொள்வதனால் இப்போது இல்லாவிடினும் எப்போதாவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அந்த நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை எமக்கு நல்ல எதிர்காலத்தை தரும்.
 
மீனுக்கு ஒரு எல்லை இல்லை. அது எல்லை தெரிந்தால் அது மற்றவர்களின் எல்லைக்கு போகாது. தரையிலே எல்லை தெரியும் கடலிலே எவ்வாறு எல்லை தெரியும் என்பது எனக்கு தெரியாது. தண்ணீருக்குள் எவ்வாறு எல்லை தெரியும் என்பது மீனவ சகோதர்களுக்கு தான் தெரியும்.
 
இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனை அரசியல் பிரச்சனை என்பதால் மேலதிகமாக பலதை பேச முடியாது.என தெரிவித்தார்.
இலங்கை இந்தியா மீனவர்களின் பிரச்சனை அரசியல் பிரச்சனை -இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் Reviewed by NEWMANNAR on November 23, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.