அண்மைய செய்திகள்

recent
-

புகைப்பட சர்ச்சையில் மகிந்த!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தாய்லாந்து பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றி லிருந்து பாரிய உண்மை வெளியாகியுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தாய்லாந்து நோக்கி பயணித்த குழுவுடன் கொலை மற்றும் ஆயுத கொள்வனவு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தேடப்படும் உதயங்க வீரசிங்க இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று கிடைத் துள்ளது.

இதிலிருந்து குறித்த நபர் தொடர்பில் மகிந்த தொடர்புபட்டிருப்பதாக நலின் பண்டார சுட்டிக்காட்டினார்.
மேலும் குறித்த நபர் இருக்கும் இடம், அவருடன் தொடர்புடையவர்கள் பற்றியும் மகிந்த தரப்பிற்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்களை விசாரணைகளுக்கு உட்படுத்துவதன் மூலம் சந்தேக நபரை கைது செய்ய முடியுமெனவும் அரசாங்கத்தை கேட்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தன்னுடன் இருந்த நபரொருவரின் மரணத்துடன் தொடர்புடையவராக தேடப்படும் உதயங்க வீரசிங்க, மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு டன் மறைந்து இருப்பது இந்த புகைப்படத்தில் புலனாவதாக நலின் பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இலங்கை விமான சேவையில் கடந்த அரசாங்கம் 46 127 கோடி ரூபாய் பணத்தினை கொள்ளையிட்டுள்ளதாகவும் மேலும் 15 பில்லியன் டொலர் பெறுமதியான விமானம் ஒன்று ஜனாதிபதி பாவனைக்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.
மேலும் குத்தகை அடிப்படையில் 4 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு 11.12 மில்லியன் டொலர் மாதம் செலுத்த வேண்டிய நிலை காணப்படுவதாகவும் விமானத்தை கனவிலும் கண்டிராத சாதாரண மக்கள் இதற்காக கடன் பட்டுள்ளதாகவும் நலின் பண்டார மேலும் தெரிவித்தார்.
புகைப்பட சர்ச்சையில் மகிந்த! Reviewed by NEWMANNAR on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.