அண்மைய செய்திகள்

recent
-

தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் கொழும்பு!


நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலை அன்றாட சிறு விடயங்களை கூட பாதித்துள்ளது.​

இதனடிப்படையில், கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தினமும் குப்பைகள் சேகரிக்கப்படுவது வழக்கமாக இருந்த போதிலும் கடந்த ஒரிரு நாட்களாக இந்த குப்பைகள் சேகரிக்கும் செயற்பாடு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக வீடுகள், காரியாலயங்கள், மற்றும் கடைகள், போன்றவற்றிற்கு முன்னாள் குப்பைகள் குவிந்து கிடக்கின்ற காட்சிகள் எமது லங்காசிறி கமராக்களில் பதிவாகின.

மழை காரணமாகவும், குப்பைகளை அகற்றும் ஊழியர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டதன் காரணமாகவும், வழமையாக இடம்பெறும் இந்த பணி நடைபெறாதுள்ளது.

இதனால் குப்பைகள் தேங்கியுள்ள இடங்களில் நுளம்புகள், ஈக்கள் பரவுகின்ற அபாயநிலை காணப்படுகின்றது.

இதனால் கொழும்பு நகரில் தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுகின்றதாக கசுகாதார தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

இந்த தொற்று நோய்களிலிருந்து மக்களை பாதுகாப்பாக இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொற்று நோய்கள் பரவும் அபாயத்தில் கொழும்பு! Reviewed by Author on May 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.