அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு-Photos

பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டு தனியார் போக்குரத்துச் சேவைகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை(27) முதல் வடமாகாண ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.

வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குறித்த பணிப்பகிஸ்கரிப்பு இன்று திங்கட்கிழமை காலை முதல் மன்னாரிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் சகல தனியார் பேரூந்துகளும் நிறுத்தப்பட்ட போதிலும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான சேவைகளை மேற்கொள்ளாது பணியாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பாடசாலை மாணவர்கள்,பயணிகள்,உற்பட அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.
குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் அதிகலவில் தனியார் போக்குவரத்துக்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றைய பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக அப்பகுதி மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மன்னார் போக்குவரத்துச் சங்கத்தின் சாரதிகள்,நடத்துனர்கள் மற்றும் பணியாளர்கள் பதாதைகளை ஏந்தியவாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மக்கள் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையினூடாக தமது பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


தனியார் பேரூந்திற்கு 60 வீதமும்,இலங்கை அரச போக்குவரத்துச் சேவை பேரூந்திற்கு 40 வீதமும் என்ற விகிதாசாரத்தில் கடந்த 3 வருட கால முயற்சியின் பின் இணைந்த நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவை இதற்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் அத்துமீறிய சேவையினை மேற்கொண்டு வருகின்றது.

இவ்விடையம் தொடர்பாக மத்திய அரசுடனும்,மாகாண அரசுடனும் சந்திப்புக்களை ஏற்படுத்தியும் எதுவித பலனும் இதுவரை எமக்கு எட்டப்படவில்லை.இந்த நிலையிலே தாம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று திங்கட்கிழமை முதல் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருவதாக மன்னார் தனியார் போக்குவரத்துச சங்கத்தின் தலைவர் கே.முருகேஸ் தெரிவித்தார்.

தனியார் பேரூந்துகளும்,அரச பேரூந்துகளும் ஒரே தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு போக்குவரத்துச் சேவைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும் தமது போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் தனியார் போக்குவரத்துச சங்கத்தின் தலைவர் கே.முருகேஸ் மேலும் தெரிவித்தார்.



-மன்னார் நிருபர்-

(27-06-2016)








மன்னாரில் தனியார் போக்குவரத்துச் சேவைகள் பணிப்பகிஸ்கரிப்பு-Photos Reviewed by NEWMANNAR on June 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.