அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச கலை இலக்கியப்பெரு விழா-29-12-2016

 இன்று 29-12-2016  மாலை 2-30 மணியளவில் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி நாவலர் மண்டபத்தில் ஔவையார் அரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
நிகழ்விற்கு   கே.எஸ்.வசந்தகுமார் அவர்கள் தலைமை தாங்க
பிரதம விருந்தினராக
எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்களுடன்
சிறப்பு விருந்தினர்களாக.....
திரு.வி.பபாகரன் உதவி மாவட்ட செயலாளர் மன்னார்
திரு.த.தனேஸ்வரன் அதிபர் மன்.சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
திரு.எக்ஸ்.எல்.றெனால்டோ  செயலாளர் நகரசபை மன்னார்
வைத்திய கலாநிதி திரு.மு.கதிர்காமநாதன்
இவர்களுடன் வைத்திய கலாநிதிகள் ஓய்வு பெற்ற பொறியியலாளர் வங்கி முகாமையாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் அரச அதிகாரிகள் அலுவலர்கள் மாணவ மாணவிகள் கலைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

 விருந்தினர்கள் சந்தன மாலை அணிவித்து வரவேற்று மங்கல விளக்கேற்றல் நிகழ்வினை தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து மாணவிகளால் இசைக்கப்பட நிகழ்வு மங்கலகரமாக ஆரம்பமானது.
வரவேற்புரையினை திருமதி பு.மணிசேகரம் அவர்கள் வழங்க  அரங்க திறப்புரையினை  நாவலாசிரியர் எஸ்.ஏ.உதயன்  வழங்க வரவேற்பு நடனம் மயில் நடனம் பரத நடனம் சிறப்பு கவியரங்கம்  தமிழ்தென்றல் அலி அக்பர் தலைமையில்  மன்னார் மண்ணின் சிறந்த ஏழு கவிஞர்கள் கலந்து சிறப்பிக்க

நிகழ்வின் சிறப்பம்சமாக பிரதேச இலக்கியப்பேரவையால் "மன்னல்"  நூல் வெளியீடு  பிரதமவிருந்தினரான மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசப்பிரிய அவர்களுடன் பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் இணைந்து வெளியிட்டு வைத்தனர். சிறப்பு பிரதிகளை கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.
நூல் வெளியீட்டுரையினை மஹா.தர்மகுமாரகுருக்கள் வழங்க
நூல் நயவுரையினை ஆசிரியர் டிலாணி வழங்கினார்.

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான சேவையாற்றிய கலாசார உத்தியோகத்தர் திருமதி பு.மணிசேகரம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு விருதும்  வழங்கியதோடு எம்.வை.எஸ் தேசப்பிரிய பிரதம விருந்தினருக்கும்  கவியரங்கத்திற்கு தலைமை தாங்கிய தமிழ்தென்றல் அலி அக்பர் அவர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு கலாச்சாரப்பேரவையால் நடாத்தப்பட்ட இலக்கியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கி  வைக்கப்பட்டது.

நன்றியுரையினை கலாசார உத்தியோகத்தர்கள் அபிராமி மற்றும் சுகிர்தா வழங்க நிகழ்ச்சி தொகுப்பினை  கிராம சேவகர் ராதா பெர்ணான்டோ அவர்கள் வழங்கினார் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தொகுப்பு-வை-கஜேந்திரன்-





























மன்னார் பிரதேச கலை இலக்கியப்பெரு விழா-29-12-2016 Reviewed by Author on December 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.