அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு-(படம்)

மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை 7 மணியளவில் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர தலைமையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

பொலிஸாரின் அணிவகுப்பு நிகழ்வின் போது குறித்த அணிவகுப்பு மரியாதையினை வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் சீருடைகள் உற்பட பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் போது மன்னார் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,உதவி பொலிஸ் அத்தியட்சகர் உற்பட மன்னாரில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.


-மன்னார் நிருபர்-
(26-1-2017)











மன்னார் தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு-(படம்) Reviewed by NEWMANNAR on January 26, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.