அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் டெங்கு நுளம்பு சோதனை- பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்கமன்னார் நீதிமன்றம் உத்தரவு.


டெங்கு நுளம்பு சோதனையில் ஈடுபட்ட பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் கடமையினை செய்ய விடாது இடையூரை ஏற்படுத்தி அவர்களை அச்சுறுத்திய வீட்டு உரிமையாளர் ஒருவரான பெண் ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றம் நேற்று புதன் கிழமை(11) உத்தரவிட்டுள்ளது.

-மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தலைமையிலான பொது சுகாதார பரிசோதர்கள் இணைந்து டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் வகையில் விசேட வேளைத்திட்டங்களை மேற்கொண்டு வந்ததோடு,மக்களின் குடியிறுப்பு பகுதிகளிலும் டெங்கு சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் டெங்கு சோதனையில் ஈடுபட்ட குறித்த குழுவினர் குறித்த கிராமத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் 3 பேரூக்கு எதிராகவும்,ஆலய பங்குச்ச சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகிய ஐவருக்கு எதிராகவும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.

-இதன் போது குறித்த நபர்கள் தமது வீடுகள்,காணி போன்றவற்றில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது இடங்களை வைத்திருந்ததாகவே கூறி மன்னார் நீதிமனத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

இதன் போது நீதிமன்ற அழைப்பானை கட்டளையை தாழ்வு பாட்டு கிராமத்தில் உள்ள அழைக்கப்பட்டவர்களுக்கு மன்னார் பொது சுகாதார பரிசோதகர்களினால் வழங்கப்பட்டது.

-இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவரான குறித்த பெண் நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்துள்ளதோடு, பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் கடமையினை செய்ய விடாது இடையூரை ஏற்படுத்தி அவர்களை அச்சுரூத்தியுள்ளார்.

-இந்த நிலையில் நேற்று (11) புதன் கிழமை குறித்த 5 பேரூக்கும் எதிரான வழக்குகள் மன்னார் நீதிமன்றத்தில்  நீதவான் முன்னிலையில் விசாரனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

-இதன் போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் கடமையினை செய்யவிடாது இடையூரை ஏற்படுத்தி அவர்களை அச்சுரூத்தியமை,நீதிமன்றத்தில் அவமரியாதையுடன் நடந்து கொண்டமை குறித்து வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் தொடர்பில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட நீதவான் சுகாதார பரிசோதகர்களுக்கு அவர்களின் கடமையினை செய்யவிடாது இடையூரை ஏற்படுத்தி அவர்களை அச்சுரூத்திய குறித்த பெண்ணை எதிர்வரும் 25 ஆம் திகதி விரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

மேலும் இரண்டு வீடுகளின் உரிமையாளர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டமையினால் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையினை செலுத்த உத்தரவிட்டார்.

ஆலய பங்குச்ச சபை மற்றும் மன்னார் பிரதேச சபை ஆகியவை தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளாததன் காரணத்தினால் குறித்த வழங்கு விசாரனையை எதிர்வரும் யூன் மாதம் 16 ஆம் திகதி வரை மன்னார் நீதவான் ஒத்தி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 -மன்னார் நிருபர்-
(12-1-2017)

மன்னாரில் டெங்கு நுளம்பு சோதனை- பெண் ஒருவரை விளக்கமறியலில் வைக்கமன்னார் நீதிமன்றம் உத்தரவு. Reviewed by Author on January 12, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.