அண்மைய செய்திகள்

recent
-

கல்விப்பணிமனைகள் கல்வியின் தாய் வீடு - இ. சாள்ஸ் நிர்மலநாதன்

நேற்று 05.01.2017 அன்று மன்னார் கல்வி வலயத்திற்குட்பட்ட நானாட்டான் கோட்டக்கல்விப் பணிமனையின் புதிய

கட்டிட திறப்பு விழாவின் போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டுரூபவ் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில்

கல்விப்பணிமனைகள் கல்வியின் தாய் வீடு என்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள்

குறிப்பிட்டார். மேலும் குறிப்பிடுகையில் கல்வியினை ஒவ்வொருவரும் உயர்வாக கற்று ஒழுகுதல் இன்றைய எமது

சமுதாயத்திற்கு அடிப்படைத் தேவையாகவுள்ளது. அதன் பொருட்டு மன்னார் கல்வி வலயமும் அதற்குட்பட்ட கோட்டக்கல்விப்

பணிமனைகளும் தமது கடமைகளை சிறப்பாக செய்துவருவது பாராட்டத்தக்கது. அது போன்று பாடசாலை அதிபர் ஆசிரியர்களும்

மென்மேலும் தமது பணிகளை சிறப்பாக ஆற்றி மாணவர்களின் கல்வியில் உயர்வடைவதற்கு வழிகோல வேண்டும் என்றும்

கல்விப் பணிமனைகள் யாவும் ஒவ்வொரு தாய் வீடுகளாகவும் மாற்றங்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் இந் நிகழ்வானது கோட்டக்கல்விப்பணிப்பாளர் தி. ஜெகநாதன் தலைமையில் இந் நிகழ்வு காலை 11.00 மணிக்கு

நடைபெற்றது. இந் நிகழ்வில் மன்னார் கல்வி வலயப்பணிப்பாளர் திருமதி சுகந்தி மற்றும் பாடசாலை அதிபர்கள்

மற்றும் கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கல்விப்பணிமனைகள் கல்வியின் தாய் வீடு - இ. சாள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on January 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.