அண்மைய செய்திகள்

recent
-

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தமிழன்!


2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார்.

அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.

இதன்பிறகு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.

டி.சி.எம். நிறுவனத்தில் மிகக் கடுமையாக வேலை பார்த்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய அளவில் புகழ்பெற்றார்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சொந்தமாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் டி.சி.எம். நிறுவனத்தை விட்டு விலகினார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஐந்து பேரை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

1983இல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வகையில் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்கத் தொடங்கினார். ‘பிசிபீ’ (சுறுசுறுப்பான தேனி) என்று தனது கம்ப்யூட்டருக்குப் பெயர் வைத்தார். கம்ப்யூட்டர் விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கவே, 1987-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை நூறு கோடி ரூபாயைத் தொட்டது.

1991இல் நரசிம்மராவ் பிரதமரானபிறகு தாராளமயமாக்கல் கொள்கை வரவே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படத் தொடங்கும் வாய்ப்பு ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு கிடைத்தது.

அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியால் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டதோடு, நாற்பது துணை நிறுவனங்கள் கொண்ட அமைப்பாகவும் மாறியது.

இந்த நாற்பது நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார் சிவ நாடார்.

2004இல் ஐந்து நிறுவனங்களாக இருந்த நிறுவனத்தை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் என இரு பெரும் நிறுவனங்களாக மாற்றினார்.

இன்றைக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.
மலேசிய வாழ் தமிழரும், பெரும் செல்வந்தருமான ஆனந்த கிருஷ்ணன், போர்ப்ஸ் செல்வந்தர்கள் பட்டியலில் மீண்டும் இடம் பிடித்திருக்கிறார்.2,043 பெரும் கோடீஸ்வர்களில் 219 வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்தின் மதிப்பு $6.5 பில்லியன்கள்.

ஆனந்த கிருஷ்ணனின் தகவல் தொலைத்தொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் எண்ணெய் வயல் சேவைகளை வழங்கும் பூமி அர்மாடாவின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, மலேசியாவின் இரண்டாவது செல்வந்தர் என்ற இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துவிட்டார்.

16.2% மேக்சிஸ் பங்கு விற்பனையில் குழப்பம் இருப்பதாக செளதி தொலைதொடர்பு நிறுவனம் கூறுகிறது. ஆனந்த கிருஷ்ணன், ஹாவர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ படித்தவர். தாய்லாந்தில் வசித்து வரும் அவரது ஒரே மகன் புத்த மதத் துறவியாக மாறிவிட்டார்.

இதேவேளையில், 27.6பில்லியன் டாலர்களாக இருந்த சொத்துக்கள் 72.8பில்லியன் டாலர்களாக அதிகரித்து அமேசான் நிறுவனர் மூன்றாம் இடத்தில் உள்ளார்.முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்ப் ஐந்தாவது இடத்திலும், ஆரக்கல் துணை நிறுவனர் லார்ரி எல்லிசன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்

இந்த ஆண்டு பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை சர்வதேச அளவில் 2,043 ஆக உயர்ந்துள்ளது.இந்த பட்டியல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த அளவு எண்ணிக்கை உயர்ந்துள்ளது 31 வருடங்களில் இதுவே முதல்முறையாகும்.

இந்த பட்டியலில் அமெரிக்க பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 565 ஆக உள்ளது இதற்கு காரணம் டிரம்ப் நவம்பர் மாதம் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

319 எண்ணிக்கையில் சீனா இரண்டாம் இடத்தையும், ஜெர்மனி 114 எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்ற பெண்களின் எண்ணிக்கை 202லிருந்து 227 ஆக உயர்ந்துள்ளது, மொத்த பெண்களின் சொத்து மதிப்பு 852.8பில்லியன் டாலர்களாக உள்ளது.

இரண்டாம் வருடமாக லாரியல் அழகு சாதன நிறுவனத்தின் வாரிசு 39.5பில்லியன டாலர்கள் சொத்து மதிப்புடன்,

•கடந்த 23 வருடங்களில் 18வது முறையாக பில்கேட்ஸ் இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கிறார்.

•இந்த வருடம், 195 பேர் புதியதாக இடம் பிடித்துள்ளனர் குறிப்பாக சீன பெருநிலப்பரப்பிலிருந்து அதிகம் பேர் இடம் பிடித்துள்ளனர்.

•20 வயதாகும் அலெக்சாண்டரா ஆண்டர்சன் இந்த பட்டியலில் இடம் பிடித்த இளம் வயது நபர் ஆவார்.

•சுய முயற்சியில், பணக்காரராக, "ஸ்டிரைப்" என்ற இணைய வழி பணம் செலுத்தும் வலைத்தளத்தை நிறுவிய 26 வயது ஜான் கோலிசன் இடம் பெற்றுள்ளார்.

•இந்த பட்டியலில், சுய முயற்சியில் பணக்காரர்களில் புதிதாக வந்த பெண் தாய்-லி ஆவார். குழந்தையாக இருக்கும் போது அமெரிக்காவில் குடிபெயர்ந்து தற்போது எஸ் எஸ் ஐ என்னும் நிறுவனத்தை அவர் நடத்திக் கொண்டிருக்கிறார்.

- Vikatan-
உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஒரு தமிழன்! Reviewed by Author on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.