அண்மைய செய்திகள்

recent
-

700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரின் முகம் மீண்டும் வடிவமைப்பு : ஆராய்ச்சியாளர்கள் சாதனை


பிரித்தானியாவில் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மரணமடைந்தவரின் முகத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள Cambridge நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை உள்ளது.

இதன் பின்புறம் உள்ள கல்லறையில் 13ஆம் நூற்றாண்டில், அதாவது 700 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட ஒருவரின் எலும்புகூட்டை விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுத்தனர்.

அதற்கு அவர்கள் Context 958 என பெயரிட்டுள்ளனர். Context 958ன் எலும்பை வைத்து முக புனரமைப்பு தொழில்நுட்ப உதவியுடன் ஆராய்ச்சியாளர்கள் முதத்தை வடிவமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து Cambridge பல்கலைகழக பேராசிரியர் John Robb கூறுகையில், Context 958 நபரின் முகத்தை வெற்றிகரமாக வடிவமைத்துள்ளோம்.

அவர் தனது 40 வயதில் மரணமடைந்துள்ளார்.

அவர் எலும்புகள் வலுவாக உள்ளன. அவர் நன்றாக உழைப்பவராக இருக்க வேண்டும். உடல் நிலை கோளாறு காரணமாக Context 958 இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தங்கள் ஆராய்ச்சி தொடரும் எனவும் John தெரிவித்துள்ளார்.

700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவரின் முகம் மீண்டும் வடிவமைப்பு : ஆராய்ச்சியாளர்கள் சாதனை Reviewed by Author on March 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.