அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் இப்பகுதியில் மன்னாரின் பெருமை தேசிய விருது பெற்ற M.A.M.சன்ஹர்......

 கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக நம்மோடு பேசவருகின்றார். சிற்பி கைப்பணி ஆசிரியர் கைப்பணியில் தேசிய விருது பெற்ற எம்.ஏ.எம்.சன்ஹர் அவர்களின் அகத்தில் இருந்து.
தங்களை பற்றி-நான் மூர்வீதி உப்புக்குளத்தில் எனது மனைவி சஹாப்தீன் பாத்திமா பாயிஸா குடும்பத்தினருடன் வசித்து வருகின்றேன் மன்.அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவன்.

முதல் முறையே தேசிய விருது கிடைக்கும் போது மனநிலை எப்படி இருந்தது….
தேசிய விருது பெறவேண்டும் என்று ஆசை இருந்தாலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் எதிர்பாராமல் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சியே அதை வார்த்தைகளால் சொல்லி விடமுடியாது. இந்த தேசிய விருதின் மூலம் இன்னும் என்னை முழுமையாக போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறனும் என்ற புதிய ஆர்வமும் ஆவலும் ஏற்பட்டுள்ளது.

சிற்பி கொண்டு கைப்பணி செய்யும் எண்ணம் எவ்வாறு உருவானது….
நான் ஆரம்பம் முதலே காதலர் தினம் பிறந்த நாள் தந்தையர் தினம் ஆசிரியர் தினம் போன்ற விசேட தினங்களுக்கு பரிசாக கொடுக்கின்ற நினைவுச்சின்னங்களை செய்து கடைகளுக்கும் ஓடர்க்கும் கொடுப்பது வழக்கம் அப்படியான தருணத்தில் தான் ஒரு முறை எனது பிள்ளைகள் விதவிதமான சிற்பிகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள் அதைப்பார்த்ததும் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது அந்த எண்ணம் தான் நான் எதிர்பாராத விதமான நல்ல உருவங்கள் வந்தது அப்படியே செய்து எனது வீட்டில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.

எப்படி போட்டிகளில் கலந்து கொள்ள முடிந்தது….
இவ்வாறு எனது படைப்பாற்றலை செய்து கொண்டு இருக்கும் தருணத்தில்தான் ஒரு முறை கச்சேரியில் அருங்கலைகள் பேரவையின் பணிபுரியும் திருமகள் அவர்களின் வழிகாட்டலில் சிற்பிகைப்பணி தொடர்பான அனைத்து விடையங்களையும் போட்டிகளில் கலந்து கொள்ளும் விதம் என்பனவற்றை தெளிவு படுத்தி என்னை போட்டிகளில் கலந்து கொள்ள செய்தார் அவரின் வழிகாட்டல் தான் எனது வெற்றிக்கான முதல் படியாக இருக்கின்றது.

உங்களுடைய சிற்பி வேலைப்பாட்டிற்கும் நினைவுச்சின்னங்கள் செய்வதற்கும் இடையில் உள்ள வேறுபாடு என்ன….. 
நினைவுச்சின்னங்கள் செய்யும் போது அது சிறிய வருமானத்தினை எனக்கு தந்தாலும் அது குறிப்பிட்ட சீசனுக்ககு மட்டும் தான் ஆனால் இந்த சிற்பி கைப்பணியானது பெரிதாக வருமானம் என்றில்லை அதிக நேரம் செலவிடவேண்டியுள்ளது இருந்தாலும் சமுதாயத்தில் என்னை அடையாளப்படுத்தி உயர்த்தியுள்ளது அதனால் நினைவுச்சின்னங்கள் செய்வதை குறைத்துக்கொண்டு தற்போது நான் சிற்பிகைப்பணியில் அதிக நேரத்தினை செலவிடுகின்றேன் இது எனக்கு சமுதாயத்தில் அடையாளமும் தேசிய அங்கீகாரமும் அதனால் கௌரவமுமாய் உள்ளது மகிழ்ச்சி.

உங்களது துறையில் அடுத்த கட்டம் என்றால்…
எனது துறையில் நிறைய திட்டங்கள் உள்ளது அதற்கு என்னிடம் வசதியும் பொருளாதாரமும் இல்லை அதனால் எனது திறமையை வெளிக்கொணரமுடிய வில்லை எனது இல்லத்திற்கு அருகில் விடுதிகள் உள்ளது அங்கு தங்கும் சில வெளிநாட்டுக்காரர்கள் என்னிடம் வந்து எனது கைப்பணிப்பொருட்களை பார்வையிட்டு அவற்றினை வாங்குவதற்கு தயங்குகின்றார்கள் ஏன் என்றால் அவற்றினை தங்களுடைய நாட்டிற்கு கொண்டு செல்ல முடியாது காரணம் இந்த கைப்பணிப்பொருட்களை கொண்டு செல்வதற்கான பைக்கிங் பார்சல் வசதிகள் இல்லை அதே வேளை இயந்திரத்தின் மூலம் தரமான
cutting fitting modaling போன்றவற்றினை செய்ய முடியாது உள்ளது.எனக்கு பொருளாதார வசதி அமையுமானால் எனது திறமையின் வெளிப்பாடான சிற்பி கைப்பணிப்பொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதே எனது இலக்காகும்.

தங்களது இவ்வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் எனும் போது…
முதன் முதலில் எனது சஹாப்தீன் பாத்திமா பாயிஸா மனைவியைத்தான் சொல்ல வேண்டும் ஏன் என்றால் சிற்பிகைப்பணியில் நான் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது என்னை தொந்தரவு செய்வதில்லை அத்தோடு எனது மனைவியும் கடந்த வருடம் வடமாகாண ரீதியில் கைப்பணிக்காக சிறப்பு விருதினை பெற்றுள்ளார் அதனால் இருவரது கலையார்வமும ஒன்றாக இருப்பதினால் பிரச்சினை இல்லை அத்தோடு மன்னார் மாவட்டத்தின் கைப்பணிக்கு பொறுப்பான திருவாளர் மரியநாயகம் அவர்களும் அருங்கலைகள் பேரவை திருமகள் அவர்களும் எனது சகோதரன் திரு.நளர் அத்தோடு எனது நண்பர்கள் அயலவர்கள் அனைவரையும் நினைவில் கொள்கின்றேன்.

ஒரு உருவத்தினை செய்து கொள்வதற்கு எத்தனை மணித்தியாளங்கள் எடுக்கும்….
ஒரு உருவத்தினை செய்வதற்கு முன்பு அந்த உருவம் செய்வதற்கான அனைத்துப்பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்புதான நாம் செய்து கொள்ளப்போகும் உருவத்தினை கற்பனையில் எண்ணிக்கொண்டு வேலையில் இறங்க வேண்டியதுதான் குறைந்தது ஒரு உருவத்தினை செய்து முடிக்க 3-4 மணித்தியாளங்கள் தேவைப்படும். முதல் தடவை ஒரு உருவத்தினை உருவாக்க தேவைப்படுகின்ற நேரம் அதே உருவத்தினை மீண்டும் செய்வதற்கு குறைவாகத்தான் தேவைப்படும்.

கைப்பணி ஆசிரியராக தெரிவாகியுள்ளீர்கள் இப்பயிற்சியை எத்தனை மாதத்திற்குள் முடிக்கலாம் எனக்கருதுகின்றீர்கள்
ஒருவருடக்கற்கை நெறியாகத்தான் பாடம் உள்ளது அவர்களின் பாடவரைபின்படி 06மாதம் பயிற்சியும் செயல்முறையுமாக அமைகின்றது.
சிற்பி சேகரிப்பு
சிற்பி துப்பரவு மற்றும் பாதுகாப்பு
அத்தோடு 1நாளைக்கு குறைந்தது 2-3 உருவங்கள் செய்து கொடுக்கவேண்டும் பயிற்சியளிக்கவேண்டும்
நான் இதுவரை சுமார் 60 உருவங்கள் வரை செய்து வைத்துள்ளேன். ஏன்னைப்பொறுத்தமட்டில் ஆர்வமானவர்கள் என்றால் குறைந்தது 03 மாதங்கள் போதுமானது அதேவேளை அதற்கு தேவையான பொருட்களை தேடிப்பெற்றுக்கொள்வது அவர்களின் கைகளில் உள்ளது.

நீங்கள் இதுவரை செய்த உருவத்தில் கடினமான உருவம் என்றால் எதைக்கூறுவிர்கள்…..
காட்டுக்கோழி உருவம் ஒன்றை செய்வதற்காக அதுவும் கடந்த வருடம் நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான தேசியப்போட்டிக்காக காட்டக்கோழி உருவத்தினை செய்வதற்காக பெரும் சிரமப்பட்டேன் போட்டி விதி உருவம் முற்றுமுழுதாக சிற்பியால் செய்யப்படவேண்டும் என்பதே அதற்காக மன்னாரி;ல் உள்ள அனைத்து கடலுக்கும் சென்று தேடினேன் நான் தேடிய கோழிக்கான இறகு கறுப்பு சிற்பி கிடைக்கவில்லை மிகவும் குழப்பத்தில் இருந்த போது தான் வேறு தேவைக்காக அருவியாறு சென்ற போது அங்கு நான் தேடிய கறுப்பு சிற்பியை கண்டு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 அந்தக்காட்டுக்கோழி உருவத்தினை முழுமையாக செய்து விடலாம் போட்டிக்கு அனுப்பலாம் என்று அவ்வாறே போட்டிக்கு காட்டுக்கோழி உருவத்தினை செய்து கொண்டு போகும் போது ஏற்பட்ட சிறுவெடிப்பு காரணமாக போட்டியில் இருந்து காட்டுக்கோழி உருவம் நீக்கப்பட்டது கவலையாக இருந்தாலும் எனது இன்னொரு உருவம் தான் தேசிய அளவில் தேர்வாகியது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை..

தாங்கள் பெற்ற விருதுகள் பற்றி---
பெரிதாக விருதுகள் பெறவில்லை இருந்தாலும் பெற்ற விருதுகள் பெருமையானவை


  • Provincial Industrial Exhibition 1st place Pair of Dove Seasells-2016
  • Presidiential Handicrafts Awards "Shilpa Abimani-2016"-(Sea Sells Related)

கலைஞர்களை கண்டுகொள்வதில்லை என்பது பற்றி….
உண்மைதான் மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் என்னை மட்டுமல்ல என்னைப்போன்ற கலைஞர்களை யாரும் கண்டு கொள்வதில்லை கௌரவப்படுத்துவதும் இல்லை இது எங்களைப்போன்றவர்களுக்கு மிகவும் கவலையான விடையம் தான் ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் என்று தெரியவில்லை எனக்கு இப்போது 42 வயதாகிவிட்டது.
தேசிய ரீதியில் எனக்கு முதலிடம் கிடைத்தது அதற்கான கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார்கள் அங்கு சென்றிருந்தேன் அங்கு நான் நிற்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது இதே விடையம் எனது ஊரில் எனது மன்னார் மண்ணில் எமது மக்களுக்கு முன்னால் செய்திருந்தால் அந்த மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அத்தோடு 2016ம் ஆண்டு சிற்பி கைப்பணிக்கான 1ம் 2ம் இடங்களும் பன்னவேலைக்கான இடங்களும் கிடைத்துள்ளது ஆனால் இதுவரை மன்னார் மண்ணில் நாங்கள் கௌரவிக்கப்படவில்லை மனவேதனைக்குரியதே…மனதில் கொள்வார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள்.

தங்களுக்கு மறக்கமுடியாத விடையம் என்றால்…

கடந்த வருடம் 2016ம் ஆண்டு சிற்பிகைப்பணிப்போட்டியில் வடமாகாணத்தில் எனது படைப்பு முதலாம் இடத்தினைப்பெற்றுள்ளது. அதற்கான சான்றிதழ் வைபவம் வவுனியாவில் நடைபெற்றது நானும் எனது தந்தை சகோதரர்கள் சென்றிருந்தோம் ஒவ்வொரு துறையிலும் முதலிடங்கள் 2ம் 3ம் இடங்களைப்பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கியவர்கள் எனக்கும் என்னைப்போன்றவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கப்பெறாதவர்கள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்படுகின்றது. எனக்கு பொறுப்பாய் வந்த மரியநாயகம் சேர் அவர்கள் நேரடியாக மேடைக்கு சென்று முரண்பட்ட பின்புதான் என்னையும் இன்னும் சிலரையும் பெயர் செல்லி அழைத்தார்கள் அந்த விடையம் எனக்கு மிகவும் மனவருத்தத்தினையும் கவலையினையும் தந்தது. ஏன் இவ்வாறு செய்கின்றார்கள் மன்னார் மாவட்டம் என்பதற்காகவா…?

மன்னார் மக்களின் பிரதிநிதியாக மன்னார் மாவட்டத்தின் செயல்பாட்டினை உடனுக்குடன் வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் பற்றி…
உண்மையில் மகத்தானசேவை ஏன் என்றால் எமது மன்னார் மண்ணில் நல்ல வளமான கலைஞர்கள் இலைமறை காயாக உள்ளார்கள் அவர்களை இனம்கண்டு வெளிக்கொணரும் அரிய பணியை செய்கின்றீர்கள் அவ்வாறே என்னையும் நான் தேசிய ரீதியில் சில்பா கைப்பணி விருது-2016 பெற்றுள்ளேன் இந்த விடையம் எனது குடு;ம்பத்திற்கும் எனது ஊரில் சிலருக்கும் தான் தெரியும் தாங்கள் வீடு தேடிவந்து என்னை பேட்டி கண்டு நியூமன்னார் இணையத்தின் மூலம் வெளிக்கொணர்வதால் மன்னார் மாவட்டம் போல எல்லமாவட்டங்களுக்கும் இடங்களுக்கும் தெரியப்போகின்றது எனது திறமையும் மன்னார் மாவட்டத்தின் பெருமையும் வெளிக்கொணர்வதற்கும் நானும் எனது குடும்பம் சார்பாகவும் கலைஞர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகின்றேன் தொடரட்டும் உங்கள் பணி இடைவிடாது சேவை இம்மன்னாருக்கு தேவை….

நியூமன்னார் இணையத்திற்காக-வை.கஜேந்திரன்




















































விம்பம் இப்பகுதியில் மன்னாரின் பெருமை தேசிய விருது பெற்ற M.A.M.சன்ஹர்...... Reviewed by Author on March 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.