அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கணகலிங்கம் காண்டிபன் நியமனம்-(படங்கள் )

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கனகலிங்கம் காண்டிபன் நியமனம்

இலங்கை அரச போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் கடமையாற்றிய கணகலிங்கம் காண்டிபன்  மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மன்னார் சாலையின் புதிய முகாமையாளராக நியமிக்கப்பட்ட கணகலிங்கம் காண்டிபன் இன்று (27) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார்-தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலையில் கையொப்பமிட்டு தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

புதிய முகாமையாளரை சாலை பணியாளர்கள் வைபவ ரீதியாக வரவேற்றனர்.இதன் போது சர்வமத தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிலையில் மன்னார் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜே.லெம்பேட் கிளிநொச்சி முகாமையாளராகவும்,ஏற்கனவே மன்னார் முகாமையாளராக கடமையாற்றிய முஹமட் சாஹீர் வவுனியா முகாமையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-






(27-3-2017)

இலங்கை அரச போக்குவரத்து சபையின் மன்னார் சாலைக்கு புதிய முகாமையாளராக கணகலிங்கம் காண்டிபன் நியமனம்-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.