அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் பேரணி- வீதியை மறித்து கண்ணீர் விட்டு கதறிய உறவுகள்.(படம்)

மன்னாரில் இன்று (13) திங்கட்கிழமை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத்தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் பேரணி இடம் பெற்றது.

மன்னார் தலைமன்னார் வீதியில் உள்ள மன்னார் பிரஜைகள் குழுவிற்கு முன் காலை 10 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்று மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதியை சென்றடைந்தது.

இதன் போது குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்த காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி,கோசங்களை எழுப்பி குறித்த பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், சர்வதேச விசாரணை கட்டாயமாக நடைபெறவேண்டும், ஜெனீவாவில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த கவனயீர்ப்பு பேரணியானது முன்னெடுக்கப்டது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஒன்று கூடிய ஆயிரக்கணக்கான காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கத்தியதோடு, ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட மகஜரை பெற்றுக்கொள்ள மாவட்ட அரசாங்க அதிபரை வெளியே வருமாறு அழைத்தனர்.

எனினும் மாவட்ட அரசாங்க அதிபர் நீண்ட நேரமாகியும் மகஜரை பெற்றுக்கொள்ள வெளியில் வராததன் காரணத்தினால் ஆத்திரமடைந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாவட்டச் செயலக பிரதான வீதியை மறித்து வீதியில் அமர்ந்து தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் பேரணியில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,மாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மற்றும் மன்னார் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் மாவட்டச் செயலகத்திற்குள் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கலந்துரையாடினர்.

-பின்னர் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வெளியில் வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்தார்.

-அதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய மகஜரை வாசித்து மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

-வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் மாவட்டச் செயலக பிரதான வீதியூடான போக்குவரத்துக்கள் சுமார் 45 நிமிடங்கள் வரை பாதீப்படைந்திருந்தது.எனினும் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மாற்றுப்பாதையூடாக போக்குரத்தை சீர் செய்தனர்.

குறித்த பேரணியில் அருட்தந்தையர்கள்,பிரஜைகள் குழு அங்கத்தவர்கள், மன்னார் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உற்பட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் நிருபர்


(13-3-2017)


















மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்புப் பேரணி- வீதியை மறித்து கண்ணீர் விட்டு கதறிய உறவுகள்.(படம்) Reviewed by NEWMANNAR on March 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.