அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட விடத்தல் தீவு மீனவர் ஒருவர் பலி-(படங்கள் )

கடற்படையினரின் படகு மோதியதில் குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் நேற்று (23) வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் கில்மன் (வயது-39) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

விடத்தல் தீவு 7 ஆம் வாட்டாரத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாசன் கில்மன் (வயது-39) என்ற மீனவர் குள்ளா படகு மூலம் விடத்தல் தீவு கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் போது கடற்பாதுகாப்பில் ஈடுபட்ட கடற்படையினர் கடலில் படகு ஒன்று மூழ்கி கிடப்பதாகவும் அதனை சென்று பார்வையிடுமாறும் கரையில் உள்ள மீனவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இதன் போது சக மீனவர்கள் படகுகள் மூலம் குறித்த பகுதிக்குச் சென்று தோடுதல்களை மேற்கொண்ட போது முதலில் படகு மீட்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குறித்த மீனவர் பயண் படுத்திய டோச் லைட் கடலில் மிதந்த வந்த நிலையில் மீட்கப்பட்டது.

தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல்களின் போது குறித்த மீனவர் உயிரிழந்த நிலையில் கடலில் மூழ்கி கிடந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மீனவரின் தலை மற்றும் கழுத்து பகுதியில் பாரிய பாயம் காணப்பட்டுள்ளது.

கடற்படையினரின் படகு குறித்த மீனவரின் படகுடன் மோதியதினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் அறிந்து கொண்டனர்.

மீட்கப்பட்ட மீனவரின் சடலம் பள்ளமடு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

விடத்தல் தீவு கிராம மீனவர்கள் சிலரின் பகுகளை பல தடவைகள் கடற்படையினரின் படகுகள் மோதியுள்ளதாகவும் அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.

குறித்த மீனவர் கடற்படையினரின் படகு மோதியதினாலேயே ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்துள்ளதை அறிந்து கொண்ட விடத்தல் தீவு கிராம மக்கள் விடத்தல் தீவு கடற்படை முகாமை நேற்று வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
இதனால் விடத்தல் தீவு கிராமத்தில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவ இடத்திற்கு அருட்தந்தையர்கள்,கிராம அலுவலகர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் விரைந்து சென்று மக்களுடன் கலந்துரையாடினர்.

இதன் போது அடம்பம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது குறித்த கடற்படையினரை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் வீதியில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் பொலிஸ் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சந்தேக நபர்களான கடற்படை வீரர்கள் கைது செய்யப்படாமை குறித்து கேல்வி எழுப்பினர்.
இந்த நிலையில் மக்களின் எதிர்ப்பு மற்றும் அதிகாரிகளின் அலுத்தம் காரணமாக அடம்பன் பொலிஸார் சம்பவ தினம் கடலில் படகில் பயணித்த இரண்டு கடற்படை வீரர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் தற்போது அடம்பன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மீனவரின் சடலம் பள்ளமடு வைத்தியசாலையில் இருந்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-இதே வேளை விடத்தல் தீவு கடற்பரப்பில் தொடர்ச்சியாக மீனவர்களின் படகுகள் மீது கடற்படையினரின் படகு மோதி விபத்தை ஏற்படுத்தி வருவதாகவும்,அந்த வகையிலே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக மீனவர்கள் தனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பாக உடனடியாக உரிய தரப்பினரின் கவனத்திந்கு கொண்டு வந்துள்ளதாகவும்,துரித விசாரனைகளை முன்னெடுத்து சட்ட சடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மேலும் தெரிவித்தார்.


மன்னார் நிருபர்

(24-03-2017)



மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் குள்ளா படகு மூலம் மீன் பிடியில் ஈடுபட்ட விடத்தல் தீவு மீனவர் ஒருவர் பலி-(படங்கள் ) Reviewed by NEWMANNAR on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.