அண்மைய செய்திகள்

recent
-

மீன்பிடி அமைச்சர் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தம் - முல்லைத்தீவு சமாசத் தலைவர் குற்றச்சாட்டு

மீன்பிடி அமைச்சர் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தம் - முல்லைத்தீவு சமாசத் தலைவர் குற்றச்சாட்டு
நாயாறு களப்­பில் தொழில் செய்­யும் 23 பட­கு­க­ளின் அனு­ம­தி­யைத் தடை செய்­யு­மாறு பணிப்­பா­ளர் நாய­கத்­தால் மாவட்­டப் பிர­திப் பணிப்­பா­ள­ருக்கு எழுத்­தில் அறி­விக்­கப்­பட்­டது. இருந்­தும் அந்­தப் பகு­தி­யில் இயந்­தி­ரப் படகு மூல­மான தொழில் தற்­போ­து­வரை நடக்­கின்­றது. இவ்­வாறு முல்­லைத்­தீவு மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர் சமா­சத் தலை­வர் அந்­தோ­னிப்­பிள்ளை மரி­ய­ராசா குற்­றஞ்­ சாட்­டி­னார்.அவர் தெரி­வித்­த­தா­வது,

இந்த ஆண்டு மாவட்ட நிர்­வா­ கங்­க­ளுக்­குத் தெரி­யாது திணைக்­களத்­தால் நாயாறு களப்­பில் தொழில் செய்ய தென்­னி­லங்கை மீன­வர்­கள் 23 பேருக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. அவற்றை உட­ன­டி­யாக நிறுத்­துங் கள் என்று மீன்­பிடி அமைச்­சர் அம­ர­ வீர கடந்த புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டார். அதற்­க­மைய அனு­ம­தி­களை உடன் இரத்­துச் செய்­யுங்­கள் என்று பணிப்­பா­ளர் நாய­கம் மாவட்ட பிர­திப் பணிப்­பா­ள­ருக்­குக் கடந்த வியா­ழக்­கி­ழமை எழுத்­தில் உத்­த­ர­விட்­டார்.

அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் 23 பட­கு­க­ளும் இன்­று­வரை அந்­தப் பகு­தி­யில் தொழில் செய்­கின்­றன. செம்­மலை, அலம்­பில், நாயாறு பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்த சுமார் 800 மீனவ குடும்­பங்­கள் இத­னால் பெரும் பாதிப்­பு­களை எதிர்­கொள்­கின்­ற­னர்.

இந்­தப் பிரச்­சி­னைக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்மல­நா­தன் உத­வி­யு­டன் மீனவ பிர­தி­நி­தி­கள் கொழும்பு சென்று மேற்­படி தீர்­வைப் பெற்­றோம். அமைச்­சர் மூலம் பணிப்­பா­ளர் நாய­கத்­தின் உத்­த­ர­வு­களை நடை­மு­றைப்­ப­டுத்த மாவட்ட திணைக்­க­ளம் முன்­வர வேண்­டும்.- என்­றார்.

“கடந்த வியா­ழக்­கி­ழமை இந்த உத்­த­ரவு எமக்­குக் கிடைத்­தது. உட­ன­டி­யாக நாயாறு களப்­புக்­குச் சென்­றோம். அங்கு 23 பட­கு­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளும் இருக்­க­வில்லை. தொழி­லுக்­குச் சென்­றி­ருந்­த­னர். எனி­னும் அவர்­க­ளுக்கு உத்­த­ரவு தொடர்­பா­கத் தெரி­யப்­ப­டுத்­தித் திரும்­பி­னோம். தற்­போ­தும் அங்கு தொழில் செய்­யப்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­வது தொடர்­பாக இன்று நேரில் சென்று உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.”- என்று நீரி­யல் வளத் திணைக்­கள அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.
மீன்பிடி அமைச்சர் உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் அசமந்தம் - முல்லைத்தீவு சமாசத் தலைவர் குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on March 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.