அண்மைய செய்திகள்

recent
-

நாட்டிலுள்ள எந்த கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை - காதர் மஸ்தான்

மன்னார் லா சாலி ஆங்கில பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (15.03.2017) பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் கே.எஸ்.யோக்ணானந்தன் தலைமையில் லா சாலி மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் கலந்துகொண்டார்.

பாடசாலை பேண்ட் வாத்தியக்குழுவினால் அழைத்துவரப்பட்ட மஸ்தான் எம்பிக்கு அணிநடை வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

அத்துடன் பாடசாலை அதிபரின் தலைமையுரையில் தேர்தல் காலங்களில் மஸ்தான் எம்பியுடைய போஸ்டர்களில் சொல்நேர்மை செயல்வீரம் என்றவாறு காணப்பட்டது அதனை அவர் சரியாக செய்கிறார் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் மன்னார் மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டம் என்று கடந்த காலங்களில் முத்திரை குத்தப்பட்டிருந்ததாகவும் அவை மஸ்தான் எம்பியுடைய சேவைகள் மூலம் முறியடிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் லா சாலி பாடசாலையினால் மஸ்தான் எம்பிக்கு நினைவுச்சின்னமொன்றும் வழங்கப்பட்டது.

குறித்த பாடசாலை மாணவர்களின் மைதான நிகழ்வுகளை கண்டுகளித்த மஸ்தான் எம்பி வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கேடையங்கள் மற்றும் சான்றிதழ்.பரிசில்களையும் வாங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மஸ்தான் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,

அரசியல் வாழ்க்கை என்றாலே குழப்பம் நிறைந்ததும் மக்களின் தேவைகளால் வேலைப்பளுக்கள் நிறைந்ததுமான வாழ்க்கையாகும் இந்த வாழ்க்கைப்பயணத்தில் இவ்வாறான சிறுவர்களுடைய நிகழ்வுகளே அதன் களைப்பை போக்குகிறது.

தற்போது உலகில் ஒரு தேர்ச்சி பெற்ற மொழியாகவும் பொதுவான மொழியாகவும் ஆங்கிலம் பேசப்படுகிறது அதனை சிறுவர்களுக்கு ஆரம்பத்திலிருந்து கற்பித்து அவர்களை சமூகத்துக்கு பயனுள்ளவர்களாக அனுப்பும் பணியை செய்யும் இந்த லா சாலி பாடசாலைக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.

நாட்டிலுள்ள எந்த கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை மாறாக கல்விக்கூடங்களிலிருந்து வெளியானவுடன் அவர்கள் காணும் மனிதர்களும் சமூகமுமே அவர்களை மாற்றுகிறது.

மேலும் இந்த பாடசாலையில் தமிழ் முஸ்லிம் என்ற பாகுபாடின்றி அனைத்து மாணவர்களும் கற்கும் கல்விக்கூடமாக இது காணப்படுவதால் எதிர்காலத்தில் தன்னாலான அனைத்து உதவிகளை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், மன்னார் மாவட்ட கொமர்சல் வங்கியின் முகாமையாளர் தி. திவாகரன் உற்பட அருட்சகோதரர்கள் அருட்சகோதரிகள், ஆரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




















நாட்டிலுள்ள எந்த கல்விக்கூடமும் இனவாதத்தை விதைப்பதில்லை - காதர் மஸ்தான் Reviewed by NEWMANNAR on March 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.