அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா படுகொலை வழக்கு; துரித கதியில் விசாரணைகள்!




புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் பக்கச்சார்பற்ற விசாரணைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக@டாக கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும் என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இவ்வழக்கு விசாரணை முடிவின் போது, சந்தேக நப ர்கள் மன்றில் கருத்து வெளியிடுவதற்கு நீதவான் அனுமதி வழங்கியிருந்தார். இதன் போது வழக்கின் 5ஆவது சந்தேக நபர், எனக்கான மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு மன்று அனுமதித்திருந்தது. எனினும் மருத்துவ வசதிகள் உரிய முறையில் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது என்றார்.

இவரைத் தொடர்ந்து வழக்கின் 9 ஆவது சந்தேக நபர் சுவிஸ்குமார், நான் சிறைச்சாலை அத்தியட்சகர் ஊடாக நீதவானுக்கு கடிதம் ஒன்றினை எழுதி அனுப்பிவைத்திருந்தேன். அக் கடிதம் அனுப்பிவைத்து நீண்ட நாட்கள் கடந்து விட்டன. இருந்தபோதும் அக் கடிதத்திற்குரிய பதில் இதுவரை எனக்கு வழ ங்கப்படவில்லை என்றார்.  இதற்குப் பதிலளித்த நீதவான், குறித்த வழக்குத் தொடர்பாக நேரடியாக எனக்கு எந்த கடிதத்தினையும் நீங்கள் அனுப்பிவைப்பதற்கான அனுமதி இல்லை. இதற்கான சட்டவிதிமுறைகள் உள்ளன.

இவ்வழக்குத் தொடர்பாக ஏதேனும் தெரிவிக்க விரும்பினால் அல்லது வாக்குமூலத்தினை பதிவு செய்ய விரும்பினால் அதனை வெளிப்படையாக மன்றில் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும் குறித்த வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் தனியான சந்திப்புக்களை அல்லது அறிமுகங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். என்ன விடயமாக இருந்தாலும், மன்றின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். அவ்விடயங்கள் தொடர்பாக மன்று கவனம் செலுத்தும்.

குறித்த வழக்குத் தொடர்பாக பக்கச்சார் பற்ற துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சட்டத்தின் முன் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் தன்மானம், சுய கௌரவம் என்பவை உள்ளது என்ற ரீதியில் தான் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். விசாரணைகளின் முடிவு அறிக்கையின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் சந்தேக நபர்களில் யார் மீது குற்றம் சுமத்துவது, யாரை விடுதலை செய்வது என்பது தொட ர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக நடவடிக்கைகளின்படி மேலதிகமாக வழக்கு கொண்டுநடத்தப்படும் என்றார். சந்தேக நபர்களுக்கான மருத்துவ வசதிகள் தொடர்பி லும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என் றும் நீதவான் மேலும் தெரிவித்தார்.  தொடர்ந்து குறித்த வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி புதன்கிழமை வரைக்கும் ஒத்திவைக்கவும் நீதவான் கட்டளை பிற ப்பித்திருந்தார்.                            

வித்தியா படுகொலை வழக்கு; துரித கதியில் விசாரணைகள்! Reviewed by Author on March 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.