அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் சொந்த நிலத்தில் மீள்குடியேறியும் தொடரும் துயர நிலை!


முல்லைத்தீவு - பிலக்குடியிருப்பு மக்கள் ஒரு மாதகாலம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதன் விளைவாக தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறியுள்ளனர்.

இந்த நிலையில், தமக்கு அடிப்படை உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் தமக்கான உதவிகளை வழங்குவதற்கு மத்திய, மாகாண அரசுகள் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றகோரி ஒரு மாதம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.


இதன் விளைவாக பங்குனி மாதம் 01ஆம் திகதி விமானப்படையின் கட்டுப்பாட்டிலிருந்த மக்களுடைய நிலங்கள் மக்களிடம் வழங்கப்பட்ட நிலையில் 84 குடும்பங்கள் தமது சொந்த நிலத்தில் மீள்குடியேறினர்.

இந்நிலையில் மீள்குடியேறிய மக்களுக்கான அடிப்படைவசதிகள் எவையும் வழங்கப்படாத நிலை தொடர்கிறது.

கடந்த 1 மாதங்களில் மத்திய, மாகாண அரசுகள் சார்ந்த எந்தவொரு அரசியல்வாதிகளும் தமக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை.


மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை மேற்படி மக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது மீள்குடியேறும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை உடனடியாக பெற்று கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடு.

அவர்கள் மக்களை மீள்குடியேற்றினார்கள் என்னும் அடிப்படையில் மீள்குடியேறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்று கொடுப்பதும் அவர்களுடைய கடப்பாடாகின்றது.

அதில் நாம் தான்தோன்றிதனமாக தலையீடு செய்ய இயலாது. அவ்வாறு மத்திய அரசாங்கம் தனது கடப்பாட்டை செய்யவில்லை.
மக்கள் எமக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தினால் அது தொடர்பாக மத்திய அரசாங்கத்துடன் பேசி மக்களுக்குரிய உதவிகளை பெற்று கொடுப்பதற்கு எங்களால் ஆவண செய்ய இயலும்.

இதேவேளை எங்களுடைய மக்கள்தானே நாங்கள் செய்யலாம் என நாங்கள் செய்ய முயன்றால் மத்திய அரசாங்கம் செய்யட்டும் என பார்த்து கொண்டிருக்கும்.
எனவே மத்திய அரசாங்கத்தின் கடப்பாட்டை மத்திய அரசாங்கத்தை கொண்டே நிறைவேற்றவேண்டும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மக்கள் தங்கள் சொந்த பணத்தில் வாங்கிய பொலித்தீன் தறப்பாள்களில் கூடாரங்களை போட்டு கொண்டு அதிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.


முல்லைத்தீவில் சொந்த நிலத்தில் மீள்குடியேறியும் தொடரும் துயர நிலை! Reviewed by Author on April 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.