Top Ad unit 728 × 90

அண்மைய செய்திகள்

recent
-

ஜேசுநாதர் – பிரேமானந்தா பிரச்னையை கையிலெடுத்த வடக்கு முதல்வரின் அரசியல் எதிரிகள் ?

தற்போதைக்கு சமுக வலைத்தளங்களில் சூடான செய்தி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தனது ஆன்மீக குருவான பிரேமானதாவை நியாயப்படுத்துவதற்காக ஜேசு கிறிஸ்துவை உதாரணமாக எடுத்த செய்தியும் அதனை எதிர்த்து வெளியிடப்படும் அறிக்கைகளுமே.

அவரது கருத்துக்களின் உண்மைத்தன்மை ,இருட்டடிப்புகளுக்கு அப்பால் இந்த செய்தி முதலமைச்சரை அரசியல் ரீதியாக பழிவாங்க துடித்துக்கொண்டிருந்த அவரது அரசியல் எதிரிகளுக்கு நல்ல தீனி போட்டுள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை . சமுக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வந்த பலர் இந்த பிரச்னையை பூதாகரமாக்கி வடக்கில் தமிழ் தேசியத்தின் ஊடாக இனைந்திருக்கின்ற இந்து – கிறிஸ்தவ மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்துவதுடன் முதலமைச்சரை ஒரு மத வாதியாக காட்டி அவரை கிறிஸ்தவ விரோதியாக்கி அவருக்கு வாக்களித்த கிறிஸ்தவ மக்களை தூண்டிவிட்டு தாங்கள் நினைத்ததை சாதிக்கவும் தங்களின் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு பலமான எதிர்க் குரலாகவும் ,நடுநிலையாளராகவும், மக்கள் நம்பும் முதலமைச்சரை செல்லாக்காசாக்க இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இவருக்கு எதிரான விமர்சங்களை ஆராய்ந்து பார்க்கின்ற போது பெரும்பாலானோர் தமிழ் மக்கள் விரோத செயற்பாட்டாளராக தமிழ் மக்கள் அடையாளப்படுத்துகின்ற பிரபல தமிழ் அரசியல்வாதி ஒருவரின் தீவிர ஆதரவாளர்கள் இதை முழு வீச்சுடன் செயல்படுத்தி வருவது தெளிவாகின்றது .

அவரது நேர்காணல் ஒளிபரப்பப்பட்ட விதமும் தலைப்பும் நிச்சயமாக கிறிஸ்துவை பின்பற்றுபவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம், அதனால் சிலர் ஆத்திரமடைந்திருக்கலாம் இருப்பினும் இதுவரை முதலமைச்சர் கிறிஸ்தவர்களுக்கு எதிரானவராகவோ இந்துமதவாதியாகவோ காட்டிக்கொண்டாரா? அல்லது நடந்துகொண்டாரா ? என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் .

அதைவிடவும் தமிழ் தேசிய வாதியாக தன்னை கட்டிக்கொள்ளும் ஓய்வுபெற்ற மன்னார் மறை மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசெப் அவர்கள் மீது மிகுந்த மரியாதை உடையவராக முதல்வரும் முதல்வர்மீது மிகுந்த மரியாதை உடையவராக ஆயரும் இருந்து வருவதுடன் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சர் ஆக்குவதில் மன்னார் ஆயரின் பங்கும் அளப்பரியது என்பதையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற வேண்டும் வெறுமனே துண்டாடப்பட்ட ஒருபகுதி நேர்காணலை மட்டும் வைத்து அனைத்தையும் வீனடித்துவிடக் கூடாது .

இந்த நேரத்தில் கிறிஸ்தவ அமைப்புக்களும் , முதலமைச்சரும் , முதலமைச்சரின் ஆதரவாளர்களும் மிகவும் நிதானத்துடன் செயற்பட வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த விடயம் தமிழின விரோதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் செல்லாமல் சுமுகமாக தீர்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

ஒரு பதிவில் சிங்கள, தமிழ் கிறிஸ்தவர்களை ஒன்றிணைத்து முதலமைச்சருக்கு எதிராக போராடுவோம் என குறிப்பிட்டிருந்ததை பார்த்ததும் இது வேறு திசைக்கு எடுத்து செல்லப்படுவதை உணர்ந்ததன் விளைவே எனது இந்த கட்டுரையாகவும் இருக்கலாம்.

இந்த விடயத்தை ஊடகங்களும் மிக அவதானமாக கையாள வேண்டும் என்பதுடன் வெளியிடப்பட்ட காணொளி கத்தரிக்கப்படதாக இருப்பதனால் இவர் எந்த பதிலின் தொடர்ச்சியாக இதை சொன்னார். என்பது ஆராயப்பட வேண்டியது .

உண்மையிலேயே முதலமைச்சர் இந்த கேள்வியை நாகரீகமாக மறுத்திருக்கலாம். தனது ஆன்மீக நம்பிக்கை தனது தனிப்பட்ட விடயம் இது தொடர்பாக நான் கருத்துக் கூற விரும்பவில்லை என அவர் மறுதளித்திருந்தால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது என்றாலும். அவரது செவ்வி முழுமையாக ஒளிபரப்படாத வரையில் யாரையும் குறை கூற முடியாது . என்பதே எனது தாழ்மையான கருத்து.

நன்றி
என்.ஜனகன்
ஜேசுநாதர் – பிரேமானந்தா பிரச்னையை கையிலெடுத்த வடக்கு முதல்வரின் அரசியல் எதிரிகள் ? Reviewed by நியூ மன்னார் on April 18, 2017 Rating: 5
Post a Comment
Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.