அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையின் முதலாவது முத்திரை மீள்வெளியீடு!


இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரையை மீள்வெளியீடு செய்ய தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தபால் திணைக்களத்துக்கு 160 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையின் முதலாவது முத்திரை வெளியிடப்பட்ட காலப்பகுதியில் இந்த நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இதன் காரணமாக பிரித்தானிய மகாராணியின் மார்பளவு புகைப்படமே இலங்கையின் முதலாவது முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது.

குறித்த முத்திரைகள் தற்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் தொகைப் பணத்துக்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றை மீள்வெளியீடு செய்ய தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் பிரகாரம் நான்கு வகையான முத்திரைகள் வெளியிடப்படவுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 15 ரூபாவாக இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

இத்தகவலை தபால் சேவைகள் அமைச்சின் ஊடகச் செயலாளர் ரஸி ஹாசிம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது முத்திரை மீள்வெளியீடு! Reviewed by Author on April 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.