அண்மைய செய்திகள்

recent
-

கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் கிராமம் உற்பட படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரி மன்னாரில் கண்டன பேரணி (Photos)

மன்னார் மாவட்டத்தில் கடற்படையினரின் வசமுள்ள முள்ளிக்குளம் மக்களின் குடியிறுப்பு நிலங்களை விடக்கோரியும்,மன்னார் மாவட்டத்தில் படையினரினால் அபகரிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விட்டு படையினரை வெளியேற்றக்கோரியும் மன்னார் ஆயர் இல்லத்தின் ஏற்பட்டில் இன்று புதன் கிழமை(19) காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றது.

காலை 10 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் குறித்த பேரணி ஆரம்பமானது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் குறித்த பேரணி ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள் , மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள அனைத்து பங்குகளையும் சேர்ந்த மக்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா,சிறிதரன்,சாள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய பிரதிநிதிகள்,டெலோ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் பற்றிக் வினோ உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-குறித்த கண்டன பேரணியானது மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் ஆரம்பமாகி பிரதான வீதியூடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்து பின்னர் மன்னார் மாவட்டச் செயலக நுழைவாயிலை சென்றடைந்தது.

-இதன் போது கண்டன பேரணியில் கலந்து கொண்ட மக்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.

-குறிப்பாக கடற்படையினரின் கட்டுப்பாட்டியில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்களின் நிலங்களை விட்டு உடனடியாக கடற்படையினர் வெளியேற்றப்பட்டு இடம் பெயர்ந்து இன்னல்களை சந்தித்து வருகின்ற முள்ளிக்குளம் மக்கள் தமது சொந்த நிலங்களில் குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

மேலும் எமது சொந்த மண் எமக்கு வேண்டும்,நல்லிணக்க அரசு என்று போலித்தனமாக தமிழ் மக்களை ஏமாற்றாதே,சிறிலங்கா அரசே தமிழர் தயாகப்பகுதிகளில் சிங்கள மக்களை குடியேற்றாதே,எமது மண்ணில் வாழ எமக்கு உரிமை இல்லையா?,முள்ளிக்குளம் எங்களின் சொந்த மண் அது எமக்கு மீண்டும் வேண்டும். உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

பின்னர் முள்ளிக்குளம் மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம் மன்னார் ஆயர் இல்லத்தினூடாக ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜரை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




































கடற்படை வசமுள்ள முள்ளிக்குளம் கிராமம் உற்பட படையினர் வசமுள்ள மக்களின் குடியிருப்பு நிலங்களை விடக்கோரி மன்னாரில் கண்டன பேரணி (Photos) Reviewed by NEWMANNAR on April 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.