அண்மைய செய்திகள்

recent
-

தீவிரவாத தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படும் 10 நாடுகள்....


சர்வதேச அளவில் தீவிரவாத தாக்குதல்களால் உயிரிழப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் முதல் 10 நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில் இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈராக்கில் தான் அதிகளவில் தீவிரவாத தாக்குதல்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2015-ம் ஆண்டு புள்ளிவிபரத்தின் அடிப்படையில் தீவிரவாத தாக்குதல்களால் பாதிப்பிற்கு உள்ளான முதல் 10 நாடுகளின் பட்டியல் இதோ

ஈராக்

2015-ம் ஆண்டில் மட்டும் ஈராக் நாட்டில் 2,415 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இத்தாக்குதலில் 6,960 பேர் கொல்லப்பட்டதுடன் 11,900 பேர் படுகாயம் அடைந்தனர்.

2003-ம் ஆண்டு அமெரிக்கா ஈராக் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது முதல் தற்போது வரை 40 தீவிரவாத மற்றும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஈராக் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான்

அண்டை நாடான பாகிஸ்தானில் தீவிரவாதம் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.

2015-ம் ஆண்டில் மட்டும் 1,715 தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. 5,312 பேர் கொல்லப்பட்டனர். 6,249 பேர் படுகாயம் அடைந்தனர்.

நைஜீரியா

நைஜீரியாவில் போகோ ஹாரம் என்ற தீவிரவாத அமைப்பும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பும் தாக்குதலுக்கு காரணமாக இருந்து வருகின்றன.

2015-ம் ஆண்டில் இந்நாட்டில் நிகழ்ந்த 588 தாக்குதல்களில் 4,950 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 2,786 படுகாயம் அடைந்தனர்.

பாகிஸ்தான்

2006-ம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்கள் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. எனினும், கடந்த 2015-ம் ஆண்டில் 45 சதவிகித தாக்குதல்களும் 38 சதவிகித உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

சிரியா

தீவிரவாத தாக்குதல்களை தவிர்த்து விட்டு உள்நாட்டு யுத்தத்தால் இந்நாட்டில் இதுவரை 4,00,000 பேர் பலியாகியுள்ளனர்.

எனினும் தீவிரவாத தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டில் 384 தாக்குதல் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 2,761 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,830 காயம் அடைந்தனர்.

ஏமன்

சிரியாவை போல் ஏமன் நாட்டிலும் ஹவுதி போராளிகளுக்கும் அந்நாட்டு அதிபருக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.

தீவிரவாத தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் 467 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 1,519 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,599 பேர் காயம் அடைந்தனர்.

இந்தியா

இந்தியாவில் பெரும்பாலும் அரசியல் உள்நோக்கம் காரணமாக தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்பதால் அதன் உயிரிழப்புகள் குறைவாக இருக்கும்.

எனினும் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த 797 சம்பவங்களில் 289 பேர் உயிரிழந்து 501 பேர் காயமடைந்துள்ளனர்.

சோமாலியா

சோமாலியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகமானதாக இருந்தாலும் அவர்களின் தாக்குதல் மிகவும் குறைந்துள்ளது.

2015-ம் ஆண்டில் மட்டும் 241 தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் 659 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 463 பேர் காயம் அடைந்துள்ளனர்.

எகிப்து

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்தில் தீவிரவாத தாக்குதல்கள் அண்மை காலமாக குறைந்து அந்நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருகிறது.

எனினும் நாடு முழுவதும் நிகழ்த்தப்பட்ட 493 தாக்குதல்களில் 662 பேர் உயிரிழந்தனர், 835 பேர் படுகாயம் அடைந்தனர்.

லிபியா

லிபியா அதிபரான கடாபியை கொன்ற நாள் முதல் லிபியாவில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியது. இந்த உள்நாட்டு யுத்தம் தான் இன்று சிரியா வரை பரவியுள்ளது.

2015-ம் ஆண்டில் லிபியாவில் நிகழ்ந்த 432 தாக்குதல்களில் 454 பேர் கொல்லப்பட்டதுடன் 660 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிரவாத தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படும் 10 நாடுகள்.... Reviewed by Author on May 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.