அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தை பிரித்து 9 மாகாணங்களிலும் சமமாக நிறுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர்


வடக்கிலுள்ள இராணுவத்தை எங்கே கொண்டு செல்வது என்பது தான் பிரச்சினையென்றால்முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரித்து அதில் ஒரு பங்கை ஒவ்வொருமாகாணத்திலும் நிறுத்துங்கள். எல்லா மாகாணத்திலும் சரிசமமாக இராணுவத்தைநிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்,வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன், வடமாகாண முதலமைசசர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த 17ம் திகதிசந்தித்த போதே மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கேட்ட போதே முதலமைச்சர் இவ்வாறுதெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

முன்னர் நடத்திய பேச்சுக்களின் போது, வடக்கிலுள்ள இராணுவத்தை குறைப்பதுதொடர்பாகவும் முக்கியமாக ஆராயப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இராணுவத்தைகுறைப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, முழு இராணுவத்தையுமே வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு நான் கோருவதாகஎன் பேச்சு அமைந்திருப்பதாக ஜனாதிபதி கூறினார்.

ஏன், அதில் என்ன பிழை?என்றேன். அப்படியானால் எங்கள் இராணுவத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தச்சொல்கின்றீர்கள் என்று கேட்டார்.

முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரியுங்கள்.ஒன்பதில் ஒரு பங்கை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள் என்றேன். எல்லாமாகாணத்திலும் சரிசமமாக இராணுவத்தை நிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லைஎன்றேன்.

அத்துடன், பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வடக்கில் அமைய வேண்டும் என்று கேட்டேன்.எம் இளைஞர் யுவதிகள் களுத்துறையில் இருக்கும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்குச்செல்வதற்குப் பயப்படுகின்றார்கள். தமிழ் மொழிப் பொலிஸ் பயிற்சிக்கல்லூரியொன்று வடக்கில் அமைவதே சாலச் சிறந்தது என்றேன்.

அதற்கு ஜனாதிபதிவடக்கில் இருப்பவர்கள் தெற்கிற்கும் தெற்கில் இருப்பவர்கள் வடக்கிற்கும்வந்தால்தான் புரிந்துணர்வு ஏற்படும் என்றார். எமது அரசியல் ரீதியானபிரச்சினையை உடனே தீருங்கள். நாங்கள் யாவருமே தெற்கு நோக்கி வருகின்றோம்என்றேன். ஜனாதிபதி உளமாரச் சிரித்தார். அத்துடன், பல விடயங்களையும் நான் எடுத்துரைத்து அவற்றிற்கான தீர்வைப் பெறுவதுமிகவும் அவசரம் என்றேன்.

ஜனாதிபதி ஒன்பது மணியாகி விட்டதாலும் வேறு ஒரு நிகழ்வுதமக்கு இருப்பதாலும் தொடர்ந்தும் கலந்துரையாட முடியாமல் இருப்பதாகக் கூறிசம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளையுங் கூட்டிக்கொண்டு விரைவில் வடக்கிற்குஒரு நடமாடுஞ் சேவையை நடாத்த வருவதாகக் கூறினார். அதன் போது தீர்வுகாணப்படாதுள்ள விடயங்கள் அனைத்திற்கும் தீர்வு காணலாம் என்றார்.

இராணுவத்தை பிரித்து 9 மாகாணங்களிலும் சமமாக நிறுத்துங்கள்! ஜனாதிபதியிடம் வடக்கு முதல்வர் Reviewed by Author on May 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.