அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து ஜேர்மனி சென்ற இளம்விஞ்ஞானி A.J.சயித்..... நழுவியது வாய்ப்பு….


மன்னாரில் இருந்து கடந்த 16ம் திகதி தொடக்கம் 22வரை ஜேர்மனியில் நடைபெற்ற (INTERNATIONAL CONFERENCE YOUNG SCIENTISTS) இளம் இளம்விஞ்ஞானிகள் பங்குபெறுவதற்கு கல்விஅமைச்சினால் நடாத்தப்பட்ட போட்டியில் சர்வதேசமட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட A.J .சயித்துடனான சந்திப்பு......

30 நாடுகள் 252 இளம்விஞ்ஞானிகள் 06 பிரிவுகள் அதாவது


Life Science
Enviromental Science
Physics
Engineering
Maths
Chemistry
இப்பிரிவுளில் Life Science-லைப்சயன்ஸ் பிரிவில் 37 இளம்விஞ்ஞானிகளுடன் சேர்ந்து தனது புதியகண்டுபிடிப்பினை பற்றிய அறிக்கையினை presentation சமர்ப்பித்தார்.


தங்களது ஜேர்மனிப்பயணம் பற்றி---

எனது புதியகண்டுபிடிப்பினை வெளிப்படுத்த இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இருவர்களில் ஒரு தமிழ் இளம்விஞ்ஞானியாக ஜேர்மனி சென்றிருந்தேன். அங்கு எல்லாமே எனக்கு புதிதாய் இருந்தது 30 நாடுகளில் இருந்து 252 இளம்விஞ்ஞானிகளில் ஒருவனாக கலந்து கொண்டேன். எல்லாருமே புதியவர்கள் மொழியும் நடைமுறையும் செயல்பாடுகளும் வேறானவையாக இருந்தது.முதல் இருநாட்களில் நான் யாருடனும் பெரிதாக கதைக்கவில்லை எனது எண்ணம் எனது கண்டுபிடிப்பினை சரியான முறையில் presentation வெளிப்படுத்தவேண்டும் என்பதுதான்.

தங்களின் கண்டுபிடிப்பின் வெளிப்பாடு எவ்வாறு அமைந்தது….
நான் அங்கு சென்றதில் இருந்து ஒரு விதமானமனப்பயத்துடன் இருந்தேன் காரணம் எல்லாம் புதிது ஒவ்வொருவரும் தங்களின் கண்டுபிடிப்புக்களை வெளிப்படுத்த செய்திருந்த ஏற்பாடுகள் கொண்டவந்த உயர்தரத்திலான பொருட்கள் செய்முறைகள் பிரமிப்பாய் இருந்தது அத்தோடு  லைப்சயன்ஸ் பிரிவில் உள்ள 37 விஞ்ஞானிகளில் ஒருவனாக கலந்து கொண்டிருந்தேன் மாபெரும் சபையில் எனது presentation  நல்ல முறையில் செய்தேன் நடுவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தேன் எல்லோரினதும் கைதட்டலும் பாராட்டுதலும் கிடைத்தது அதனால் எனது கண்டுபிடிப்பு  இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருந்தேன் ஆனால் கடைசி நாளில் எனது எண்ணத்தில் மண் விழுந்தது கலங்கிபபோனேன்……

தங்களது கண்டுபிடிப்பு தெரிவாகமைக்கான காரணங்கள் எனும் போது…..
நான் எனது நாட்டிலேயே பல இடைஞ்சல்கள் துன்பங்களுக்கு மத்தியில் பல போட்டிகளில் கலந்து எனது திறமையை நிரூபித்து தான் ஜேர்மனி இளம்விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அந்த வாய்ப்பிற்கு பின் நான் எனது கண்டுபிடிப்பினை பரிசோதனைகளை அய்வு செய்யவும் களப்பயிற்சிக்கும் எனது ஆய்வுக்கான உபகரணங்கள் முக்கியமாக கண்டுபிடிப்பிற்கு தேவையான நுண்ணங்கிகள் ஆய்வுகூடங்கள் ஒவ்வொன்றிற்குமாய் நான் பட்டபாடுகள் கொஞ்சநெஞ்சம் அல்ல வார்த்தையில் சொல்லிவிடமுடியாது. எனது களஆய்வுக்கும் நுண்ணங்கிகளுக்கும் அனுமதியினையும் ஆய்வுகூடங்களுக்கான அனுமதி அதேவேளை எனக்கு பயிற்றுநராக ஆலோசகராக என ஒவ்வொன்றிற்குமாய் எனக்கு அதிக நாட்களும் அதிக உழைப்பும் தேவைப்பட்டது.  ஆனால் குறுகிய காலப்பகுமியில் அவ்வளவு விடையத்தினை என்னால் ஏற்பாடு செய்யமுடியவில்லை இருந்தும் நான் ஜேர்மனி பயணமானேன்
-SKYPE-ஸ்கைப்பில் தான் எனது களஅறிக்கையினைகூட ஒத்திகைபார்த்துக்கொண்டேன். அந்தளவிற்கு எனக்கு நேரம் போதாமையாக இருந்தது.

அப்படியாயின் என்ன நடந்தது……
இலங்கையில் எப்படிபோராடி ஜேர்மன் மகாநாட்டில் கலந்து கொள்ள எனது திறமையை நிரூபித்தேனோ அதுவும் கடைசியாளாக வந்து தெரிவானேன் அதுபோலவே ஜேர்மனி மாநாட்டிலும் எனது Life Science லைப்சயன்ஸ் பிரிவில் 37 இளம்விஞ்ஞானிகள் 37வது ஆகவே எனது அறிக்கையை சமர்ப்பிக்க presentation  முடிந்தது அப்போது நடுவர்கள் மிகவும் களைப்புற்று இருந்தார்கள் ஏன்என்றால் காலையில் 8  மணிக்கு ஆரம்பமாகி மாலையில் நான் அறிக்கை சமர்ப்பிக்கும் போது மாலை 5-40 என்றால் நடுவர்கள் நிலையை சொல்லவே தேவையில்லை.... அதுபோலவே அந்த பிரதானமான நடுவர்கள் மூவரும் ஜேர்மன் டச்சு மொழியினையும் ஏனைய இருவர்களும் பிரஞ்சும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அப்படியிருந்தும் எனது திறமையின் கண்டுபிடிப்பின் தன்மையினையும் சரியானமுறையில் சமர்ப்பித்தேன் ஏனோ தெரிவாகவில்லை….

என்னுடன் கலந்து கொண்ட சகவிஞ்ஞானிகள் என்னுடை கண்டுபிடிப்பின் தன்மையை விரிவாககேட்டறிந்து ஏன்போட்டிகளில் விருதுக்கு தெரிவாகவில்லை என்பதினை நடுவர்களிடம் சென்று கேட்கப்போவதாக என்னை அழைத்து சென்ற குழுவின் தலைமையிடம் கேட்டார்கள் அவரும் குழப்பமின்றி கேட்போம் அவ்வாறே சென்று இரண்டு நடுவர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னபதில் எமக்கு வியப்பாக இருந்தது…இங்கே நடுவர்களின் தகுதி கேள்விக்குறியாகின்றது

நான் எனது கண்டுபிடிப்பினை ஆய்வுகூடத்தில் தான் பரிசோதித்துள்ளேன் அதே ஆய்வை வெளியில் செயற்படுத்தும் போது மழையினாலும் வெயிலினாலும் ஏனைய நுண்ணங்கிகளின் தாக்கமானது எனது ஆய்வுக்கு பாதகமாக அமையும் என்பதனால் தான் போட்டியில் தெரிவாகவில்லை என்றும் கூறினார்கள் அவர்கள்  சென்ன காரணமானது சின்னப்பிள்ளைத்தனமாக இருந்தது ஏன் என்றால் எனது அய்வுக்கு உட்படுத்தும் பக்ரிரியா நுண்ணங்கியானது (DNA) எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்பு உள்ளது.

இந்த விடையத்தினை ஏன் முதலில் கூறவில்லை…………
அவர்கள் கேட்கவும் இல்லை நான் சொல்லவும் இல்லை அதாவது சாதரணமாக உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கே தெரியும் நுண்ணங்கிகளின் செயற்பாடும் அதன் விளைவுகளும் அப்படியிருக்க-PHD  முடித்த நடுவர்களுக்கு தெரியாமல் போகுமா…??? இருந்தும் நான் எனது ஆய்வின் வெளிப்பாட்டுஅறிக்கையில் கூயறியிருக்க வேண்டும் ஆனால் அதற்கு நேரம் போதாது. காரணம் ஒவ்வொரு அறிக்கைக்கு வழங்கப்பட்ட நேரம் ஜேர்மனியில் 15 நிமிடமும் நடுவர்களின் கேள்விக்கான நேரம் 5நிமிடமுமே அப்படியிருக்க அடிப்படைவிடையங்களை விளங்கப்படுத்தி எனது ஆய்வறிக்கையின் முக்கியவிடையங்களை தெளிவுபடுத்த நேரம் காணமல் வரும் என்று எனது தலைமைவிஞ்ஞானி  எனக்கு அறிவுரை கூறியிருந்ததால் நான் அதை சொல்லாமல் விட்டு விட்னே இந்த அடிப்படைவிடையத்தினால் தான் எனது ஆய்வறிக்கை நிராகரிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை….

சரி ஏனையவர்களின் கண்டுபிடிப்புக்கள ஆய்வறிக்கைகள் பற்றி---
பெரும்பாலானவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவையும்  இடைநிறுத்திவைக்கப்பட்வையுமான விடையங்களையே ஆய்வு செய்து அறிக்கைசமர்ப்பித்து இருந்தார்கள் குறிப்பாக தங்கம் வென்ற ஒரு ஆய்வானது சாதாரணமாக தேனில் உள்ள 100 வகையான நுண்ணங்கிகள் எதிர்ப்புசக்தியுள்ளது. யாவருக்கும் தெரிந்தது (பழைய குகை ஓவியங்களுக்கு முட்டையும் தேனும் கலப்பது இன்றுவரை அது எந்த வித பாதிப்பும் இல்லாமல் உள்ளது. உதாரணமாக சிகிரியா-எல்லோரா ஓவியங்கள்) அந்த சிறிய விடையத்தை பல பக்கங்களின் தியறியாக எழுதி தேனில் உள்ள 100 ல் ஒவ்வொரு நுண்ணங்கிகளின் செயற்பாடுகளை உயர்தரத்திலான MICRO நுணுக்குகாட்டியில் போட்டு படத்தினை பெரிதாக்கி சமர்ப்பித்து தங்கப்பதத்தினை பெற்றுக்கொண்டார்கள்

முதலில் இருந்ததையும் சிறியவிடையத்தினை பெரிதாக்கி அதற்கு வரைவிலக்கணம் எழுதி போட்டியில் வெற்றி பெற்றுக்கொண்டார்களே ஒழிய புதிதாக எந்த விடையத்தினையும் அங்கு சமர்ப்பிக்கவில்லை....
அதேபோல் எனது சகவிஞ்ஞானியான RAHINDUம் அவரும்-Enviromental Science பிரிவில் மகரந்தகளின் செயற்பாடுகள் ஆய்வாக சமர்ப்பித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுக்கொண்டார்  வாழ்த்துகின்றேன் அவருக்கான பின்புலம் அவரது தந்தை ஆய்வுகூடத்தில் வேலைபார்க்கின்ற மருத்துவர் அவரது வழிகாட்டலில் சகலவிடையங்களையும் ஆய்வு ரீதியாகவும் presentation தயாரன நிலையில் இருந்தவர் அவருக்கு என்னைப்போல ஆய்வுக்கு நுண்ணங்கிகள் இதர உபகரணங்கள் தேவையில்லை  என்னைப்பொறுத்தவரையில் பெரிய விடையத்தினை சின்னதாக ஆய்வறிக்கை presentation சமர்ப்பித்தேன் அது நடுவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை…

தங்களது கண்டுபிடிப்பு எடுபடாமைக்கான காரணங்கள் என்றால்----
எனக்கு திறமையிருந்தும் அந்த திறமையினை வெளிக்கொணர தேவையான உபகரணங்கள் நுண்ணங்கிகள் இல்லாமை ஒத்துழைப்பும் பக்கபலமும்  உள்ளது ஆனால் களத்தில் வெல்ல போதிய நேரமும் நல்லசந்தர்ப்பமும் எனக்கு அமைவதில்லை பெரும் போராட்டத்திற்கு மத்தியிலே எனது திறமையினை நிரூபித்து வருகின்றேன்.

இநதப்பயணம் உங்களுக்கு வெற்றியளிக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றிர்களா…???
ஏற்றுக்கொள்ளமாட்டேன்.... காரணம் என்னைப்பொறுத்தவரையில் எனக்கு இது முதல் அனுபவம் எதை எப்படி எவ்வாறு செய்யவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் ஆய்வினை மேற்கொள்ளதேவையானவையினை கற்றுக்கொண்டேன். அத்தோடு அங்கு நான் அதிநவீன உயர்தர தொழிநுட்பக்கருவிகளை பார்த்தேன். தரமான ஆய்வுகூடங்களை பார்த்தேன் இளம்விஞ்ஞானிகளுக்கான முறையான வழிகாட்டல் செய்முறைப்பயிற்சிகள் வழங்கப்படவதையும் பார்த்தேன் அவர்களுக்கான வசதிவாய்ப்புக்களை வழங்குவதையும் பார்த்தேன் அப்படியான எந்தவிதமான வசதிவாய்ப்புக்களும் இன்றி எனது திறமையினால் சிலரின் ஒத்துழைப்போடு மன்னாரில் இருந்து ஜேர்மனி சென்று வந்து இருக்கின்றேன் என்றால் எனக்கு கிடைத்த வெற்றி என்று தான் நான் சொல்வேன்.

 காரணம் இலங்கை சார்பாக கலந்து கொண்ட இருவர்களில் நான் ஒருவன் தமிழன் அதுகும் மன்னார் மாவட்டத்தின் பிரதி நிதியாக இது முதற்தடவைதான் இனிவரும் காலத்தில் என்னால் சாதிக்க முடியும் என்பதை இப்போதே சொல்லிக்கொள்கின்றேன்….


உங்களது ஜேர்மன் பயணத்திற்கும் கண்டுபிடிப்பிற்கும் உதவியவர்கள் பற்றி---
எனது இந்நிலைக்கு உயர்வதற்கு காரணம் என்றால் ஒருவர் இருவர் அல்ல பலர் உள்ளனர் அவர்களை இவ்வேளையில் எண்ணிப்பர்க்கின்றேன்

Hon.Minister Rishad Badhiudeen-ifj;njhopy; tzpfmikr;ru;
Hon.Akilaviraj Kariyawasam-fy;tp mikr;ru;
Hon.Thambiraja Gurakularaja-tlkhfhz fy;tp mikr;ru;
Dr.Sameera Samarakoon
Dr.Gamini Piyadasa
Mr.Arulanandam Sivanarulraja-tlkhfhz fy;tp mikr;R
Mr.MNF Nazriya
Mr.Vipulasena-fy;tp mikr;R
Mr.Sarathanjali Manoharan
Mr.Dushit Johndas(Attoreny At Low)இவர்களை என்றும் என்னால் மறக்க இயலாது.

தங்களுக்கான புதிய கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்வதற்கு உதவியவர்கள் பற்றி--
எனது புதிய கண்டுபிடிப்பு ஆய்வுக்கு களம் அமைத்து தந்தவர்கள் எனும் போது
கொழும்பு விஞ்ஞானபீட பல்கலைக்கழகத்தில்-
IBMBB(Institute Of Bio Technology Molecular Bio logy &Bio chemistry) பணியாற்றும்
Dr.Kanishkar kw;Wk; Mr.Senathilake,Mr.Nirmal Perera.இவர்களுடன்
State Trading Co-operation  I Nru;e;j Mr. Upali Abeyasakara  kw;Wk;  Mr.Kusan  என்றென்றும் நினைவில் கொள்கின்றேன்.

உங்களது புதிய கண்டுபிடிப்பான கழிவு நீரில் இருந்து மின்சாரம் பெறும் கண்டுபிடிப்பினை எந்த நிறுவனமும் பெற்றுக்கொள்ள விரும்புகின்றதா….

ஆம் நிச்சயமாக இலங்கையின் பெரும் நிறுவனமான
Micro Cars PVT.LTD என்னுடைய கண்டுபிடிப்பின் தங்களது நிறுவனத்திற்கு தருமாறு கேட்டுள்ளனர் அவர்களுக்கு எனது கண்டுபிடிப்பின் சாரம்சம் மற்றும் செயற்திறன் விளக்கத்தினை வழங்கவும் அதற்கு காலஅவகாசம் கேட்டுள்ளேன் காரணம் நான் இம்முறை க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதவிருக்கின்றேன் அதனால் காலஅவகாசம் கேட்டுள்ளேன் எனது பரீட்சை முடிந்த பின்பு தொடர்ந்து கண்டுபிடிப்பு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளேன்.

தங்கப்பதக்கம் பெற்றுள்ளீர்களே எதற்கு------
 அங்கு நடைபெற்ற உடல் உளத்திற்கான போட்களில் ஒன்றான கார்ப்பந்தயப்போட்டியில் 252 போட்டியாளர்களில் முதல் இடத்தினைப்பெற்று தங்கப்பதக்கம் பெற்றுக்கொண்டேன் அதுவும் மகிழ்ச்சிதான் இருப்பினும் எனது கண்டுபிடிப்பிற்கு கிடைக்காதது பெரும் ஏமாற்றமே


இன்னும் தங்களிடம் ஏதும் புதிய கண்டுபிடிப்பு சம்மந்தமான செயற்பாடுகள் ஏதும் உள்ளதா…
நிச்சயமாக உள்ளது ஆனால் அந்த புதிய கண்டுபிடிப்புக்கள் மனித சமூகத்திற்கு தேவையானதாக இருக்கும் தற்போது க.பொ.த.சாதாரணதரப்பரீட்சை எழுதவிருப்பதாலும் அதன் பின்பு எனது ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளேன் எனது ஆய்வுகளுக்கு தேவையானவை கொழும்பு பல்கலைக்கழகத்திலும்  சில அரச மருந்து கூட்டுத்தாபனத்திலும் தான் உள்ளது இதற்கு சிறப்பு அனுமதி எடுக்க வேண்டும். எனக்காகன நேரம் வரும் போது எனது திறமை எல்லோருக்கும் புரியும் அதுவரை…


மன்னாரில் இருந்து ஜேர்மனி போகும் அளவிற்கு திறமை இருக்கும் இந்த இளம்விஞ்ஞானி சாயித் அவர்களை வாழ்த்த வேண்டும் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையவில்லை அதற்கான தகுந்த வாய்ப்பும் கிட்டவில்லை திறமையாலும் சில நல்ல உள்ளங்களின் பக்கபலத்தாலும்  முடியுமானவரை முயன்றுவருகின்றார் அவரது முயற்சி முழுமையாக வெற்றியடைய நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்….

சந்திப்பு-வை.கஜேந்திரன்-

தொடர்புடைய செய்திகள்                          
மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் ...ஜேர்மனில் இடம்பெறும் விஞ்ஞானிகள் போட்டியில்...
http://www.newmannar.lk/2017/04/mn.sc.hhtml

மன்னாரில் இருந்து இளம்விஞ்ஞானி A.J.சயித்"கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு"....தனது திறமையை நிரூபிக்க ஜேர்மனி பயணம்-------
http://www.newmannar.lk/2017/02/yungscientiest.html











தொடர்புடைய செய்திகள்                          
மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியை சேர்ந்த மாணவன் ...ஜேர்மனில் இடம்பெறும் விஞ்ஞானிகள் போட்டியில்...
http://www.newmannar.lk/2017/04/mn.sc.hhtml

மன்னாரில் இருந்து இளம்விஞ்ஞானி A.J.சயித்"கழிவு நீரில் இருந்து மின்சாரம் கண்டுபிடிப்பு"....தனது திறமையை நிரூபிக்க ஜேர்மனி பயணம்-------
http://www.newmannar.lk/2017/02/yungscientiest.html

மன்னாரில் இருந்து ஜேர்மனி சென்ற இளம்விஞ்ஞானி A.J.சயித்..... நழுவியது வாய்ப்பு…. Reviewed by Author on May 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.