அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் சிறிய கடைகளில் தமது திறமையை காட்டும் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்…..

மன்னார் மாவட்டத்தில் பலவகையான அநீதியான செயற்பாடுகள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றது.

 அதற்கு அரசஅதிகாரிகளும் ,அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பணம்படைத்தவர்களின்,  துனையுடன் நடைபெறும் அநீதியான செயற்பாடுகளில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் ஏழைஎளியமக்களே.

 இவர்களைத்தன் சட்டம் தகுந்த முறையில் கவனித்து தனது கடமையினை செய்கின்றது.

எல்லாவழியிலும் எல்லாத்துறையிலும் காரணம் சும்மா அடித்தால் திருப்பியடிப்பார்கள் ஆனால் பண பலத்தினை வைத்துக்கொண்டு அதுவே சட்டத்தால் அடித்தால் திருப்பியடிக்க வாய்ப்பே இல்லைத்தானே…

அவ்வாறு நடைபெறுகின்ற பல அநீதியான செயற்பாடுகளின் ஒன்றைப்பற்றி இங்கு முறைப்பாடாகவும் குறையாகவும் பார்க்கப்போகின்றோம் .

------→→→

சில்லறைக்கடைகளில் தமது திறமையைக்காட்டும் விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள்
மன்னாரில் உள்ள கடைகள்பெரும்பாலாக சில்லறைக்கடைகள் போலதான் செயற்படுகின்றது காரணம் லாபநோக்கம் கருதி அதிகமான பொருட்களை கொள்வனவு செய்தாலும் சில்லறை வியாபாரம்தான் செய்கின்றார்கள் மன்னார் ரவுணில் உதாரணமாக ஒரு கிலோ அரிசியின்
விற்கவேண்டிய விலை 80ரூபா அதை பெரியகடைக்காரன் சிறிய கடைக்காரனுக்கு 90 ரூபாவுக்கு கொடுக்கிறான் நீர் 100 ரூபாவிற்கு வில்லும் ஆஸ்பத்திரிச்சந்தியில் 100ரூபாயும் அதுவே எழுத்தூர் கீரி என்றால் 105ரூபாவும் தாழ்வுபாடு தூரமானால் 110ரூபாவும் விற்கப்படும் அதேவேளை உள்ளுர் கடைகள் பெட்டிக்கடைகள் அவர்கள் தாங்கள் விரும்பிய விலைதான் இது இப்படி இருக்க திடீரென வந்து தங்களது திறமையைக்காட்டும் விலைகட்டுப்பாட்டு அதிகாரிகள் நீங்கள் அதிக விலை விற்கின்றீர்கள் என்று தண்டப்பணம் அறவிடும் துண்டினை கொடுக்கின்றார்கள் குறித்த திகதியில் நீதிமன்றத்தில் பணத்தினை செலுத்தவேண்டு;ம்…


அப்படி அரிசி மடடுமல்ல இன்னும் பல அத்தியவசியப்பொருட்கள்
பெரும்பாலான பிரச்சினை வருவது கூல் தண்ணீர் கூல் சோடா கூல் மைலோ ஏனைய குளிர்பாணங்கள் இதரபொருட்கள் சிறியதாக இருந்தால் 05ரூபாவும் பெரிதாக இருந்தால் 10ரூபாவும்  அறவிடுகின்றார்கள் இதுவும் கடைகளுக்கு கடைகள் மாறுபடும்.

ஒரு கடைக்காரர் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியுடன் முரண்படுகின்றார் இவ்வாறு…அதிகாரி மைலோ வேண்டிக்குடித்துவிட்டு எவ்வளவு என்று கேட்கின்றார் 50ரூபா என்கின்றார் கடைக்காரர் அதிகாரி 45ரூபா தானே என்கிறார் கடைக்காரர் 45 ரூபா தான் கூலுக்கு 05ரூபா அதுதான் என்று 50ரூபாவினை வாங்குகின்றார் அத்தோடு அந்த அதிகாரி இன்னுமொரு துண்டைக்கொடுக்கின்றார் அதில் 3000 ரூபா தண்டப்பணம் இந்தமாதம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என எழுதப்பட்டிருந்தது அதைப்பார்த்தவர் கோபமாக........

மன்னாரில் இருந்து கொழும்புக்கு நோமல் பேரூந்துக்கு 550ரூபாவும் அதே மன்னாரில் இருந்து கொழும்புக்கு ஏசி பேரூந்துக்கு1100ரூபாவும் எடுக்கின்றார்கள் அதேபோல நோமல் ரூமுக்கும் ஏசி ரூமுக்கும் ஒரே விலை இல்லை தானே அதுபோல தான் நீங்கள் வேண்டிய மைலோக்கும் பிறிட்ஜ் கரண் காசு யார் தாறது இது என்ன சட்டம் சொல்லுங்க என்கின்றார்
அதிகாரி கதைக்க எல்லாம் நல்லதான் இருக்கும் ஆனால் செயற்பாட்டிற்கு வராது தண்டப்பணம் கட்டுங்க இல்லாட்டி சட்ட நடவடிக்கை தான்
நீதிமன்றத்தில் கடைக்காரன்

நீதிபதி ஒரே கேள்வி கேட்கின்றார் நீர் குற்றவாளியா…. சுற்றவாளியா….
கடைக்காரன் அதிகாரியிடம் கேட்டகேள்வியை நீதிபதியிடமும் கோட்கமுனைகின்றான் வக்கீல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குவரும் தண்டப்பணமும் அதிகம் வரும் ஏன் வீண் சிரமம் குற்றவாளியென ஒப்புக்கொண்டு தண்டப்பணம் கட்டும்


கடைக்காரன் நீதிபதியிடம் குற்றவாளி என தலையசைக்க தண்டப்பணம் செலுத்தும் மட்டும் சிறையில் அடைக்கின்றார். அந்த கடைக்காரன் அந்த சிறையில் கொலை செய்தவன் கஞ்சா கடத்தியவன் பஞ்சமா பாதகங்கள் புரிந்தவனோடு இந்த கடைக்காரனும்….
இங்கே தான் சிந்திக்கவேண்டும் 05ரூபா கூட விற்பனை செய்ததிற்காக 3000 ரூபா தண்டப்பணம் கட்டுவதற்கு சிறையில் அரைமணித்தியாளமோ 1மணித்தியாளமோ நிற்கும் போது அவனது மனம் எவ்வாறு பாதிக்கப்படும் மனஉளைச்சளுக்கு ஆளாகமாட்டானா….???
 இதற்கு மாற்றுவழி இல்லையா.....


தனது கடமையை சரியாக செய்துவிட்டதாக விலைக்கட்டுப்பாட்டு அதிகாரி நினைக்கின்றார் எப்படி என்றால் அதாவது…இருக்குமட்டும் இருந்து விட்டு ஒருமாதத்திற்கு இத்தனை முறைப்பாடுகள் பிரச்சினைகள் பிடிக்க வேண்டும் என்ற நினைப்பில் பெரியகடைகளிடம் எதையுமே கண்டுகொள்ளாமலும்  கையூட்டு பெற்றுக்கொண்டும் சிறிய இப்படியான கடைகளிடம் தங்களின் திறமையினையும் சட்டத்தினையும் காட்டுகின்றார்.

  • இவரைப்போல நீதிபதியும் நீதியை நிலை நாட்டுவதாக எண்ணி குற்றவாளியை விசாரிக்காமல்… ஒரே கேள்வியால் அவனை சிறையில் அடைத்து தண்டப்பணத்தினை அறவிட உத்தரவிடுகின்றார்
  • இங்கே பிழை யாரில் உள்ளது…..
  • சிறிய கடைக்காரணிலா…..
  • பெரிய கடைக்காரணிலா….
  • விலைக்கட்டுப்பாட்டு அதிகாரியிலா…
  • நீதிமன்றத்திலா…..
  • சொல்லலுங்கள் பார்க்கலாம் எப்படிப்பார்த்தாலும் இங்கு பாதிக்கப்படுவது ஏழைஎளியவர்கள் தானே…
  • மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் வர்த்தக சங்கம் ஒழுங்காக இயங்குகின்றதா….???
  • நிர்ணயிக்கப்பட்ட விலைப்பட்டியல் உள்ளதா…..???
  • விலைக்கட்டுப்பாட்டு அதிகரிகள் பாராபட்சம் இல்லாமல்  கடமையாற்றுகின்றார்களா……???
  • விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் செய்யும் வேலையில் உண்மைத்தன்மை இருக்கின்றதா…..???
  • நீதிபதிகள் இப்படியான வழக்கின் உண்மைத்தன்மையினையும் விலைப்பட்டியல் பற்றிய அறிவினையும் பரிசீலனை செய்த பின்புதான் தீர்ப்பு வழங்குகின்றார்களா….???
இரண்டாவதாக----
அளக்கும் கருவிகள் அல்லது எடை பார்க்கும்(தராசு மின்தராசு)ஒழுங்கான முறையில் முத்திரையிடப்பட்டுள்ளதா…..??? இல்லை என்றால் அதற்குரிய

 அதிகாரிகள் நுகர்வோரினதும் விற்பனைசெய்வோரினதும் நலன் கருதி நடமாடும் முத்திரையிடும் சேவையினை வழங்கலாம் ஏன் எனில் கடைக்காரர்கள் ஒன்றோ இரண்டோ நிறுத்தல் அளவைகருவிகளைத்தான் பாவிக்கின்றார்கள் அப்படியிருக்க ஒரேநேரத்தில் அலுவலகம் வந்து முத்திரையிடுவது என்றால் கடையினைபூட்டவேண்டும் நட்டம் யாருக்கு….சிந்திக்கவேண்டும்.


காலவதியான பொருட்களின் விற்பனையினை தடுப்பதற்கான வழிமுறைகள் கண்டறியப்படவேண்டும். மக்களுக்கும் வியாபாரிகளுக்கும்  நுகர்வு கொள்வனவு சட்டங்கள் ஒழுக்கக்கோவைகள் தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்படவேண்டும். பின்பு சட்டத்திற்கும் ஒழுக்கக்கோவைக்கும் கட்டுப்படாமல் ஏற்றுக்கொள்ளமல் நிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுங்கள் எடுக்கலாம்.

இப்படி சிக்கலான பல கேள்விகளுக்கு விடைகிடைக்காமல் இருக்கும் மட்டும் இப்படியான அநீதிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும்  பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளாகவும் பாமரர்களாகவும் தான் இருப்பார்கள்.

இந்த பிரச்சினைக்கு தீர்வு தான் என்ன....கிடைக்குமா...

நியூ மன்னார் 

உங்கள் கருத்துக்களை எமது மின்னஞ்சலுக்கு  அனுப்புங்கள்
newmannar@gmail.com




மன்னாரில் சிறிய கடைகளில் தமது திறமையை காட்டும் விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள்….. Reviewed by Author on May 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.