அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் முதலமைச்சர் களத்தில் இறங்க வேண்டும்


தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கின்ற அதேநேரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து தமிழ் மக்களின் மிக இக்கட்டான சூழ்நிலையை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எடுத்துக் கூற வேண்டும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வந்திருந்தாராயினும் அவர் தமிழ் மக்களின் விடயம் தொடர்பில் எந்தவிதமான உறுதி மொழிகளையோ அல்லது இலங்கை அரசுக்கான அழுத்தத்தையோ கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

நாங்களும் பிரதமர் மோடியைச் சந்தித்தோம் என்ற ஒரு பதிவைத் தவிர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இந்தியப் பிரதமருக்குமான சந்திப்பு எந்த வகையிலும் பெறுமதி இல்லாத சந்திப்பு என்று சொல்வதை விட வேறு வழியில்லை.

அதேநேரம் இந்தியாவின் பிரதமர்களாக இருந்தவர்களில் அன்னை இந்திரா காந்தி அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சில முக்கியமான விடயங்களை முன்னெடுத்தவர்.

அவர் உயிரோடு இருந்திருந்தால், இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைக் குத் தீர்வு கிடைத்திருக்கும் என்று திடமாகக் கூற முடியும்.

என்ன செய்வது! எங்கள் தலைவிதி அவர் அகால மரணமடைந்து போனார். அதன் பின்பு இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜிவ் காந்தியும் எம்மீது கருசனை கொண்டவராக இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் எதிர்மறையான முடிவுகளையே தந்து போயின.

அந்த துன்பியல் சம்பவங்களுக்குப் பின்னர், இந்தியாவின் பிரதமர்களாக இருந்த எவரும் ஈழத் தமிழ் மக்களைப் பற்றிக் கதைப்பதையோ பேசுவதையோ இந்தியாவின் அரசியல் சாசனத்துக்குப் பங்கம் என்பது போல நடந்து கொண்டனர்.

எனினும் இந்தியாவின் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அண்டைய நாடு தொடர்பிலும் ஈழத் தமிழர்கள் தொடர்பிலும் கருசனை எடுக்கக்கூடியவர் என்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் எங்கள் மீது கருசனை கொள்வதாக இருந்தால் அவருக்கு எங்களின் இன்றைய நிலைமையை வலுவாக எடுத்துரைக்க வேண்டும்.

அதிலும் வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இதைச் செய்தால் அதற்கு நல்ல விளைவு கிடைக்கும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியும்.

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பது, எங்கள் பிரச்சினைகளை அவருக்கு எடுத்துரைப்பது என்ற விடயத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கக்கூடிய இந்தியத் துணைத் தூதரகம் தனது கணிசமான வகிபங்கை ஆற்ற முடியும்.

உண்மையில் இந்தியத் துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இயங்குவதனை எமக்குச் சாதகமாக்குவது என்பது தமிழ் மக்களின் உயர்ந்த இராஜதந்திரமாக இருக்கும்.

நல்லாட்சி; இந்தியப் பிரதமர்; வடக்கின் முதலமைச்சர்; யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் ஆர்.நடராஜன் என்ற ஒரு சுற்றுவட்டப் பாதையில் பிரதமர் மோடியை எம்பக்கமாக திசை திருப்பம் செய்யும் போது தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மட்டுமன்றி உரிமைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்பதால்,
பிரதமர் மோடியைச் சந்திக்க முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் களமிறங்க வேண்டும். 

வடக்கின் முதலமைச்சர் களத்தில் இறங்க வேண்டும் Reviewed by Author on May 22, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.