அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசத்தின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக உள்ள ஒரு சிலர் தொடர்பாக வேதனையடைகின்றோம்-அமைச்சர் றிஸாட் பதியுதீன்.படம்


பசியோடும் பட்டினியோடும் தொழிலுக்குச் செல்லாமல் 43 நாட்கள் மண் மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற முசலி பிரதேச மக்களின் நீதிக்காக போராட்டம் தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் இது வரை செய்தியை வெளியிடவில்லை என அமைச்சர் றிஸாட்; பதியுதீன் தெரிவித்தார்.

மாவில்லு வர்த்தமானி பிரகடனத்தில் தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை போக்கி, பிரகடனத்தை இரத்துச் செய்ய வேண்டு மென கடந்த 43 நாட்களாக மறிச்சிக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை நேற்று திங்கட்கிழமை (8) மாலை தற்காலிகமாக  இடை நிறுத்திக் கொண்டனர்.

அமைச்சர்களான பைசர் முஸ்தபா, றிஸாட் பதியுதீன் மற்றும்  தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத்சாலி , முஸ்லிம் அமைப்புக்கள் ஆகியவற்றின் உறுதி மொழியையடுத்து மறிச்சுக்கட்டி போராட்டம் முடிவுக்கு வந்தது.

-இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,.

போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கன, ஜம்மியத்துல் உலமா, மற்றும் முஸ்லிம் கவுன்சில், ஸூராகவுன்சில் உட்பட்ட சிவில் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள், பல்வேறு கிராமங்களில் இருந்தும் இங்கு வந்து ஆதரவளித்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஆகியோருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

-இப்பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டிற்கு முன் மறிச்சுக்கட்டி,கரடிக்குழி என்ற பெயரில் காடுகள் எவையும் இருக்கவில்லை.2012 இல் தான் வந்துள்ளது.

-விலாத்திக்குளம் காடு என்று ஒன்று இருக்கவில்லை.அப்படி இருந்தாலும் பெரிய ஒரு காடாக வர்த்தமானி அறிவித்தல் செய்யப்படவில்லை.

-மாவில் என்று இருந்துள்ளது.ஆனால் அண்மையிலேயே அதாவது 2017 இல் இடம் பெற்ற அநியாயம் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு இலட்சம் ஏக்கர் காடாக மாற்றப்பட்டு இங்குள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இங்கு 1500 ஏக்கர் நாங்கள் கொடுத்த காணிகளை மட்டும் விடுவித்துள்ளனர்.

-எனவே மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.எதிர் வரும் 13 ஆம் திகதி விசேட குழு நியமிக்கப்பட்டு 13 ஆம் திகதி எமது மக்களுக்கான நியாயம் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருக்கின்றார்.

-அந்த செய்தியைக்கொண்டு வந்த இந்த சகோதரர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

பசியோடும் பட்டினியோடும் தொழிலுக்குச் செல்லாமல் 43 நாட்கள் மண் மீட்புப் போராட்டத்தில் பங்கேற்ற முசலி பிரதேச மக்களின் நீதிக்காக போராட்டம் தொடர்பாக ஒரு சில ஊடகங்கள் இது வரை செய்தியை வெளியிடவில்லை.

-வடமாகாண முஸ்ஸீம்களின் மீள் குடியேற்றத்தை நாங்கள் மறிச்சிக்கட்டியிலே தபன் ஆரம்பித்தோம்.

-அரசாங்கத்தின் பணம் இல்லாமல் கட்டார் நா
டு மற்றும் எமது தனவந்தர்களுடைய நிதி உதவியுடன் பெரிய ஒரு மாதிரிக் கிராமமாக, ஓர் அழகான கிராமமாக மாற்றிய போது இப்பகுதியில் காடுகள் அழிக்கப்படுகின்றது.காடுகள் வீனாக்கப்படுகின்றது என சிலரை பயண்படுத்தி இவ்வளவு அநியாயம் எங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

- அரசின் பல மின்றி மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் மீள்குடியேற்றத்தை ஆரம்பித்து இந்தப்பிரதேசத்தை அழகு படுத்த தாம் மேற்கொண்ட முயற்சிகளை இனவாதிகiளுக்கு காட்டிக்கொடுத்து வில்பத்தை அழிக்கின்றார்கள் என்ற கருப்பொருளை அவர்களுக்கு வழங்கி எமது பிரதேசத்தின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக இருந்த ஒரு சிலர் தொடர்பாக வேதனையடைகின்றோம்.

-என்வே அனைவரும் ஒற்றுமையாக இருந்து கொள்ளுங்கள்.அற்ப சொற்ப இலாபத்துக்காக நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.நல்ல தலைவர்கள் உங்களுக்கு இருக்கின்றார்கள்.

தியாகிகள் இருக்கின்றார்கள்.கடந்த 43 நாற்கள் சொந்த பணத்தை செலவழித்து போராட்டத்தை இரவு,பகல் பாராது மேற்கொண்டிருக்கின்றீர்கள்.எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த மண்ணையும்,மக்களையும் காப்பாற்ற ஒன்று படுவோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
-மன்னார் நிருபர்-
முசலி பிரதேசத்தின் மீள்குடியேற்றத்துக்கு தடையாக உள்ள ஒரு சிலர் தொடர்பாக வேதனையடைகின்றோம்-அமைச்சர் றிஸாட் பதியுதீன்.படம் Reviewed by Author on May 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.