அண்மைய செய்திகள்

recent
-

கிளியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி விடுவிப்பு...


கிளிநொச்சி நகரில்  ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் எதிர்வரும் 30ஆம் திகதி விடுவிக்கப்படுகிறது.

கடந்த காலத்தில் நாமல் ராஜபக்ஷவினால் பயங்கரவாதத்தின் அழிவை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூறி  வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி யுத்த அழிவு சின்னமாக பேணப்பட்டு வந்தது. அதனை கிளிநொச்சியில் உள்ள படையினர் பாதுகாத்து வந்தனர். பெருமளவான தென்னிலங்கை  சுற்றுலா பயணிகள் வருகைதந்து பார்வையிடுவது வழக்கமாக இருந்தது. அவர்களுக்கு இராணுவத்தினர்  வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி தொடர்பில் விளக்கமளித்து வந்தனர்.

யுத்த காலத்தில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் காணப்பட்ட பலவற்றை அபிவிருத்தி  செய்து  அவற்றை இல்லாது செய்து அரசு விடுதலைப் புலிகளினால் வீழ்த்தப்பட்ட  நீர்த்தாங்கியை மாத்திரம் யுத்த அழிவுச் சின்னமாக பேணியமை தமிழ் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் இடம்பெற்ற பல கூட் டங்களிலும் இது தொடர்பில் எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த நீர்த்தாங்கி உள்ள நாற்பது பேர்ச் காணி இராணுவத்தினரால் கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதனை பிரதேச செயலகம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையிடம் கையளிக்கவுள்ளது.                    

கிளியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கி விடுவிப்பு... Reviewed by Author on May 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.