அண்மைய செய்திகள்

recent
-

உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: 3 பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?


ஒரு கடவுச் சீட்டின் மதிப்பு என்பது அதை பயன்படுத்தும் நபர் ஒருவர் விசா ஏதுமின்றி எத்தனை நாடுகளுக்கு பயணிக்க முடியும் என்பதை முடிவு செய்வதாகும்.

இதன் அடிப்படையில் பல லட்சம் மக்கள் பயன்படுத்திவரும் ஜேர்மன் கடவுச் சீட்டானது உலகில் விசா ஏதுமின்றி அனுமதிக்கும் 218 நாடுகளில் 176 நாடுகளில் அனுமதிக்கப்படுகிறது.

ஆனால் Sovereign Military Order of Malta எனப்படும் கடவுச் சீட்டானது மிக அரிதானது மட்டுமின்றி உலகில் வெறும் 3 பேர் மட்டுமே குறித்த கடவுச் சீட்டினை பயன்படுத்தியும் வருகின்றனர்.

குறித்த கடவுச் சீட்டானது உலகின் எந்த நாட்டிலும் விசா ஆவணம் ஏதுமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.

Sovereign Military Order of Malta எனப்படும் கடவுச் சீட்டானது கத்தோலிக்க மத அதிகாரிகளில் உயர்ப்பதவியில் இருக்கும் 3 பேர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த 3 பேர், the grand master, deputy grand master, மற்றும் chancellor ஆகிய பதவிகளை வகிப்பவர்கள் ஆவர்.

Sovereign Military Order of Malta என அறியப்படும் இந்த அரிய பெயரின் விரிவாக்கம் என்பது Sovereign Military Hospitaller Order of Saint John of Jerusalem of Rhodes and of Malta.'என்பதாகும்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில், உலகின் மதிப்பு மிக்கதும் அரியதுமான கடவுச் சீட்டை பயன்படுத்தும் இவர்களுக்கு சொந்தமாக நாடு இல்லை என்பதே.

1800 ஆம் ஆண்டிற்கு பின்னர் ரோமில் இருந்தே அனைத்து நிர்வாகமும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. குறித்த இந்த கடவுச் சீட்டானது பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் செக் குடியரசு, ஜேர்மனி, ஸ்பெயின், இத்தாலி, லாட்வியா, ஹங்கேரி, ஆஸ்திரியா, போலந்து, போர்த்துகல், ஸ்லோவேனியா அல்லது ஸ்லோவாகியா உள்ளிட்ட நாடுகளில் அரச மரியாதையுடன் பார்க்கப்படுகிறது.
 



உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு: 3 பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? Reviewed by Author on June 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.