அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் பகுதியில்....கலாபூசணம் P.A.அந்தோனி மார்க்

வருகின்றார் மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் முன்னாள் உதவிக்காணி ஆணையாளர் சிறந்த கட்டுரையாளர் சமாதானத்திற்கான சாமசூரி விருதும்ஆளுநர்விருதும் கலாபூசணம் விருதும் பெற்ற மார்க் ஐயா என்று அiழைக்கப்படும் பேதிரு அந்தோனி மார்க் அவர்களின் அகத்திலிருந்து.

தங்களைப்பற்றி---
மாண்புமிகு மன்னார் மாவட்டத்தில்  வங்காலைக்கிராமே எனது சொந்த இடம் எனது குடும்பத்துடன் தற்போது சின்னக்கடையில் வாழ்ந்து வருகின்றோம் எமது இனத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தவனாய்.

தங்களின் கல்விக்காலம் பற்றி---
எனது கல்வி எனது புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் வங்காலை பாடசாலையிலேதான் அதன்பின்பு பலபட்டப்படிப்புக்களை மேற்கொண்டுள்ளேன்.
  • சாதாரண தரம் 06பாடங்களில் சித்தி-1967
  • உயர்தரத்தில் 04 பாடங்களில் சித்தி-1969
  1.  பொருளாதாரம்
  2. தர்க்கசாத்திரம்
  3. வணிகம்
  4. விவசாயம்

  • டிப்ளோமா வர்த்தகநிர்வாகமும் முகாமைத்துவமும்- Diploma In Bussiness Administration 
  • டிப்ளோமா விவசாயம்-Diploma Agreculture 
  • டிப்ளோமா பொதுமுகாமைத்துவம்-Diploma Public Adminisration
  • டிப்ளோமா மனித உரிமைகள் கற்கை நெறி-Diploma IHR-Colombo
ஓருவருடம் சட்டமும் படித்துள்ளேன்(சூழ்நிலையால் தொடரமுடியவில்லை) மேற்படிப்புக்காக மணிலாவுக்கு புலைமைப்பரிசில் கிடைத்தும் ஒழுங்கான வழிகாட்டல் இல்லாமல் அதுகும் தடைப்பட்டது.

தாங்கள் புரிந்த அரசவேலை பற்றி----

  • குடியேற்ற அதிகாரி
  • காணி அதிகாரி
  • கட்டுக்கரை திட்டமுகாமையாளர்
  • காணி உதவி முகாமையாளர்

தாங்கள் ஊடகத்துறைக்குள் காலடிவைத்தது பற்றி---
நான் மன்னார் மாவட்டத்தின் உதவிக்காணியாணையாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன் அப்போது மேலதிக பணியாக மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் முகாமையாளராகவும் பணிபுரியவேண்டிய நிலை இவ்வாறு பணிபுரிந்து கொண்டு இருக்கும் போதுதான் எனக்கொரு ஆசையிருந்தது பாராளுமன்றதேர்தலில் போட்டியிடவேண்டும் என்று அவ்வாறே எனது அரசாங்கவேலையினை  இராஜினாமா செய்துவிட்டு 2000ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டேன் எதிர்பாராவிதமாக தோற்றுப்போனேன் அந்த தருணத்தில் எனது மனம் மிகவும் கவலையடைந்து இருந்தது அதைப்போக்கிக்கொள்ள எனது எழுத்துவலிமையை பாவித்தேன் ஆய்வுக்கட்டுரைகள் பல எழுத ஆரம்பித்தேன் அது மனதுக்கு மிகவும் சந்தோசத்தினை தந்தது.

எவ்வாறான ஆய்வுகளை கட்டுரையாக எழுதினீர்கள்---
எமது சமூகத்தின் பிரச்சினைகளையும் சு10ழலியல் பிரச்சினைகளையும் எழுதினேன்
  • சூழல் மாசடைதல்
  • புவிவெப்பமடைதல்
  • காடழிப்பும் பாதுகாப்பும்
  • போதை வஸ்த்து
  • புகைப்பழக்கமும் மதுப்பாவனையும்
  • மனித உரிமை மீறல்கள்
  • கண்ணிவெடியினால் ஏற்படும் உயிரிழப்புகள்
  • சுத்தமின்மையால் பரவும் நோய்கள்
  • சுனாமிப்பேரலையும் மக்களும்
இவ்வாறான தலைப்புகளில் பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதியுள்ளேன் எழுதியும் வருகின்றேன் சமீபத்தில் சு10ழல் தினத்திற்கு கட்டுரை எழுதினேன் உதயனிலும் உங்கள் நியூமன்னார் இணையத்திலும் வந்தது மகழ்ச்சிக்குரியதே.

உங்களது கட்டுரைகளுக்கு களம்அமைத்து தந்த ஊடகங்கள் எனும் போது—
இலங்கையில் இருந்து வெளிவருகின்ற எல்லாப்த்திரிகைகளிலும் எழுதியுள்ளேன் அவர்களும் பிரசுரித்து எனக்கு உற்சாகப்படுத்துகின்றார்கள்  அந்தவகையில் பழையநாழிதழ்களும் தற்போதுள்ள நாழிதழ்கள்
உதயன்-வீரகேசரி-சுடர்ஒளி-தினகரன்-தினக்குரல்-வலம்புரி நியூமன்னார் இணையம் சன்டே ரைம்ஸ் ஆங்கிலநாழிதல் சிங்களநாழிதழ்களும் எனது கட்டுரைகளை செய்திகளை எனது பெயரோடு பிரசுரித்து உற்சாக மூட்டிவருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகின்ற பெரும்பாலான ஆர்ப்பாட்டங்களில் தங்களின் பங்கு அளப்பரியது அந்தவகையில் உங்களது மனநிலை எப்படி இருக்கும்---
மன்னார் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அத்தனை பேரணிகள் ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்களில் முடிந்தவரை கலந்துகொள்வேன் இது எனது கடமையாகும். இந்த நல்லாட்சி அரசாங்கமோ வேறு எந்த அரசாங்கமோ வந்தாலும் எமக்கான உரிமைகள் சுகந்திரம் எதுவுமே கிடைக்கப்போவதில்லை என்பது தான் திண்ணம் இருப்பினும் நாம் போராடித்தான் ஆகவேண்டும்.
முக்கியமான 03விடையங்களுக்கு
  • காணமல்போனோர் காணாமல் ஆக்கப்பட்டோர்
  • சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக
  • விதவைகள்(கைம்பெண்) அநாதைகள் மட்டில் இவர்களுக்காகவே காணாமல் போனோர்13000 பேர் மட்டில் இன்னும் சரியான தீர்வுகிடைக்கவில்லை 1986-1990-2009 தொடர்ந்த யுத்தத்தினால் 150000 இலட்சத்திற்கும் அதிகமான மேலான மக்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கு என்ன முடிவுகிடைத்தது.  அந்நியநாடுகளின் ஆள் ஆயூதப்பலத்துடன் இனஅழிப்பு செய்த அரசாங்கம் இன்னும் எமக்கான சரியான தீர்வினை தரவில்லை தரவும் மாட்டார்கள் அவர்கள் எங்களை முற்றாக இலங்கையை விட்டுஅழிக்கவேண்டும் என்றுதான் நினைக்கின்றார்கள் போல இப்படியான தருணத்தில் தான் நாம் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் பேரணிகளால் எமது எதிர்ப்பினை தெளிவுபடுத்துகின்றோம் அது
ஐக்கியநாடுகள் சபைவரை சென்றடைகின்றது எனும் போது மனதுக்கு சற்று உற்சாகமேதவிர மனநிம்மதி இல்லை…

கட்டுக்கரைகுளத்தின் திட்ட முகாமையாளராக 1990-2000 இருந்துள்ளீர்கள்  கட்டுக்கரைக்குளம் பற்றி---
2000 ம் ஆண்டு அரசாங்க அதிபராக குருஸ் ஐயா இருந்த போதுதான் நான் பணியாற்றினேன். கட்டுக்கரைக்குளம் ஆனது இராட்சதக்குளம் என்றபெயரும் உண்டு வடக்கு மாகாணத்தில் கல்ஓயாவுக்கு அடுத்து பெரியகுளம்.
 சுமார் 30000ஏக்கர் காணிக்கு நீர்பாய்ச்சும் அளவுக்கு நீர்வளம் உள்ள குளம். அடைக்கல மோட்டை -6000 ஏக்கருக்கும் பத்து வாய்க்கால் உள்ளது தண்ணீர் அநியாயமாக கடலில் கலக்கின்றது அதை தடுத்து அணைகட்டினால் அகத்திமுறிப்பு பகுதியில் உள்ள 50 குளத்திற்கும் நீர் கிடைப்பதோடு தண்ணீர் பிரச்சினையுள்ள சிலாபம்-முள்ளிக்குளம்-அரிப்பு போன்ற கிராமங்களுக்கும் தண்ணீர் வளங்கலாம் தற்போது குழாய் மூலம் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படகின்றது.
 அந்தநேரத்தில் எனக்கும் கிளிநொச்சி இரணைமடுக்குளத்திற்கும் முகாமையாளருக்கும் முரண்பாடுவரும் எமது கட்டுக்கரைக்குளம் தான் சிறந்தது என்று கதைப்பேன் தற்போது உள்ள நிலையில் இரணைமடுக்குளம் பல அபிவிருத்திப்பணிகள் மூலம் விரிவடைந்து வருகின்றது அதன் ஆழம் 25-30 அடியாகவுள்ளது எமது கட்டுக்கரைக்குளத்தின் ஆழம் வெறும் 10-13அடிதான் திருத்தப்பணிகள் தொடர்ந்தால் சும்மா கிடக்கின்ற விவசாயக்காணிகள் விவசாயம்மேற்கொண்டு வளம் பெறலாம் அல்லவா யார் இதை உணரப்போகின்றார்கள்…..

கட்டுக்கரைக்குளப்பகுதிக்குள் தொல்பொருளியல் ஆய்வு  என்கின்றார்களே அது பற்றி-----
நான் பணிபுரிந்த காலத்தில் எதுவும் இல்லை தற்போது தான் தொல்பொருள் இருப்பதாக  அகழ்வது ஆச்சரியமான செயல் தான் சந்தேகம் உள்ளதுதான் வடகிழக்குப்பகுதிகளில் காணி அபகரிப்பானது நடைபெற்றுவருவது யாவரும் அறிந்ததே தற்போதைய சு10ழலில் உலகநாடுகள் அவதானிக்கின்றது காணி பொலிஸ் அதிகாரங்கள் வடமாகாணசபைக்கு வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றது அதற்கு சம்மதமளிக்கும் முன்பு
காணிகளை பின்வரும் வரையறைக்குள் கொண்டுவருகின்றார்கள்
  • வனவளத்துக்குதொந்தமானது
  • பறவைகள் விலங்குகள் சரணாலயம்
  • குளப்பகுதிகள் ஏனைய இடங்கள் தொல்லியல் பகுதிக்கு உட்பட்து
  • கடல்களையும் அந்தவகையில் 
  • விடத்தல் தீவு நீண்ட கடல்மைல் தூரத்தினை ஆய்வு பகுதியாகவும்  குறிப்பிட்டு அதற்கான படங்களை வரைந்து ஆவணப்படுத்தினால் அதை மத்தியஅரசாங்கம் பெற்றுக்கொள்ளும் அதன் பின்பு வடமாகாணத்திற்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை அதிகாரமும் இல்லை ஒன்றும் செய்ய முடியாது இந்த வேலைதான் தற்போது மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.

ஒரு ஊடகவியலாளனுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் பற்றி---
  • ஒரு ஊடகவியலாளன் துணிவுள்ளவனாகவும் நேர்மையாளனாகவும் இருக்கவேண்டும்.
  • பக்கச்சார்பு இல்லாமல் உண்மையானதும் தெளிவானதும் நம்பகத்தன்மையானதுமான செய்திகளை வழங்கவேண்டும்
  • தனது தேசத்தினதும் இனத்தினதும் அக்கறையுள்ளவனாக இருக்கவேண்டும்.

உங்களது ஆசை ஆது நிறைவேறியதா….
முதலே கூறினேன் இல்லை….எனது ஆசையெனும் போது பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றஉறுப்பினராக வரவேண்டும் என்று நினைத்தேன் அதற்காக எனது அரசாங்க வேலையினையும் இராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்றேன் தோற்றுப்போனேன் எனது ஆசையும் தோற்றுப்போனது. 2000-2017 இன்று வரை 17 ஆண்டுகள் எனது கட்சியும் எனக்கு இடம் தரவில்லை ஆனால் நான் எனது கட்சிக்காகவும் மக்களுக்காகவும் குரல்கொடுத்த வண்ணம் தான் உள்ளேன்.

தற்போதைய உங்களுடைய இலக்கு எனும் போது---
மக்களின் தேவைக்காக தொடர்ந்து குரல்கொடுப்பேன் அத்தோடு வரவிருக்கின்ற மாகாணசபைத்தேர்தலில் உறுப்பினர் பதவிக்காகபோட்டியிட்டு வெல்லவேண்டும் என்பது எனது இலக்கு அதற்கு எனது மக்கள் தான் உதவவேண்டும் இறைவனின் ஆசீர்வாதமும் இருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றி---
வடகிழக்கு பொறுத்தமட்டில் அபிவிருத்திகள் நடைபெறுகின்றது உண்மைதான் உண்மையான அபிவிருத்தி என்றால் அது கல்வியில் தான் உள்ளது அதை நன்கு உணர்ந்த மாவட்டமாக உள்ளது யாழ்ப்பாணம் தான் கல்வியின் நிலை பார்த்தால் உண்மைநிலை புரியும் அதற்கான அத்திவாரம் அமைத்துள்ளார்கள் எங்கள் மன்னார் அபிவிருத்தி என்றால் அது கல்வியில் இருந்துதான் ஆரம்பிக்கவேண்டும் அது இன்னும் எமது மன்னார் இளைஞர்யுவதிகளுக்கு புரியவில்லை அரசஅதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரியவில்லை எல்லோரும் கல்வி கற்றுக்கொள்ளவேண்டும்.
கலவிசார் பல்கலைக்கழகம் தொழிநுட்பக்கல்லூரிகள் பயிற்சிக்கூடங்கள் இருக்கின்றதா....... என்றால் இல்லை இருக்கும் ஒரு தொழிநுட்பக்கல்லூரி முருங்கனில் உள்ளது அது சரியாக இயங்குகின்றதா…???

மன்னார் மக்களின் பொருளாதாரம் பற்றி---
மன்னார மக்களை பொறுத்தமட்டில் இரண்டு தொழில்பாடுதான் ஒன்று கடற்தொழில் மற்றது விவசாயம் இந்த இரண்டும் தற்போது மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளது. கடற்தொழில் புரிபவர்கள் அந்தக்காலத்தில் கோடிஸ்வரர்களாக இருந்தார்கள் தற்போது இந்திய மீனவர்களின் வருகையும் தென்னிலங்கை மீனவர்களின் வருகையாலும் பாதிக்கப்பட்டு துன்பப்படுகின்றார்கள் அதுபோலவே விவசாயம் செய்பவர்கள் மழையின்மையாலும் இரசாயன உரத்தினாலும் நிலம் வறண்டு மிகவும் பாதிப்புள்ளாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் எமது பிரதிநிதிகள் மிகுந்த கவனத்துடன் நிதானமாக செயல்படவேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள் உணரவேண்டும் மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்.

தற்கால இளைஞர்யுவதிகளின் தற்போதைய நிலை பற்றி---
தற்போதைய நவநாகரீக இளைஞர் யுவதிகளைப்பற்றி செல்வதென்றால்  கொள்ளை கொலை கற்பழிப்பு சூழலில் வன்முறைச்சம்பவங்கள் அனைத்திலும் ஈடுபடுகின்றார்கள் கட்டுக்கடங்காமல் மனிதாபிமானற்று விழுமியங்களை மறந்து சீரழிகின்றார்கள் சீரழிக்கப்படுகின்றார்கள் எமது விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் எப்படி இளைஞர் யுவதிகள்  இருந்தார்கள் மனிதமாண்பும் ஒழுக்கவிழுமியமும் பண்பும் எப்படியிருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும் வெள்ளைக்காரனே வியந்தவன் தமிழனின் ஒழுக்கவிழுமியங்களைப்பார்த்து.  தற்போது சர்வதேசமெங்கும் நாறுகின்றது எமது இளைஞர்யுவதிகளின் செயல் கலாச்சாரத்தினை கேள்விக்குறியாக்கியுள்ளது. மீண்டும் பழைய நிலைக்கு வரவேண்டும் அதற்கு சுயசிந்தனை கல்வியின் மதிப்பு ஒழுக்கம் வெளிப்படவேண்டும்.
   
தங்கள் கலந்து கெண்ட பயிற்சி வகுப்புக்கள் பற்றி----
  •  The National Milk Board  Of  Eeylon 19
  •  Inter Cooperation-2 
  • Institutional Development & Organizational  Stregthening(CD-SO)2 Nanatan Mannar 18-241996 16-201997 
  • Safty Traning For Juranalist Work Shop18-20-07-2014 
  • Jurnanilisem&Truma Trining Work Shop Anurathapura-25-26-2010
  • Diploma In Hunam Rights  6months Colombo
  • Peoples Counciling Seminer 22-23-01-2005 
  • Diploma In Public Management-1990/1991(Sri Lanka Instituete Of  Development Administration)
  •     தேசிய ரீதியில் போதைவஸ்த்து பயிற்சிப்பட்டறை-11-15-2003
  •    மனித உரிமைகள் பயிற்சிப்பட்டறை 25-27-01-2001
  •  மொழிக்கற்கை நெறி –கிழக்குப்பல்கலைக்கழகம் ஒலுவில் 
  • DRC-Danish Refugee Councial-2004
  • திட்ட முகாமைத்துவப்பயிற்சி பட்டறை 29-02-08-03-1996
  •  தொடர்பாடல் பயிற்சிப்பட்டறை-09-10-2004 
  • South Aasia Management Devalopment-22-09---02-10-1997
  • SAARC-Journalist Sumnit 30th -07-1-2008 
  •  Dairy Husbandary 1Year Course
  • Media Skils  Development Seminer 
  •  Programe Of  Covearg Of  Natured&Disusters 28-29th -2005
  • Convertion On Biological Diversity Work Shop 15-19-2-2001 
  • The Fedeal Idea 23-26-08-2004 -சமஷ்டி ஆட்சி கருத்தரங்கு
Disappeared Human Rights  Journalism For Lerence-2007
  •  மனித உரிமைகள் ஆராய்ச்சி கட்டுரைகள்
  • காணிசெயலணி தொடர்பானபயிற்சிப்பட்டறை-திருகோணமலை 2005
  •  வங்காலை சிரமான இயக்கம் தேசிய அபிவிருத்தியில் இளைஞர் பங்கு18-22-09-1978
  •  காணாமல் போனோர் தொடர்பான பயிற்சிப்பட்டறை-7-8-06-2008 கொழும்பு
  •  கிராமிய அபிவிருத்திப்பயிற்சி-15-21-02-2003
  •  எயிட்ஸ் சர்வதேச மாநாடு 8thInternational Congress On Aids In Asia And the Pacifice 23-08-2007
  • சர்வதேச வனவள மாநாடு-18-10-2016
  • போதை வஸ்த்து பயிற்சிப்பட்டறை 20-21-03-2003
  • தண்ணீர் சேமிப்பு பயிற்சிப்பட்டறை 2003


தாங்கள் பெற்றுக்கொண்டவிருதுகள் பட்டங்கள் பற்றி--- 

எனதுசேவையினை பாராட்டி பொன்னாடைபோர்த்தி விருகளும் தந்துள்ளார்கள் அவைகள்.
  • அகில இலங்கை சமாதான நீதவான்
  • “சாமசூரி”சமாதானத்திற்கான விருது-2007 சாமசேவய நிலையம் கொழும்பு.
  • ஆளுநர் விருது-2009-வடமாகாண கல்விபண்பாட்டு அலுவலகம்
  • கலாபூஷணம் விருது-15-12-2010 கலாச்சார கலை அலுவல்கள் அமைச்சு
  • அனர்த்த முகாமைத்துவ விருது-26-12-2006(ரெட்ணசிறி விக்ரமநாயக்க அனர்த்தமுகாமைத்துவ அறிக்கைக்காக )
  •  செஞ்சிலுவைச்சங்கம் சேவை நினைவுச்சின்னம்-2009
  • மன்னார் பிரதேச கலைஇலக்கிய விழா-2008 கலைஞர் கௌரவிப்பும் சிறந்த ஊடகவியலாளர் கௌரவிப்பும்
  •  மன்னார் தமிழ்ச்சங்கம் செம்மொழிவிழாவில் நினைவுச்சின்னம்-2010
  • 2005ம் ஆண்டு ஐக்கியநாடுகள் சுற்றாடல் தினத்தன்று சுற்றாடலை மரநடுகையை மன்னார் மாவட்டத்தில் ஊக்குவித்தமைக்காகதங்கப்பதக்கம்.
  •  2005ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டிலும் 2007ம் ஆண்டு மலேசியா நாட்டிலும் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டார்.
  • தேசிய கலை இலக்கியவிழா கட்டுரைப்போட்டி 3ம் இடம்-2007
  • USAID Buessness Management Award-2007 
  • Asian Cities Against Drugs(ASCAD) Conference 12-15-2005 Phlippince
  • International Conference On Asian Cities Againist Drugs 3-7-10-2004 Melaka Malasiya 
  • Untide Nations World Envirmental (PDF) Peace Develapment Fedaration 25-06-2005

தாங்கள் சேவைசெய்யும் அமைப்புக்களைப்பற்றி----
  • •    மன்னார் சமாதான அமைப்பின் தலைவர்
  • •    மன்னார் பிரiஐகள் குழுவின் செயலாளர்
  • •    மன்னார் செஞ்சிலுவைச்சங்க ஆளுநர் சபை உறுப்பினர்
  • •    மன்னார் தமிழ்சங்க ஆளுநர் சபை உறுப்பினர். இன்னும் பல அமைப்புக்களின் அமைப்புக்களிலும் உறுப்பினராகவும் தொண்டனாகவும் இருந்து சேவையாற்றுகின்றேன்.

மன்னார் மாவட்டத்தின் பிரதிநிதியாக மக்களின் குறைகளை நிறைகளை வெளிக்கொணரும் நியூமன்னார் இணையம் பற்றி---

உண்மையில் மன்னார் மாவட்டத்தின் பிரதிநிதி என்றே சொல்லலாம் ஏன் என்றால் மன்னாரில் நடக்கின்ற விடையங்களையும் கலைஞர்களையும் அபிவிருத்திப்பணிகளையும் உடனுக்குடன் வெளிக்கொணரும் சேவையைசெய்கின்ற நியூமன்னாரின் பணி அளப்பரியது பாராட்டுக்குரியது அத்தோடு என்னை வீடுதேடிவந்து செவ்வி கண்ட கஜேந்திரனாகிய உமக்கும் உமது நியூமன்னார் இணையக்குழுமத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சந்திப்பு-வை.கஜேந்திரன்-   




 




















விம்பம் பகுதியில்....கலாபூசணம் P.A.அந்தோனி மார்க் Reviewed by Author on June 17, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.