அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாடசாலை மாணவி மீது ஆசிரியர் துஸ்பிரயோகம்- தட்டிக்கேட்ட ஆசிரியர் ஒருவருக்கு தற்காலிக இடமாற்றம்.???-Photos

மன்னார் மடு வலயக்கல்விப் பணிமனைக்குற்பட்ட  அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஒன்றில்  தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை குறித்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கினார் என்ற சம்பவம் தொடர்பில், குறித்த சம்பவத்தை நேரில் கண்டு உரிய அதிகாரிகளிடம் தெரிவித்த அதே பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவரை மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் திடீர் இடமாற்றம் வழங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் மடு வலயக்கல்விப் பணிமனைக்குற்பட்ட ---- அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை குறித்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் நீண்டகாலமாக துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வருகின்றார் என்ற சம்பவத்தை அறிந்து கொண்ட குறித்த பாடசாலையில் கல்வி கற்றுக்கொடுக்கும் பிறிதொரு ஆசிரியர் ஒருவர் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

எனினும் குறித்த துஸ்பிரயோக சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் மடு வலயக்கல்விப் பணிமனை அதிகாரிகள் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலையில் குறித்த துஸ்பிரயோக சம்பவத்திற்கு நீதி கோரும் வகையில் சம்பவத்தை நேரில் கண்ட ஆசிரியர் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி கடந்த 19 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்த நிலையில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட மாணவியின் பிரச்சினையை மூடி மறைக்கும் வகையிலும்,துஸ்பிரயோகத்தை மேற்கொண்டதாக கூறப்படும் ஆசிரியர்,அதனை மூடி மறைக்க முற்பட்ட பாடசாலை அதிபர் ஆகியோரை காப்பாற்றும் வகையில் மடு வலயக்கல்விப் பணிப்பாளர் செயற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் குறித்த துஸ்பிரயோக சம்பவத்தை நேரில் கண்டு உரிய தரப்பினரிடம் தெரிவித்த ஆசிரியரை  மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் திடீர் இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை(22) முதல் மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும், ஏற்கனவே தாங்கள் கடமையாற்றிய பாடசாலைக்கு எதிராகவும், பாடசாலை செயற்பாடுகளை குழப்பும் வகையிலும் செயற்பட்டுள்ளமை
உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையினால் தாங்கள் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் அனுப்பியுள்ள திடீர் இடமாற்றக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர்
எல்.எம்.வெனிற்றன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,

தற்போது இடமாற்றப்பட்டுள்ள ஆசிரியர் பாடசாலையில் உள்ள மாணவர்களை ஆசிரியர்களுக்கு எதிராக துண்டி விட்டு முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த துஸ்பிரயோக சம்பவம் தொடர்பாக அவ் ஆசிரியர் கடந்த 12 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் எனக்கு தெரியப்படுத்தினார்.
குறித்த ஆசிரியர் என்னிடம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்து நான் 13 ஆம் திகதி தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வந்தேன்.

இந்த நிலையில் குறித்த ஆசிரியர் 16 ஆம் திகதி பாடசாலை அமைந்துள்ள ஊர் பகுதிக்குள் சென்று குறித்த பிரச்சினைக்கு இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டம் ஒன்றை 19 ஆம் திகதி முன்னெடுக்க வேண்டும் என மக்களிடம் அழைப்பு விடுத்துள்ளமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக 18 ஆம் திகதி பொலிஸார் எனக்கு தெரிவித்தனர்.

எனினும் 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் எவையும் இடம் பெறக்கூடாது எனவும் நாங்கள் அங்கே வருகின்றோம் என நான் அடம்பன் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.

இந்த நிலையில் 19 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற பாடசாலைக்கு முன் பொலிஸார் சென்று ஆர்ப்பாட்டத்தை நிறுத்த முயற்சி செய்தனர்.

இதன் போது குறித்த ஆசிரியர் பிறிதொரு நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பெற்றோர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தூண்டி விட்டுக்கொண்டிருந்தார்.

தொடர்ந்தும் குறித்த ஆசிரியர் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் பொலிஸார் எச்சரித்து அவரை பாடசாலைக்குள் அனுப்பி விட்டனர்.

தொடர்ந்தும் குறித்த ஆசிரியர் வண்முறையை ஏற்படுத்திய நிலையில் அவர் வழங்கிய வாய் மூல முறைப்பாடுகளுக்கு அமைவாக மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் குறித்த ஆசிரியர்கள் உற்பட சிலருக்கு திடீர் இடமாற்றத்தை வழங்கினோம்.

எனினும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி தனக்கு அப்படி எதுவித சம்பவமும் இடம் பெறவில்லை என அடம்பன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் நாங்கள் குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய விபரங்களை சேகரித்து நாங்கள் உடனடியாக மாகாணத்திற்கு அனுப்பியுள்ளோம்.
சட்ட வைத்திய அதிகாரி(ஜே.எம்.ஓ) அவர்களின் பரிசோதனை அறிக்கையே எமது அறிக்கை.

அந்த வகையில் மாணவி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படவில்லை என்ற பதில் அறிக்கையூடாக கிடைத்துள்ளது.
குறித்த மாணவி 18 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி பாரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
19 மற்றும் 20 ஆம் திகதி வரை குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.20 ஆம் திகதி மாலை 3 மணியளவில் குறித்த மாணவி வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

21ஆம் திகதி குறித்த மாணவியை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டோம்.அதற்குள் பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்று விட்டது.

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் ஆரிசியரை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸார் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக தெரிவித்த குறித்த ஆசிரியர் எங்களிடம் வழங்கி வாய் மூல வாக்கு மூலம் மற்றும் குறித்த பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை ஆகியவற்றை கருத்தில் கொண்டே குறித்த ஆசிரியருக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எல்.எம்.வெனிற்றன் மேலும் தெரிவித்தார்.



மன்னாரில் பாடசாலை மாணவி மீது ஆசிரியர் துஸ்பிரயோகம்- தட்டிக்கேட்ட ஆசிரியர் ஒருவருக்கு தற்காலிக இடமாற்றம்.???-Photos Reviewed by NEWMANNAR on June 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.