அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் யுவதிகளுக்கான உயர்கற்கை நெறி உத்தியோக பூர்வமாக ஆரம்பம்.....



வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களினால் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் அவர்களிடம் கேட்கப்பட்ட  கேள்வியானது மன்னாரில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகத  மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பினை ஏற்படுத்த உயர் கல்வி நிலையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கேள்விக்கு...?  விடையாக கல்வி அமைச்சரின் அனுமதியுடன்   பாராளுமன்ற உறுப்பினர்  இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் அயராத முயற்சியால் இன்று உத்தியோக பூர்வமாக மன்னார் நகரசபை மண்டபத்தில்....
இன்று  09-06-2017 காலை  10-30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

SLIATE-Sri Lnaka Institue Advanced Technological Education.

இன்று ஆரம்பமான ATI-Advanced Technological Institue உயர்கற்கை நெறிக்கல்வியாக
  • HND ENGLISH
  • HOTEL MANAGEMENT
இனிவருங்காலத்தில் தொடர்ந்து
  • HND MANAGEMENT 
  • IT 
கற்கை நெறிகள் நடைபெறவுள்ளதோடு தற்போது தலைமன்னார் வீதியில் உள்ள ஆங்கிலவள நிலையத்தில் கற்கை நெறிகள் நடைபெறும். விரைவாக தனியாக  புதிய கற்கை நிலையத்திற்கான அடிக்கல் நடப்படும்.

இவ்நிகழ்வுக்கு....
 பாராளுமன்ற உறுப்பினர்  இ.சாள்ஸ் நிர்மலநாதன்
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்
பிரதேசசெயலாளர் திரு.பரமதாசன்
வலையக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன்
கல்வி அமைச்சின்  உயர்கற்கை நெறிச்செயலாளர் திரு.சில்வா இவர்களுடன் கற்கை நெறிமாணவர்கள் ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.










மன்னார் இளைஞர் யுவதிகளுக்கான உயர்கற்கை நெறி உத்தியோக பூர்வமாக ஆரம்பம்..... Reviewed by Author on June 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.