அண்மைய செய்திகள்

recent
-

பெரிய பண்டிவிருச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத்தை திறந்து வைத்தார் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா-(படம்)

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டம் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள மன்-பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய வகுப்பறைக்கட்டிடத்தை இன்று செவ்வாய்க்கிழமை(6) காலை இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

-ஐ.நா. வதிவிட நிறுவனத்தின் அமுல்படுத்தலின் கீழ், 'மன்னார் மாவட்டத்தில் கற்றல் சூழ்நிலையை மேம்படுத்தும் சமூக இயக்கத்தின் ஊடாக நிலைத்து நிற்கக்கூடிய மீள் குடியமர்தல்' எனும் திட்டத்தினூடாக அமைக்கப்பட்ட குறித்த பாடசாலை கட்டிடம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

-பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்ற குறித்த திறப்பு விழா நிகழ்வின் போது ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா, தூதரின் பாரியார் அகிகோ சுகனுமா,ஜப்பானிய தூதரகத்தின் செயலாளர் சுகுரு இரியமா,ஐ.நா. வதிவிடத்தின் இலங்கைக்கான நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஜணக தல்பஹிவா, மடு வலயக்கல்விப்பணிப்பாளர் எல்.மாலினி வெனிற்ரொன்,மடு பிரதேசச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.

மன்-பெரிய பண்டிவிரிச்சான் ஆரம்ப பாடசாலையில் தரம் 1 முதல் தரம் 5 வரை சுமார் 126 மாணவர்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி கடந்த காலங்களில் ஓலையினால் வேய்ந்த வகுப்பறையில் கல்வி கற்று வந்தனர்.

ஆசிரியர்களும்,மாணவர்களும் பல்வேறு இடர்களை சந்தித்து வந்த நிலையில் ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் புதிய வகுப்பறைக்கட்டிடம் உள்ளிட்ட சகல விதமான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














பெரிய பண்டிவிருச்சான் ஆரம்ப பாடசாலையில் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத்தை திறந்து வைத்தார் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் கெனிச்சி சுகனுமா-(படம்) Reviewed by NEWMANNAR on June 06, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.