அண்மைய செய்திகள்

recent
-

சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களை உருவாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சவேரியார்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடையம் தொடர்பாக சவேரியார்புரம் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சவேரியார் புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வளவு காலமும் எமது கிராமத்தில் உள்ள மக்கள் அன்பும்,ஒற்றுமையுடனும் வாழ்ந்து வந்தார்கள்.மக்களுக்குள் பொது,சமூக,மத வேறுபாடுகள் என்றும் இருந்ததில்லை.

ஆனால் தற்போது முசலி பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேசச் செயலாளர் ஒரு கிராமத்தில் இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களை உருவாக்க கூறியதினால் இரண்டு மதங்களுக்கிடையில் முருகல் நிலை ஏற்பட்டுள்ளது.

-புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கத்தில் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களை மாத்திரம் இணைத்துக்கொண்டு புதிய சங்கம் உருவாக்கும் ஆரம்ப கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது.
-குறித்த புதிய சங்கத்தில் சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில் மட்டும் இல்லாமல் சிலாபத்துறை கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஒரே மதத்தைச் சேர்ந்த சகோதரர்களையும் இணைத்து இவ் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

-புதிதாக அமைக்கப்பட்டுள்ள சங்கத்தில் உள்ளவர்கள் சிலர் எமது கிராமத்தில் உள்ள ஏனைய சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

-குறிப்பாக சவேரியார்புரம் மீனவர் கூட்டுறவு சங்கத்தில் கடன் உதவிகளையும் பெற்றுள்ளனர்.

-இவ் அங்கத்தவர்களே தற்போது தனியான கிராம அபிவிருத்திச் சங்கத்தை உருவாக்க முசலி பிரதேசச் செயலாளரினால் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர்.

-எனவே புதிதாக எமது கிராமத்தில் உருவாக்கப்படவுள்ள கிராம அபிவிருத்திச்சங்கத்தினால் ஏற்படவுள்ள முண்;பாடுகளை நிறுத்தி மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்படவுள்ள கிராம அபிவிருத்திச்சங்கத்தை தடை செய்வதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த கடிதத்தின் பிரதிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவேரியார்புரம் கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு கிராம அபிவிருத்திச்சங்கங்களை உருவாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு Reviewed by NEWMANNAR on June 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.