அண்மைய செய்திகள்

recent
-

லண்டனில் நடைபெற்ற தமிழ் குறுந்திரைப்பட விழா!

லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்றைய தினம் (17.06.17) மாலை 5 மணியளவில் விம்பம் அமைப்பினரால் சர்வதேச குறுந்திரைப்பட விழா நடைபெற்றது.

கடந்த 8 வருடங்களாக தொடர்ந்து நடத்திவரும் விம்பம் அமைப்பினர் 9வது குறுந்திரைப்பட விழாவை நேற்றைய தினம் சிறப்பாக நடத்தியிருந்தனர்.

விம்பம் அமைப்பின் நிறுவனரான ராஜா அவர்களும் ஒரு பன்முகத்தன்மை வாய்ந்த ஈழத்து தமிழ் கலைஞர்.

அவர் வருடம்தோறும் இக் குறுந்திரைப்பட விழாவை நடத்தி பல ஈழத்து தமிழ் கலைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.

அவர் விரும்பியிருந்தால் இந்திய சினிமாவுக்கு விழா எடுத்திருக்கலாம். அவர் நினைத்திருந்தால் இந்திய சினிமா நடிகர்களை வரவழைத்து பரிசு வழங்கியிருக்கலாம்.

அல்லது கூட்டம் சேர்க்க வேண்டும் என்று காரணம் கூறி இந்திய சுப்பர் சிங்கர் பாடகர்களையாவது வரவழைத்திருக்கலாம்.

ஆனால் அவை எதையும் அவர் இதுவரை செய்யவில்லை. மாறாக ஈழத்து தமிழ் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக குறுந்திரைப்பட விழாவை நடத்தி வருகிறார்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எந்தவித விட்டுக் கொடுப்பிற்கும் இடங்கொடாது அவரும் அவருடைய நண்பர்களும் இந்த விழாவை செய்து வருகின்றனர்.

மண்டபம் நிரம்பிய கூட்டம். அத்தனைபேரும் அமைதியாக இருந்து திரையிட்ட படங்களை எல்லாம் ரசித்தமை. விம்பம் அமைப்பிற்கு கிடைத்த பெரு வெற்றியே.

இந்தியாவின் கலை இலக்கிய கலாச்சார ஆக்கிரமிப்புக்கு எதிராக விம்பம் அமைப்பு மேற்கொள்ளும் பணிகள் காத்திரமானவை என்பதை ஈழத்து கலை இலக்கிய வரலாறு பதிவு செய்யும்.

அதற்கு மக்கள் வழங்கும் ஆதரவு என்பது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

Balan tholar


WINNERS
=============
Vimbam Award 2017
9th International Tamil Short Film Festival
---------------------------------
Best Child Artist
Christyantony Janusan 
(Panthu) Sri Lanka
---------------------------------
Best Actress
Nigitha Reegan
Pookalai Koiyatheergal France
---------------------------------
Best Actor
Francis Uls Colin
Border -Sri Lanka
---------------------------------
Best Script
Thillaiampalam Suthakaran
(Ma Thi Sutha) 
Pathuhai - Sri Lanka
---------------------------------
Best Editor
Pratheepan Selvaratnam
Sarukuveli
Sri Lanka
---------------------------------
Best Cinematographer 
Sivalingam Sivaraj
Aramuttukai - Sri Lanka
---------------------------------
Best Director
Pratheepan Selvaratnam
Sarukuveli - Sri Lanka
---------------------------------
Overall Best Film
Panthu
Ma Thi Sutha - Sri Lanka
---------------------------------
Best Film Audience
Border
Theneswaran Shamithan - Sri Lanka


`விம்பம்` 9 ஆவது சர்வதேச தமிழ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட குறுந்திரைப்படங்களில் இருந்து......
01. பூக்களைக் கொய்யாதீர்கள் - M. Baskar
02. செருக்களம் - S. Sivaraj
03. Border - T. Shamitjhan
04. Your Destination - J. Sathis
05. அறன் - Prem Kathir
06. பந்து - i MaThi Sutha
07. Bilboquet - B. Surendran
08. அறமுற்றுகை - Mayan Kanthan
09. பாதுகை - Ma Thi Sutha
10. சருகுவெளி - S. Pratheepan
11. Cèrès - Sathapranavan
12. சனம் - Kamalakkannan
13. பிழை - S. Sabarivasan
14. To Let - K. J. Hashmi









லண்டனில் நடைபெற்ற தமிழ் குறுந்திரைப்பட விழா! Reviewed by NEWMANNAR on June 19, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.