அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெரியகடை குடியிருப்புபகுதியில் உள்ள மதுபானசாலை அகற்றப்படுமா...மக்கள் துயரில்


மன்னார் மாவட்டத்தின் பெருமையை இழக்கச்செய்கின்ற சிலகாரணங்களில்
மிகவும் முக்கியமான இடத்தை பெறுகின்றது மதுபானசாலைகளும் அதன் மிதமிஞ்சிய பாவனையும் போதைவஸ்த்து பாவனையும் ஆகும்.
 மன்னாரில் பல மதுபானசாலைகள் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தாலும் பல பாரிய விளைவுகள் தினம் தினம் நடைபெறுகின்றதது என்றால் இங்கே எமது மத்தியில் அதாவது பெரியகடை உப்பள வீதிப்பகுதியில் நகரப்பகுதியில் இருந்து 75மீற்றர் சுற்று வட்டத்திற்குள் பெரியகடை உப்பள வீதியில் மக்கள் குடியிருப்பில்  கிராமத்திற்குள் அமைந்து இருக்கின்றது.
லக்ஸ்மன் மதுபானசாலை.................
  • கல்வி நிலையம் 75 மீற்றர்
  • மீனவசமாசம் 50 மீற்றர்
  •  மாதர்சங்கம் 50 மீற்றர் 
  • பொலிஸ்நிலையம் 100 மீற்றர் 
  • இந்துக்களின் வழிபாட்டுத்தளம் ஞானவைரவர் கோவில் 100 மீற்றர்  முஸ்லீம்களின் வழிபாட்டுத்தளமான பெரிய பள்ளிவாசல் 150 மீற்றர்   உள்ளடக்கியதாக நடுவில் இருக்கின்றது இந்த மதுபான சாலை.

இந்த மதுபானசாலையை அகற்றக்கோரி மன்னார் மாதர்சங்கமும் மீனவசமாசமும் இரண்டு தடவைகளுக்கு மேல் பாரிய ஆர்பாட்டத்தினை மேற்கொண்டபோதும் மகஜர்களை அரசாங்க அதிபரிடமும் பிரதேச செயலாளரிடமும் பாராளுமன்ற உருப்பினர்கள் அமைச்சர்கள் பலரிடம் பல முறை கையளித்த போதும் எந்தப்பலனும் இல்லை இதனால் தினமும் தொல்லை.


மாலை 06 மணிக்கு பின்பு ஆண்கள் அந்த வழியால் போவதே பயங்கரம் அவ்வாறிருக்க பெண்கள் சிறுவர்கள் வெளியில் வரமுடியாத நிலை...... வீட்டுக்குள்ளும் இருக்கமுடியாது. இருந்தால் காதில் பஞ்சு தான் அடையவேண்டும் அவ்வளவிற்கு கெட்ட தூஷன வார்த்தைகள் தவறான சொற்பிரயோகங்கள் இதனால் மாணவர்கள் இரவினில் படிக்கமுடியாத நிலையும்  பக்கத்தில் உள்ள கல்வி நிலையத்திற்கும் செல்ல முடியாத நிலை....
 பல சமயங்களில் போதை தலைக்கேறியதும் நிர்வாணமாக ஆடுவதும் கத்திப்பாடுவதும் சாரயப்போத்தல்களை நடுவீதியில் போட்டு உடைப்பதும் விடிய விடிய நடக்கும் அட்டகாசத்தினால் விழித்தபடியே இருக்க வேண்டியுள்ளது. எந்த நேரத்திலும் போதையில் வேலியை பிரித்துக்கொண்டு வீட்டுக்குள் வந்துவிடுவார்கள் என்ற பயஉணர்வுடன் நரக வாழ்க்கைதான் வாழ்ந்து வருகின்றோம்.

எமது மன்னார் மாவட்டத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் உயர்அதிகாரிகள் கையாலாகதவர்களாகவே இந்த விடையத்தில் உள்ளார்கள்.
 நல்லாட்ச்சி அரசாங்கத்திலும் மக்களுக்கு இந்த நிலைதானான தேர்தல்காலங்களில் வருகின்ற தருகின்ற வாக்குறுதிகளை வென்றதன் பின் காற்றில் பறக்கவிடுவது தான் ஒட்டு மொத்த அரசியல் வாதிகளின் கடமையாகவுள்ளது.
  • மாதர்சங்கமும் மீனவசமாசமும் என்ன செய்கிறது....
  • துடிப்புள்ள இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்....
  • எனைய பொது அமைப்புக்கள் என்ன செய்கிறது....

இந்த மதுபானசாலையினை 75000 ரூபா மாதவாடகைக்கும் மாதத்திற்கு ஒரு இலட்சத்திற்கு மேல் உழைக்கும் அந்த உரிமையாளருக்கும் இந்த மதுபானசாலைக்கு அனுமதிவழங்கியவர்களுக்கும் எங்கு விளங்கப்போகிறது எமது நிலை......
 ஒரு மதுபானசாலைக்கே இந்த நிலையென்றால்  அருகில் இன்னொரு மதுபானசாலையும் வரப்போகின்றது என்ன செய்யப்போகின்றீர்கள்  மக்கள் பிரதிநிதிகளே....???

இவ்மதுபானசாலைக்கு அனுமதி வழங்கியது யார்.....???
  • மன்னார் கச்சேரியா.....
  • மன்னார் பிரதேச செயலகமா....
  • மன்னார் நகரசபையா,,,,,,,
  • அனுமதி இல்லையா....???? அப்படியாயின் எப்படி....???

இந்த மதுபானசாலைக்கு இரவில் வருபவர்கள் பலர்அரசஅதிகாரிகளாகத்தான் உள்ளார்கள் அதுவும் அரசாங்க வாகனத்தில் வந்து போகின்றார்கள் சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் வந்து போகிறார்கள் இவர்களின் வருகையால் பாதுகாப்பான மதுவிற்பனையாகும் மதுபானசாலையாக இந்த மதுபானசாலை உள்ளது.

இந்த மதுபானசாலையினால் தினம் தினம் நிம்மதியான தூக்கமின்றி ஒழுங்கான கல்வியின்றி பல குடும்பங்களில் பிரிவு..... முறைகேடான பல சம்பவங்கள் நடந்தேறுகின்றது.

 இப்படியே தொடர்ந்தால் மக்களின் நிலமை மிகவும் பாதிப்படையும் மோசமான நிலையினை தவிர்க்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த மதுபானசாலையை இவ்விடத்தில் இருந்து அகற்றி பிறிதொரு மக்கள் குடியிருப்பற்ற இடத்தினை கொடுத்து பெரியகடை உப்பள வீதிப்பகுதியில் வசிக்கின்ற எம்மக்களின் நிம்மதியான வாழ்வுக்கும் அண்டிய பகுதியில் உள்ள ஏன் மன்னார் மக்களுக்கும் நிம்மதியான சகந்திரமான வாழ்வை வாழவிடுங்கள் இல்லையெனில்......
 குடி குடியை கெடுக்கும் என்பது பழமொழி....
குடியிருப்புக்குள்ளே குடிக்கடை இருக்கும்
என்பது புதுமொழி.....

 சீரழியும் மாணவமணவிகளின் கல்விக்கும்  நடைபெறப்போகின்ற கொடுமையான  நிகழ்வுகளுக்கும் பலரின் இறப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டிவரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
சும்மா எனோ...தானோ...என்று இராமல் உடனே......
மிகவிரைவாக முடிவேடுக்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்...

குறிப்பு-மனிதாபிமான அடிப்படையில் நிர்வாண அலங்கோலப்படங்கள் பிரசுரிக்கவில்லை எங்களின் நோக்கம்  மக்களின் பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே.......


-மன்னார்புயல்-
































மன்னார் பெரியகடை குடியிருப்புபகுதியில் உள்ள மதுபானசாலை அகற்றப்படுமா...மக்கள் துயரில் Reviewed by Author on June 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.