அண்மைய செய்திகள்

recent
-

ஈராக்கில் 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்களுக்கு மரண தண்டனை....


ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாத குழுவில் சேர்ந்த 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பாக்தாத்தில் உள்ள விமான நிலைய சிறைச்சாலையில் உள்ள நான்கு பேரை தூதர்கள் சந்தித்துள்ளனர். ஈராக்கில் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என கூறப்படுகிறது. எனவே, இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈராக் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட பெண்களின் பெயர் பட்டியலை ஜேர்மனியிடம் கொடுத்துள்ள நிலையில், அதில் Linda W என்ற இளம் பெண் Dresden நகரத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

எனினும், இதுகுறித்து ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஐ.எஸ் காட்டுப்பாட்டிலிருந்த மொசூல் நகரை இந்த மாத தொடக்கத்தில் ஈராக் படைகள் தங்களது காட்டுப்பாட்டில் கொண்டு வந்து வெற்றியை அறிவித்தன என்பது நினைவுக் கூறதக்கது

கடந்த ஆண்டுகளில் சுமார் 930 பேர் ஐ.எஸ் குழுவில் சேர ஜேர்மனியிலிருந்து சென்றுள்ளதாக BfV என்னும் உள்நாட்டு புலனாய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

அதில் 20 சதவித பேர் பெண்கள், 5 சதவீத பேர் சிறார்கள் என தெரியவந்துள்ளது. 5 சதவீத சிறார்களில் பாதிப்பேர் பெண்கள் ஆவார்.

ஈராக்கில் 16 வயது சிறுமி உட்பட நான்கு ஜேர்மனி பெண்களுக்கு மரண தண்டனை.... Reviewed by Author on July 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.