அண்மைய செய்திகள்

recent
-

'முதல்வன்' சூரியனுக்கு வயது 19 நாளைக்கு...... !!!

உங்களுக்கு பிடித்த வானொலி எது என்று கேட்டதுமே மறு கணமே கேட்கும் சத்தம் சூரியன் வானொலி . அந்தளவு மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்ட இலங்கையின் முதற்தர வானொலி சூரியன். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை எல்லோரும் அதிகம் விரும்பி சூரியனை தங்களது வீட்டின் செல்லப் பிள்ளையாக அன்போடு வளர்த்து விட்டவர்கள். இன்று வானொலி சரித்திரத்தில் யாராலும் அசைக்க முடியாதவனாய் உயர்ந்து நிற்கின்றான்.

பல  எதிர்பார்ப்புக்களுடன்  மனம் மகிழும், மகிழ்ச்சியான பொழுது போக்கு இன்றி பாலைவனமாய்  காய்ந்து கிடந்த ரசனையை நீர் ஊற்றி வளர்த்து விட்டதில் 1998 ஆம் ஆண்டு எல்லா ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த சாதனை ஆண்டு.

கிழக்கில் சூரியன் உதித்து உலக செழிப்புக்கு காரணகர்த்தாவாக இருப்பது போல்,  இலங்கையின் அதி உயர் கட்டிடமான உலக  வர்த்தக மையத்தின்  கிழக்கு கோபுரத்தின் 35 மாடியிலிருந்து இனிய இசை தந்து  உலகாளுகின்றான் சூரியன். காலங்கள் மாறுகின்ற வேகத்துக்கும்  நவீனத்துவத்துக்கும் தன்னைத் தானே மாற்றிக்கொண்டு இலங்கை வானொலி தரப்படுத்தலில் தொடர்ச்சியான முதல் தரத்தை கொண்டு வீறு நடை போடுகின்றான்  வானலை முதல்வன் சூரியன்.

இலங்கை வானொலி வரலாற்றில் எதை செய்தாலும் அதில் ஓர் பிரமாண்டம்,  சரித்திர சாதனை என்றால் அது சூரியனின் பெயரில் மட்டுமே பதிவாகியிருக்கும். அவ்வாறே ஒவ்வொரு திட்டங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  சூரியன் வானொலியில் ஒரு நிகழ்ச்சியை புதிதாக கேட்டால் மறுகணமே அதை இன்னொரு இடத்தில் கேட்கலாம். அந்தளவுக்கு
​சூரியனால் ஆட்கொள்ளப்பட்டு சூரியனின் பாணியைப் பின்பற்றலை ஏனையோர் தொடர்கின்றனர்.

ஏராளமான புதுமைகள் சொல்லிக்கொண்டே போகலாம்.அவற்றைக்கடந்து இம்முறை பிறந்த நாள் கொண்டாடடத்தில் என்ன புதுமையை சூரியன் தரப்போகின்றான்   என அறிந்து கொள்ள எல்லா ரசிகர்களும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆம்
​,​ இம்முறையும் இரட்டிப்புக் கொண்டாடட்டும் தான் சூரியன் ரசிகர்களுக்கு. ஒரு நாள் முழுவதும் அழைப்பினை ஏற்படுத்தும் அனைத்து சொந்தங்களுக்கும் மிகப் பெறுமதியான பரிசுகளை  பரிசு மேல் பரிசாய்  அள்ளிக் கொட்டப்போகின்றான்.அது மட்டுமா தென்னிந்திய ​நட்சத்திரங்கள் ஒன்றல்ல இரண்டல்ல பத்திற்கும் அதிகமான பிரபலங்கள் இம்முறை சூரிய பிறந்த நாளை நம்முடன் சேர்ந்து நேரடி இசை நிகழ்ச்சி தந்து கொண்டாட  தயாராகின்றனர்.

ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு. ரெய்னோ சில்வா அவர்களின் நேரடி  வழி நடத்தலில் இயங்கும் அதிகளவான ரசிகர்களை கொண்ட  ஐந்து வானொலி சேவைகளில் சூரியனுடன்,ஹிரு,ஷா,கோல்ட்,சன்  மற்றும்  சகோதர தொலைக்காடசி
​ ஹிரு டிவி​  என ஊடக வலையமைப்பு தொடர்கிறது.

சூரியனைப் பொறுத்தவரைக்கும் கடந்த காலங்களில் சூரியனின்  ஆலோசகராக எம்மத்தியில் பரவலாக அறியப்படட ஓர் திறமையாளர், பல கதாநாயகர்களை இலங்கை ஊடகத்துறையில் உருவாக்கி விட்ட  நல் ஆசான்  நடராஜசிவம்  என்ற ஓர் இமயம். சூரியன் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத, அழிக்கவும் முடியாத பெயர்.


ஆரம்பம்  மிக உறுதியாக  இடப்ப
​ட் ​டாலும்  கட்டிடத்தை காத்திரமாக கட்டி முடிக்க வேண்டும் , கட்டி முடித்த கட்டிடத்தை  அழகு குறையாமல் பாதுகாக்க வேண்டும், அந்த கட்டிடத்தை விட உயர்ந்து வளர இன்னும் பல கட்டிடங்கள் ​போட்டியிடலாம்; அந்தப் போட்டிகளை வெற்றிகரமாக முறியடித்து முதற்தரத்திலேயே பேணி வருவதும் மேலும் மேலும் உயர்ச்சி காணச் செய்வதும் நல்ல தலைமையின் அழகு.  இப்படி  இந்த​க் ​ கடமையை மிகக் சிறப்பாக செய்து  இன்று  வரைக்கும் சூரிய ராஜாங்கம் நடத்தி பல உள்ளங்களில் கதாநாயகனாக வலம் வருகின்றார் சூரியனின் பணிப்பாளர் ஏ ,ஆர் ,வி ,லோஷன் அவர்கள். அவருடன் பக்க பலமாக சிரேஷ்ட நிகழ்ச்சி முகாமையாளர் சந்ரு அவர்களும் ,நிகழ்ச்சி முகமையராக டிலான் அவர்களும் உத்வேகம் கொடுக்க சூரிய குடும்பம் மிக பிரகாசமாக ஒளி கொடுக்கிறது.


https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif
சூரியன் அறிவிப்பாளர்களை ஒரு கதாநாயகனாக  சூரியனின் ரசிகர்கள் கொண்டாடுவதும்  இலங்கை வானொலி  வரலாற்றில் என்றால் அந்த தகுதியையும்  உருவாக்கியது சூரியன் தான்.  ரசிகர்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணி  ரசிகர்களை தனது இரும்புத் தூண்களாக கொண்ட வானொலி என்றாலும் மிகை இல்லை. ரிம்ஸாட், நிஷாந்தன்,சூர்யா,தரணிதரன்,ராகவன்,மயூரன்,பிரஷாந்த்,கஸ்ட்ரோ,மணிவண்ணன்,லரீப் ,யசோ,தேவா, கிரி, என பல அறிவிப்பாளர்கள் ஒவ்வொரு நாளும் தன் ரசிகர்களுடன் இணைந்து கொள்கிறார்கள். ஆன் அறிவிப்பாளர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு சூரியன் அறிவிப்பாளினிகளும் சளைத்தவர்கள் அல்ல, மேனகா,வர்ஷி, பிரஷா, கோபிகா,மனோபிரியா,நித்யா,சிந்து என திறமையின் அடையாளங்கள் தொடர்கிறது.
மிக வேகமாக தன் சேவையை நாடு பூராகவும்  வழங்கும் இன்னுமொரு பிரிவு இவர்கள், பலர் இவர்களது சேவைக்காகவே வானொலியுட இணைந்திருப்பார்கள் ஆம் சூரியன் செய்திப் பிரிவு, இந்திரஜித் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பெரும் படையணியை செய்திப் பிரிவில் கடமை புரிகிறது. சூரிய செய்திகள் இப்போது நவீனத்துவம் பெற்று கையடக்க தோலை பேசி வழியே குறுந்தகவல் சேவையையும் ஆரம்பித்து நாங்கள் எங்கு இருந்தாலும் நாட்டில் நடைபெறும் செய்திகளை உடனுக்கு உடன் அறிந்து கொள்வதற்கு வழி வகை செய்து தந்துள்ளது.சிகாமணி ,சதிப்குமார், விக்னேஸ்வரன், ராஜா,பாரதிராஜா,
​தனஞ்செயன், சஞ்சீவன் ஆகியோரை செய்தி ஆசிரியர்களாக கொண்டு  இன்னும் பலர் சூரியன் செய்தி பிரிவில் கடமை  புரிகின்றனர்.

ஒவ்வொரு வெளிக்கள நிகழ்ச்சிகளிலும் சூரியன் சாதிக்கின்றான் என்றால் அதற்கு திடடமிடல் விரிவாக்கல் பிரிவினரின் செயற்பாடு மிக முக்கியமானது. இல
​ட்சக்கணக்கான  ரசிகர்கள் ஒன்று கூடும் சூரியனின் மெகா ப்ளாஸ்ட் நிகழ்ச்சி போன்று  இன்னும் பல நிகழ்ச்சிகளின் செயற்பாடுகளில் முழு மூச்சும், அதன் பொறுப்பாளர்களும்  இவர்கள்  என்றும் சொல்லலாம், ஆசிய ஊடக வலையமைப்பின் நீண்ட கால அனுபவம் கொண்ட உதவி பொது முகாமையாளர்  அஷ்ரப்  அவர்களின் வழி நடத்தலில், உதவி முகாமையாளர் அஜித்,​ கார்த்திக்,​ சுரேன்,​ ஸ்டிபன், ரொஷான், புனிதன், போன்றோர் ரசிகர்களுடன் கூடிப் பழகி ஏனைய வானொலிகளை விட சூரியனின் செயற்பாடுகளை வெற்றியடைய செய்கின்றனர்.

இவ்வாறாக சூரிய சொந்தங்களை  இன்னும்  இன்னும் நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இணைத்துக் கொள்ள எப்போதும் சூரிய சொந்தங்களுக்கு பரிசில்களையும்
​ அள்ளி வழங்குகின்றான். ஏராளனமான பரிசுகளை ஒவ்வொரு விதமாக வழங்கி வந்த சூரியன் கடந்த ஆண்டு முதல் மிக பிரமாண்டமான பரிசு   வழங்கும் தி​ட்​டத்தை வலம்புரி மூலம்  அறிமுகப் படுத்தி எங்கள் சொந்தங்களை மில்லியனராக்கியுள்ளான் சூரியன். அது மட்டுமா உலங்கு வானூர்தியில் சென்று ஆகாய மார்க்கமாக பரிசு ​மழை​ பொழிந்த வானொலியும் சூரியன் மட்டுமே.

இவ்வாறாக எந்த நேரத்தில் எது வேண்டும் என்பதை இனம் கண்டு அவற்றை சரியான முறையில் வழங்கி பெருமளவு மக்கள் அபிமானத்தை வென்றவன் சூரியன், அண்மைக்கால உதாரணங்களாக பலவற்றைக் கூறலாம்,அவற்றுள் ஒன்று பொற்காலப் புதன்.அதிகளவான சூரிய சொந்தங்களின் உயிர் நிகழ்ச்சியாக மாறியுள்ளது. விடுமுறை பெற்று நிகழ்ச்சி கேட்க்கின்றார்கள்,சமையல் அறையில் ஒவ்வொரு பெண்ணும் தவறாமல் கேட்க்கிறார்,அலுவலகத்திலும் ஒலிக்கும் பொற்காலப்புத்தான் என்றால் அதன் பெருமை சூரியனுக்கே.

ஆண்டுகள்  எத்தனை கடந்தாலும் இன்னும் இனிமைகள் தர வேண்டும், புதுமைகள் படைக்க வேண்டும்,  தீரா தமிழ் தாகம் கொண்ட  எங்கள் ரசிகர்களின் தோழனாக தோள் கொடுக்க வேண்டும். என்றும் நீயே முதல்வன்.நாமும் கொண்டாடுகின்றோம்  எப்போதும் போல் இம்முறையும்  எங்கள் வீட்டு பிள்ளையின் பிறந்த நாளை. வானலைகளின் தலைவன்,முதற்தர வானொலி சூரியனுக்கு  இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.





'முதல்வன்' சூரியனுக்கு வயது 19 நாளைக்கு...... !!! Reviewed by Author on July 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.