அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு பிரதேசத்தில் 800 ஏக்கர் காணியை தனி நபர்கள் ஆட்சிப்படுத்த நடவடிக்கை-


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் சுமார் 800 ஏக்கர் காணியை தானிநபர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்துள்ளதாகவும்,தற்போது குறித்த காணியில் வெளிநட்டு நிறுவனம் ஒன்று அண்ணாசிச் செய்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துணை நிற்பதாக மந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இன்று சனிக்கிழமை காலை (29) இடம் பெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் பகுதியில் 1989 ஆம் ஆண்டு 287 ஏக்கர் காணி 650 பேரூக்கு காணி அபிவிருத்தி கட்டளைச்சட்டத்தின் கீழ் பிரித்துக்கொடுக்கப்பட்டது.
-பின்னர் நாட்டில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மக்கள் இடம் பெயர்ந்து சென்றனர்.

-இந்த நிலையில் தற்போது சில தனி நபர்கள் குறித்த காணிகளுக்கான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாக கூறி அப்பகுதியில் உள்ள சுமார் 800 ஏக்கர் காணியினை புதிய அனுமதிப்பத்திரங்கள் தயாரித்து கையகப்படுத்தியுள்ளனர்.

-1972 ஆம் ஆண்டின் காணி சீர் திருத்த சட்டத்தில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை தனியார் வைத்திருக்க முடியாது என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டடிருந்தது.

-இந்த நிலையில் குறித்த பகுதியில் அபகரிக்கப்பட்ட சுமார் 800 ஏக்கர் காணியினை அவர்கள் புதிய ஆவணங்கள் மூலம் ஆட்சிப்படுத்த முனைகின்றனர்.குறித்த காணியில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தற்போது அண்ணாசிச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

-மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளை எல்லையிட்டுள்ள வன வள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அப்பகுதியில் தனியார் சிலர் புதிய ஆவணங்கள் மூலம் காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ள போதும் வன வள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தனியாருக்கு துணை நிற்பதாக நான் கருதுகின்றேன்.

-எனவே மக்களுக்கு மாந்தை மேற்கு பகுதியில் வழங்கப்பட்டுள்ள காணிகளில் தமது எல்லைக்கற்களை போட்டுள்ள வன வள திணைக்களம் உடனடியாக மக்களின் காணிகளை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சுமார் 800 ஏக்கர் காணியை அபகரித்துள்ள தனியார் பக்கம் துணை நிற்கும் வன வளத்திணைக்களம் உடனடியாக மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இவ்விடையத்தில் உரிய முறையில் செயற்பட வேண்டும் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


மாந்தை மேற்கு பிரதேசத்தில் 800 ஏக்கர் காணியை தனி நபர்கள் ஆட்சிப்படுத்த நடவடிக்கை- Reviewed by NEWMANNAR on July 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.