அண்மைய செய்திகள்

recent
-

இராணுவத்தினர் தண்ணீரைப் பயன்படுத்துவதனால் குடிநீர் தட்டுப்பாடு.....


இராணுவத்தினர் அதிகமாக தண்ணீரைப் பயன்படுத்துவதால் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பான வேலைபட்டறை மற்றும் அனுபவ பகிர்வு கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிடடுள்ள அவர்,

எமது மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினைகள் அதிகரித்துச் செல்கின்றன.

அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்த போது, கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்து எமக்கு விளக்கமளித்திருந்தார்கள்.

அங்குபல திட்டங்களை பார்த்துள்ளோம். அந்த திட்டங்கள் குறித்து அரச உத்தியோகத்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில், அவுஸ்திரேலியாவில் சுற்றாடல் அமைச்சு மிக கடுமையான சட்டத்தினையும் நடைமுறைகளையும் கொண்டுள்ளது.

அங்கு சுற்றாடல் பாதிப்படைவதற்குரிய எந்த செயற்பாடுகளையும் அங்குசெய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். எமது நாட்டினை விட மிக இறுக்கமான நடைமுறைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொண்டுள்ளது.

இதேவேளை, சுற்றாடல் மாசடைதல் போன்ற பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தாலும், அவற்றினை மிக வெற்றிகரமாக தீர்த்துள்ளார்கள் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

இராணுவத்தினர் தண்ணீரைப் பயன்படுத்துவதனால் குடிநீர் தட்டுப்பாடு..... Reviewed by Author on July 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.