அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் பண்பாட்டை மதபேதமின்றி பின்பற்றுங்கள்

தமிழினம் வாழ வேண்டுமாயின் தமிழர் பண்பாடு வாழ வேண்டும். ஒருவர் தமிழ்மொழியைப் பேசுகிறார் என்பதற்காக அவர் தமிழனாகிவிட முடியாது.

தமிழினம் என்பது தமிழ்மொழி பேசுவதில் மட்டும் தங்கியிருக்கவுமில்லை. மாறாக தமிழனாக வாழ்வதில்தான் தமிழ் இனம் வாழ்கிறது.

தமிழ் இனம், தமிழ் மொழி என்பவற்றின் சிறப்புப் பற்றி பலவாறு நாம் பேச முடியும். தமிழ்மொழியின் பழமையை - பெருமையை ஆதாரங்களுடன் எடுத்தியம்புவதைவிட, தமிழ் மொழி செம்மொழி என்று சொல்வதனூடாக தமிழின் சிறப்பும் தொன்மையும் பெருமையும் இயம்பப்படும்.

தவிர, உலகில் உள்ள மொழிகளை அவற்றின் இயல்பிற்கேற்ப சிறப்பிப்பதுண்டு. அந்த வகையில், தமிழ்மொழி பக்தி மொழி எனச் சிறப்பித்துப் போற்றப்படுகிறது.

மொழியில் தெய்வீகம் உள்ளடக்கப்படுவதால்தான் தமிழை பக்தி மொழி என்றனர்.

ஆக, தமிழ்மொழியைப் பேசுகின்றவர்கள்; படிக்கின்றவர்கள் தெய்வீகத்தன்மையை இயல்பாகப் பெறுகின்றனர் எனலாம்.

இதற்குக் காரணம் தமிழ்மொழி பண்பாட்டுடனும் அன்பெனும் உயர்மானிடத்துடனும் தொடர்புபட்டதாக இருப்பதுதான் எனலாம்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே என் பார் திருமூலர்.
இறைவனை தமிழ் செய்தல் என்பது மொழியால் பக்தி செய்தல் என்று பொருள்படும்.

இவ்வாறான உயரிய பக்தி மொழியாகிய தமிழ் மொழி உன்னதமான பண்பாட்டு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

தமிழ் மக்கள் தமிழ்ப் பண்பாட்டை தம் உயிரினும் மேலாகக் கருதினர். அன்பு, இரக்கம், ஈகை, பிறர்க்கு உதவும் பெருந்தன்மை, பிறர் துன்பத்தில் பங்கேற்கும் பாங்கு என மனித வாழ்வின் அத்தனை விழுமியங்களும் தமிழ்ப் பண்பாடாக வகுக்கப்பட்டுள்ளன.

எனவே தமிழ்மொழி, தமிழ் இனம் என்று நாம் பேசும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்ப் பண்பாடு என்பது ஒன்றுபட்டுக்கொள்ளும்.

ஆகையால் தமிழ்ப் பண்பாட்டை எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்தியம்புவதும் தமிழ்ப் பண்பாட்டுடன் வாழப் பழக்குவதும் எங்கள் தலையாய கடமை.

எனினும் சில சந்தர்ப்பங்களில் தமிழ் பண்பாட்டை சைவப் பண்பாடாக கருதி அவற்றை புற நீக்கம் செய்கின்ற துரதிர்ஷ்டமும் நடக்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

உதாரணத்துக்கு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆடிப்பிறப்பு. ஆடிப்பிறப்பை தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவர். ஆடிக்கூழ் காய்ச்சி ஆடிப்பிறப்பைக் கொண்டாடும் நடை முறை பின்பற்றப்பட வேண்டும்.
பாடசாலை மாணவர்களுக்கு இது பற்றி தெரியப்படுத்துவது ஒரு நல்ல நடைமுறையாகும்.

இங்கு ஆடிப்பிறப்பை சைவ சமய விழாவாக சிலர் கருதி அதனைத் தவிர்ப்பதும் உண்டு. இது மிகப்பெரிய பெருந்தவறு. ஆடிப் பிறப்பு பண்டைத் தமிழர்களின் பண்பாட்டியல் வழக்கு என்றுணர்ந்து ஒவ்வொரு பாடசாலைகளிலும் ஆடிப்பிறப்பை கொண்டாடுவது நன்மை தருவ தாகும்.
தமிழர் பண்பாட்டை மதபேதமின்றி பின்பற்றுங்கள் Reviewed by NEWMANNAR on July 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.