அண்மைய செய்திகள்

recent
-

மல்யுத்த வீரரை ஜனாதிபதியாக தெரிவு செய்த மங்கோலியா.....


மங்கோலிய மக்கள் தங்களின் புதிய ஜனாதிபதியாக முன்னாள் மல்யுத்த வீரர் ஒருவரை தேர்தலில் வெற்றிபெற செய்துள்ளனர்.

மங்கோலியாவின் ஜனநாயக கட்சி சார்பில் அந்த நாட்டின் புதிய ஜனாதிபதியா கடந்த 11 ஆம் திகதி Battulga Khaltmaa பதவியேற்றுள்ளார்.

Battulga Khaltmaa மங்கோலியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவரும் சாம்போ வகை தற்காப்பு கலையில் உலக சாம்பியன் பட்டம் பெற்றவருமாவார்.

கடந்த 7-ஆம் திகதி நடைபெற்ற தேர்தில் மங்கோலியா மக்கள் கட்சியின் வேட்பாளர் Miyegombo Enkhbold என்பவரை தோற்கடித்து Khaltmaa மங்கோலியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

மங்கோலிய அரசியல் வரலாற்றில் பெருமளவு போராட்டங்களை எதிர்கொண்டதும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தான். 3 மில்லியன் மக்களைக் கொண்ட மங்கோலியாவில் நடந்து முடிந்த தேர்தலின் முதல் சுற்றில் ஒன்றரை சதவிகிதம் மக்கள் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்று வாக்குச் சீட்டை பதிவு செய்தனர்.

தேர்தலில் போட்டியிட்ட இருவரையும் மங்கோலிய மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை எதிர்ப்பாளர்கள் விடுத்தனர். இதனால் தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 8 சதவிகிதமாக உயர்ந்தது.

மங்கோலிய தேர்தல் விதிமுறைப்படி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றால் 10 விழுக்காடு வாக்குகள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

மல்யுத்த வீரரை ஜனாதிபதியாக தெரிவு செய்த மங்கோலியா..... Reviewed by Author on July 14, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.