அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மேலதிக அரசாங்க அதிபரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பெண்கள்.(படம்)

மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கோரி மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த பாதீக்கப்பட்ட நான்கு குடும்பப்பெண்கள் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் நேற்று திங்கட்கிழமை (3) காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்hய்க்கிழமை (4) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்த நிலையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேலில் கோரிக்கைக்கு அமைவாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.  

குறித்த போராட்டம் குறித்து மேலும் தெரிய வருகையில்,,,


மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டப்பட்டு வருவதாகவும், வீட்டுத்திட்டம் தொடர்பில் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்றால் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடந்து கொள்ளுவதாக கோரியும், தனக்கு நீதியான முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை முன் வைத்து மன்னார் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த மேறி கிறிஸ்டபெல் அன்ரனி (வயது-58) என்ற தாய் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு முன் நேற்று திங்கட்கிழமை காலை 9 மணி முதல் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.

 குறித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மேலும் பாதீக்கப்பட்ட 3 பெண்கள் குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.

பள்ளிமுனை மேற்கு, உப்புக்குளம் வடக்கு, பள்ளிமுனை கிழக்கு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பாதீக்கப்பட்ட பெண்களும்,மேலும் சிலரும் இணைந்து குறித்த ஆர்ப்பட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தாம் வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு இறுதியில் தெரிவு செய்யப்பட்ட பெயர் பட்டியலில் இருந்து தமது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவுப்பட்டியலில் இருந்து தமது பெயர் நீக்கப்பட்டமைக்கான காரணம் இது வரை கூறப்படவில்லை எனவும், நமக்கு நீதி வழங்கக்கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

இதன் போது நேற்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்து உரையாடியதோடு,மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசனுடன் குறித்த பெண்களை அழைத்துச் சென்று உரையாடிய போது பிரதேசச் செயலாளரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத குறித்த பெண்கள் மீண்டும் பிரதேச செயலகத்திற்கு முன் வந்து தமது போராட்டத்தை ஆரம்பித்தனர்.

எனினும் நேற்று திங்கட்கிழமை மாலை வரை பிரதேசச் செயலாளர் அலுவலகத்தில் இருந்த போதும் தங்களிடம் வந்து உரிய முறையில் பேசவில்லை என அந்த பெண்கள் தெரிவித்தனர்.

குறித்த பெண்களின் போராட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு தொடர்ந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையும் போராட்டம் தொடர்ந்தது.

இதன் போது மீண்டும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் சம்பவ இடத்திற்கு வந்து மன்னார் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாசன் மற்றும் காணி அதிகாரி ஆகியோரை அழைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் கலந்துரையாடினர். 

இதன் போது போராட்டத்தை மேற்கொண்ட 4 பெண்களுக்கும் ஏன்? ஏதற்காக வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்ற காரணத்தை தனித்தனியாக தெழிவு படுத்தினர்.

-இதன் போது முதல் முதலில் போராட்டத்தை ஆரம்பித்த மன்னார் எமிழ் நகர் கிராமத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் திருமணம் முடித்த 2 பெண் பிள்ளைக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,2010 ஆம் ஆண்டு அவருடைய மகன் திருமணம் முடித்தமையினால் வீட்டுத்திட்டம் பெற்றுக்கொள்ளுவதற்கு தகுதி அற்றவர்களாக காணப்பட்டனர். மேலும் குறித்த பெண் தனது சொந்த வீட்டை கடந்த 2012 ஆம் ஆண்டு விற்பனை செய்துள்ளார்.

-மேற்குறித்த காரணங்களுக்காகவே மன்னார் எமில் நகர் பகுதியைச் சேர்ந்த மேறி கிறிஸ்டபெல் அன்ரனி (வயது-58) என்பவருக்கு வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை என மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாசன் தெரிவித்தார்.

-மேலும் ஏனைய பெண்களின் பிரச்சினைகள் குறித்து தெழிவாக ஆராயப்பட்டதோடு, உண்மையில் பாதீக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய முறையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார். 

எனினும் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாமைக்கான காரணத்தை மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் வீட்டுத்திட்டத்திற்கு பொருப்பான அதிகாரிகள் உரிய முறையில் தமக்கு தெரியப்படுத்தாது நாளாந்தம் தங்களை அழைய விட்டதாகவும்,தற்போது வரை மன்னார் பிரதேசச் செயலாளர் உயர் அதிகாரி என்ற அகங்காரத்துடன் செயற்படவதாகவும்,மக்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முனையாது அசமந்த போக்குடன் தன்னிச்சையாக செயற்பட்டமையினாலேயே தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்தனர். 

 மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேலின் கோரிக்கைக்கு அமைவாக அந்த பெண்கள் தமது போராட்டத்தை கைவிட்டதோடு,தமக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அந்த பெண்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.














மன்னார் மேலதிக அரசாங்க அதிபரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்ட பெண்கள்.(படம்) Reviewed by NEWMANNAR on July 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.