அண்மைய செய்திகள்

recent
-

ஈழத்தில் நடப்பது பிரமுகர் அரசியல் -நிலாந்தன்!

கோட்பாட்டு விவாதங்களை நடந்தவேண்டிய நாம் முகநூலில் சண்டையிட்டுக் கொண்டு உள்ளோம்.மாற்று தலைமை வேண்டும் என்கிறோம். அது என்ன செய்ய வேண்டும் என நாங்கள் யோசிக்கவில்லை. நாம் நிறுவனமயப்படுத்தபட்டு இருக்கவில்லை உதிரிகளாக இருக்கின்றோம் தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளோமென தெரிவித்துள்ளார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
கலைத்தூது மண்டபத்தில் தற்போது நடைபெற்று வரும் “தடுமாறாத தமிழர்களுக்கு தலைமை ஏற்பது யார் ? ” எனும் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வில் உரையாற்றுகையில் மேலும் அவர் தெரிவிக்கையினில் தமிழர்கள் மாற்றுக்கு வாக்களித்து சிங்களத்திற்கே மாற்றை ஏற்படுத்தி உள்ளீர்கள் அவர்கள் இப்போது மகாநாயக்கரிடம் சரணடைகின்றனர்.
இப்போது பிரமுகர் அரசியல் நடக்கிறது. முன்பள்ளி திறப்பு விழா முதல் அனைத்து விழாவிலும் நிற்கிறார்கள். இப்படியே சென்றால் தேர்தல் என்றால் பிரமுகர் , காசு வேண்டும் இனி சாதி ,மதமும் செல்வாக்கு செலுத்தும். வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் முதலில் இணைவோம். அதன் பிறகு முஸ்லீம் மக்கள் ஆறுதலாக யோசித்து முடிவெடுக்கட்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இரத்தமும் சதையுமாக இருக்க வேண்டும். வடக்கையும் கிழக்கையும் இணைத்து மஹிந்த வீதியை அமைத்து தந்துள்ளார். அதனூடாக சென்று தமிழர்கள் நாம் ஒன்றிணைவோம். மாற்று தேவை என்பதற்கு அப்பால் மாற்று என்ன செய்ய போகின்றது என்பதனை முதலில் தீர்மானிக்க வேண்டும். மூன்று வருடத்தில் ஒரு ஜனவசியம் கொண்ட ஒருவர் வந்துள்ளார். அவரை சுற்றியே மாற்ற உருவாக்க நினைக்கின்றோம்.
இப்போது போராட்டங்கள் அனைத்தும் ஜனாதிபதி சந்திப்பதோடு முடிகிறது. எத்தனை தலைவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளார்கள். அவ்வாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தமிழ் மக்கள் கிளர்ந்து எழுந்து வருவார்கள்.
காந்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டார். அவர் தொண்டர்களை போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை.

கடந்த எட்டாண்டில் எத்தனை தமிழ் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் , எத்தனை பேர் சிறை சென்றுள்ளார்கள் ? வெள்ளை உடுப்பணிந்து மாலையுடன் நிகழ்வுக்கு தான் சென்று வருகின்றனர்.”” விடுதலைக்காக போராடிய இனம் ஒன்று வலி சுமக்காத தலைமையை கொண்ட ஒரே இனம் தமிழினம் மாத்திரமேயெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உரையாற்றிய சிவகரன் வேற வழியின்றி வாக்களித்தமையால் இவர்கள் தாமே தமிழ் தலைமைகள் என நினைக்கின்றார்கள் இந்த சீசன் வியாபாரிகள். இந்த சீசன் வியாபரிகள் எவரும் வலி சுமக்காதவர்கள். இதில் மாற்றம் வேண்டும். ஏற்றம் வேண்டும் என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். நாம் ஒரு செயற்பாட்டு இயக்கமாக மாற வேண்டுமெனவும் மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தை சேர்ந்த சிவகரன்.
ஈழத்தில் நடப்பது பிரமுகர் அரசியல் -நிலாந்தன்! Reviewed by NEWMANNAR on July 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.