அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலைகளின் தடகளத் தொடரில் மடுக்கரை அ.த.க.பா. வரலாற்று அடைவு

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 14 வயது ஆண்­கள் பிரிவு உய­ரம் பாய்­த­லில் மன்­னார் மடுக்­கரை அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சாலை தங்­கப் பதக்­கம் வென்­றது. இந்­தப் பதக்­கமே அந்­தப் பாட­சா­லை­யின் வர­லாற்­றில் பதி­வான முதல் தங்­கப்­ப­தக்­க­மாக அமைந்­தது.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 10ஆவது தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கி­றது.

இரண்­டா­வது நாள் நடை­பெற்ற 14 வயது ஆண்­கள் பிரிவு உய­ரம் பாய்­த­லில் மன்­னார் மடுக்­கரை அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த நா.கோகு­லன் தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­தார்.

இது தொடர்­பாக நா.கோகு­லன் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யில், ‘‘எனது அப்பா தோட்­டத் தொழிலைப் பிர­தான தொழி­லாகச் செய்து வரு­கி­றார். எனது பாட­சா­லை­யில் உரிய வச­தி­கள் ஏதும் இல்லை. நான் உமி­யில் பாய்ந்தே எனது பயிற்­சியை மேற்­கொண்­டேன்.

நான் வல­ய­மட்­டப் போட்­டி­யில் காட்­டிய பெறு­பேற்­றைப் பார்த்த நானாட்­டான் மகா வித்­தி­யா­லய ஆசி­ரி­யர் தேவ­க­ரன், என்னை தனது பாட­சா­லைக்கு அழைத்து 3 மாதங்­க­ளாக எனக்­கான பயிற்­சி­களை வழங்­கி­னார்.

எனது பாட­சா­லைக்கு உய­ரம்­பாய்­த­லில் உரிய வச­தி­கள் செய்து தரப்­ப­டு­மா­யின் தேசி­ய­மட்­டப் போட்­டி­யி­லும் நான் தங்­கப்­ப­தக்­கம் பெறு­வேன்’’ எனத் தெரி­வித்­தார்.
பாடசாலைகளின் தடகளத் தொடரில் மடுக்கரை அ.த.க.பா. வரலாற்று அடைவு Reviewed by NEWMANNAR on July 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.