அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவது எப்படி?


வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து இராணுவத் தளபதி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் பாதுகாப்புச் செயலாளர் கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்றைய தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பிரதான நோக்கம், இலங்கை பாதுகாப்புப் பிரிவின் அனுபவங்களை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து கலந்துரையாடுவதாக அமைந்திருக்கிறது.

இக் கலந்துரையாடலின் போது, வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள பொது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்குத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு கிழக்கில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்களும், சட்டவிரோதச் செயற்பாடுகளும் அதிகரித்துள்ள சூழ்நிலையில், பொது மக்களின் பாதுகாப்பான வாழ்க்கை முறையினை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இக் கலந்துரையாடலில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சரும் கலந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவது எப்படி? Reviewed by Author on July 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.