அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா புதூர் பிரதான வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்....


வவுனியா புதூர் பாலமோட்டையிலிருந்து தவசியகுளம் செல்லும் பிரதான வீதி புனரமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார அமைச்சரினால் தெரிவு செய்யப்பட்ட குறித்த வீதியானது 500 மீட்டர் வரை 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

அத்துடன், வவுனியா சமணங்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பாலமானது வடமாகாண மீன்பிடி போக்குவரத்து கிராம அபிவிருத்தி வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரனால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும், வீதி புனரமைப்பு ஆரம்பித்து வைத்தல், சமணங்குளம் பிரதேசத்தில் பாலம் திறந்து வைப்பு நிகழ்வுகளில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம், வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் மயூரன், அமைச்சின் செயலாளர்கள், அரச,அரசசார்பற்ற உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

வவுனியா புதூர் பிரதான வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்.... Reviewed by Author on July 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.