அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வைத்தியசாலை சந்தியில் கடையொன்று உடைத்து களவாடப்பட்டுள்ளது.....(Photos)

மன்னார் வைத்தியசாலைச்சந்தியில் உள்ள கடைகளில் ஒன்றான 

பல்பொருள் வாணிபம் NEW FAMILY COLLECTION  கடையினை உடைத்து பணமும் இதரபொருட்களும் களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த கடையின் பிற்பகுதியில் உள்ள  சுவரினால் ஏறி மேற்புற கூரை ஓடுகளை களற்றி  உள்புற சீற்றினை உடைத்து உள்ளே இறங்கிய நபர் சுமார் 74125 ரூபாவினையும் தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளையும் களவாடியதுடன் அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமெராவினையும்   65000 ரூபா பெறுமதியான வில்லிங் மிசின்  உடைத்ததுடன் இதரபொருட்களையும் சிதறடித்து சென்றுள்ளனர்.
(திருடப்பட்ட பொருட்களின் முழுமையான பெறுமதி  கணிக்க முடியவில்லை)

இக்களவுச்சம்பவம் 25-07-2017 அதிகாலை 3-00 மணியளவில் நடைபெற்றுளளது அதிகாலை 8-30 மணியளவில் கடையினைத்திறந்த  உரிமையாளர்  உள்ளே கடை உடைக்கப்பட்டு களவாடப்பட்டதினை கண்டு  அதிர்ச்சியடைந்தவராய் பொலிஸ்சில்  முறைப்பாடு செய்துள்ளார் .

இரண்டு தடவைகள்  சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்  மோப்பநாயின் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
மின்சாராம் தடைப்பட்டிருந்த நேரமும் மிகவும் பரிச்சையமான திருடனாகவும் வெளிமாவட்டங்களில் இருந்து  வந்து இப்படியான திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள் என மக்கள் சந்தேகம் கொள்கின்றனர். 

 மன்னாரில் மோட்டார்சைக்கிள்கள் திருடப்பட்ட சம்பவமும் அண்மையில் நடைபெற்றுள்ளது எனவே மன்னார் மக்கள் மிகவும் அவதானமாக தமது உடமைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
 மன்னார் வைத்தியசாலை சந்தியில் கடையொன்று உடைத்து களவாடப்பட்டுள்ளது.....(Photos) Reviewed by Author on July 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.