அண்மைய செய்திகள்

recent
-

தள்ளாடும் வயதிலும் மாவீரரான தனது மகனை தேடும் தாய்!-Video


விடுதலை போராட்டத்தில் தனது மூன்று பிள்ளைகளை இழந்த கணகம்மா, தனது மூத்த மகனான கரும்புலி கண்ணாளனின் கல்லறையை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில் தேடியுள்ளார்.

தனது மகன் விடுதலைப் போராட்ட காலத்தில் கரும்புலி படைப்பிரிவில் களமுனையில் வைத்து வீரச்சாவை தழுவினார்.

விடுதலைப் புலிகளினால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகை நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு விளக்கேற்றிவந்தாக தெரிவித்துள்ளார்.

கண்டலடி ஆண்டாங்குளம் கோட்ட மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் துப்பரவு பணிக்காக சுமார் 70 வயது நிரம்பிய கணகம்மா வயது முதிர்ந்த நிலையிலும் தனது மகனின் நினைவேந்தல் கல்லறை வைக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு படையினரால் இடித்து அழிக்கப்பட்டு எஞ்சிய கல்லறைகள் வெளிக்கிளம்பும் போது ஒவ்வொன்றாக பார்த்து தனது மகன் மற்றும் தனது ஏனைய உறவுகளின் பிள்ளைகளின் கல்லறைகள் இருக்கின்றனவா என தேடியுள்ளார்.

கரும்புலி கண்ணாளன் மட்டுமின்றி ஒரு பெண், இரு ஆண்கள் என மொத்தமாக மூன்று பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பியதாக தெரிவித்தார்.

போராட்டத்திற்கு சென்ற அனைவரும் வீரச்சாவை தழுவிக் கொண்டுள்ளனர்.



தனது கணவரும் போராட்ட காலத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதில் உயிரிழந்ததாகவும் தான் தனிமையில் தற்போது வசித்து வருவதாகவும் கரும்புலி கண்ணாளனின் தாயார் கணகம்மா தெரிவித்துள்ளார்.

தனது மாவீரர் ஆகிய பிள்ளைகள் சாகவில்லை சரித்திரம் ஆகிவிட்டார்கள் என கண்ணீர் மல்க வீரத்தாயான கணகம்மாவின் குரல் கனகனத்தது.



வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் எப்போது இவ்வாறு புதுப்பொலிவு பெற்று மீண்டும் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்வதென இருந்த என்னைப் போன்ற மாவீரர்களின் தாயார்கள் தற்போது இந்த பகுதியில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

எதிர் காலத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை எமது மாவீர பிள்ளைகளை நினைத்து நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அத்துடன், எமது அனைத்து தமிழ் உறவுகளும் இவ்வாறான செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் கணகம்மா குறிப்பிட்டுள்ளார்.

கணகம்மாவைப் போன்று இன்று தனது உறவுகளின் சிதைந்து போன கல்லறைகளைப் பார்க்க மாவீரர்களின் குடும்பங்கள் குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், சிரமதானத்தின் போது கண்டெக்கப்பட்ட சுமார் 45 இக்கு மேற்பட்ட மாவீரர் கல்லறைகளை பார்வையிட்டதுடன் காடுகள் நிறைந்த புதர்கள் வழியாகவும் சென்று கல்லறைககளைத் தேடியுள்ளனர்.


தள்ளாடும் வயதிலும் மாவீரரான தனது மகனை தேடும் தாய்!-Video Reviewed by NEWMANNAR on July 04, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.